‘ஐந்து நண்பர்கள் ஆசையின் அழிவுகள்’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு சின்னா
ஐந்து நண்பர்கள் ஆசையின் அழிவுகள்
கோட்டூர் கிராமத்தில் வசித்து வந்த ராஜா, ரவி, சேகர், குணா பாலு மிக நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் வயது 15…….
இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப எதிலும் துணிச்சலோடு செய்து பார்க்கும் ஆசை கொண்டவர்கள் இவர்கள். ஓர் இரவு இந்த நண்பர்கள் ஐவரும் ரோட்டில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி கொண்டு சென்றனர். எதிர்பாராத விதமாக ஓர் காவலரின் வாகனத்தில் மோதி விட்டனர். இந்த ஐவரும் போதையில் நிதானம் இன்றி இருந்தனர். நல்ல வேலை, அந்த காவலருக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை, இருந்தாலும், அவர்கள் மீது அந்த காவலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் கைது செய்து சிறையில் அடைத்தார்..
மறுநாள் காலை ஐவரில் ராஜா அப்பா உதவி ஆய்வாளராக பக்கத்து ஊரில் பணிபுரிந்து வந்தார். அப்போது ராஜா நிலை அறிந்து காவல் நிலையம் சென்று அதிகாரியிடம் மன்னிப்பு கோரி தன் மகன் ராஜாவை வெளி விடுமாறு பணிந்து கூறினார். அந்த சமயம் காவல் அதிகாரி ராஜா அப்பாவின் நண்பர் என்பதால் இருவரும் காவலர்கள் என்பதால் உதவி செய்யும் வகையில் அந்த ஐவரையும் வெளியில் விட்டுவிட்டார். ராஜா அப்பா இந்த ஐவருக்கும் அறிவுரை வழங்கினார். பின்பு அவரவர் தன் வேலையைப் பார்த்து வந்ததனர். இந்நிலையில் இவர்கள் ஓர் சுற்றுலா செல்ல போட்டு வைத்த திட்டம் திடீரென நின்றதால் உள்ளூரில் ஓர் நாள் வலம் வருவோம் என திட்டம் போட்டனர். அப்போது ரவி தன் கால் சரியில்லை என தெரிந்தும் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டான்.
இந்த ஐவரும் ஊர் சுற்றும் போது பணை மரத்தடி கள் குடிக்கலாம் என எண்ணினர். அப்போது கால் சரியில்லாத ரவி கள்ளுக்கு ஆசைபட்டு மரம் ஏறி திருட்டு கள் பறிக்க, அங்கே எதார்த்தமாக உரிமையாளர்கள் வர இவன் மாட்டிகொண்டான், மரத்தில் இருந்தும் கீழே விழுந்து கால் உடைய அவன் நிலை மிகவும் பரிதாபமாய் ஆனது. அந்த உரிமையாளர் அவனை அவன் பெற்றோர் வசம் அழைத்து சென்று தவறான பாதைக்கு இவன் ஆளாகிறான். ஆதலால் உங்கள் மகனை கண்டிக்குமாறும் புத்திமதி கூறுமாறும் ஆலோசனை வழங்கினார். அவரும் அத்தொழிலை விட்டார். பின்பு ரவி தான் செய்த தவறை உணர்ந்து தீய பழக்கம் அழிவைதான் தரும் என புரிந்து கொண்டான்.
இவர்கள் மேலும் விளையாட்டு தனமாய் ஓர் பெரிய விபரீதத்தில் மாட்டிக் கொண்டார்கள். அது என்னவென்றால் சேகர் தன் குடும்ப நிகழ்ச்சிக்கு தன் நண்பர்களை அழைத்து வந்து மகிழ்ச்சியாய் கொண்டாடிய தருணத்தில், குணா நிகழ்ச்சியில் வந்த விருந்தினர் ஒருவர் பர்ஸை திருடினான். அதை கண்டரிந்த சேகர், அம்மா தீய ஒழுக்கம் கொண்ட நண்பர்கள் பழக்கம் உன் அழிவுக்கு ஆரம்பம் என்று கோபமாக கூறினார். இதனால் உண்மை தெரிந்த குணா தன் பழக்கத்தால் நண்பர் அம்மா பகையாளி ஆக்கி கொண்டதை நினைத்து வருந்தி இனி திருட கூடாது என மணம் மாறினான்.
