கதம்பம் சிறுகதை போட்டியின் முடிவுகள் அறிவிக்கும் தேதி
‘ கதம்பம் சிறுகதை போட்டி’ வலஞ்சுழி இணையதளம் நடத்தும் முதல் சிறுகதை போட்டியாகும், முதல் போட்டியிலேயே இத்தனை கதைகள் பங்கேற்றத்தில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, போட்டிக்கு மொத்தமாக 54 சிறுகதைகள் வந்துள்ளன, எழுத்தாளர்கள் மின்னஞ்சல் வழியாக எங்களுக்கு அனுப்பிய சிறுகதைகளை தளத்தில் பதிப்பித்துள்ளோம் (10.5.2022 வரை அனுப்பிய கதைகள் மட்டுமே தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது, அறிவிக்கப்பட்ட கடைசி தேதி முடிந்த பிறகு அனுப்பிய கதைகளை போட்டிக்கு எடுத்து கொள்ளவில்லை) . ஒருவேளை கடைசி தேதிக்கு முன்னரே நீங்கள் எங்களுக்கு மின்னஞ்சலில் கதை அனுப்பியும் உங்களின் கதை தளத்தில் பதிக்கப்படாமல் இருந்தால் மின்னஞ்சலில் தகவல் அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம்.
‘கதம்பம்’ போட்டியின் முடிவுகள் அறிவுக்கும் தேதி : 10.6.2022
போட்டி முடிவுகள் வலஞ்சுழி இணையதளத்தில் மட்டுமே அறிவிக்கப்படும், போட்டியில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து வலஞ்சுழியோடு இணைந்திருந்து வலஞ்சுழியில் அடுத்தடுத்து நடக்க போகும் போட்டிகளில் பங்கேற்று மேலும் வலஞ்சுழிக்கு ஆதரவு தாருங்கள்.
4 comments