இந்த நேரத்தில் பள்ளி விடுமுறை முடிந்து பள்ளி ஆரம்ப நாள் வந்தது. இருப்பினும் மகிழ்ச்சியாக நண்பர்கள் ஐவரும் பள்ளிக்கு செல்லாமல் சினிமா சென்று வந்தனர். இதில் பாலு சினிமா டிக்கெட் block ல் வாங்கி கொண்டு வந்து தன் நண்பர்களையும் அழைத்து சென்று படம் பார்க்கும் பழக்கம் வழக்கமாக இருந்தது. ஓர் நாள் block ல் டிக்கெட் வாங்கி வரும் வழியில் காவலரிடம் பாலுவும் மாட்டிக் கொண்டான். தப்பை கூறி மன்னிப்பு கேட்டான். வயதில் சிறுவன் என்பதால் அந்த காவலர் அவனை மன்னித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். இதில் எந்த தவறும் செய்யாத சேகர் தன் நண்பர்கள் செய்த தவறில் தனக்கும் அவப்பெயர் வந்ததை உணர்ந்து தன் நண்பர்கள் ஒவ்வொருரிடமும் அவரவர் தீய பழக்கங்களை எடுத்துரைத்தான்.
இவைகளுக்கு நானும் துணை நின்றதை நினைத்து வருந்துகிறேன் என்றான். சேகர் தன் நண்பர் ஒவ்வொருவருக்கும் உள்ள தீய பழக்கம் கண்டறிந்து கலந்து உரையாடினான். இனி நாம் செய்வது அறியாது செயல்களை செய்தால் ஆசையின் அழிவு நாம் நண்பர்கள் ஆகிய ஐவருக்கும் என்றான். இதனால் ராஜா மது அருந்துவதை நிறுத்திவிட்டான். ரவி திருட்டு மரம் ஏறி கள் பறிப்பதை விட்டதோடு தன் காலில் நிலை உணர்ந்து நல்ல செயல்களை செய்ய பழகி கொண்டான், குணா திருட்டின் பாதை குருட்டு என உணர்ந்து, திருடினால் அவப்பெயர் என புரிந்து மனம் மாறினான், பின் பாலு நேர்மையே வெல்லும் என உணர்ந்து block ல் டிக்கெட் வாங்கி மகிழ்வதை தவிர்த்தான்,
இதனை எடுத்துரைத்த சேகர் தன் நிலை என்னவென உணர்ந்து தன் நண்பர்களால் ஏற்பட்ட அவபெயர் கண்டு வருந்தினான். சேகர் கூறியதை ஏற்றுக்கொண்ட நண்பர்கள் ஐவரும் சேர்ந்து நல்ல வழிகளில் ஈடுபட்டு பாராட்டுக்களை வாங்கி மகிழ்ந்தனர். மேலும் இவர்கள் ஐவரும் பள்ளிக்கு நல்ல மாணவர்களாகவும், பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாகவும், சமுதாயத்திற்கு பல நன்மைகளை செய்து கொண்டும் வாழ்ந்து வருகின்றனர்.
மரம் வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல், சுகாதாரப் பண்புகளை வளர்த்தல், கல்வி அறிவு விமர்சித்தல் என பல நற்செயல்களை செய்து வந்தனர்.
நல்லதே நினை.
நல்லதே செய்.
நன்றாய் வாழு.
நன்றி வணக்கம்.
11 comments