‘ மாற்றம்’ என்ற சிறுகதையை எழுதியவர் சி.சினேகா
மாற்றம்
அன்று இரவு மணி ஓன்பது கார் மேகங்கள் சூழ அருகில் இருப்பவர்கள் பேசுவது கூட காதுகளில் கேட்காத அளவிற்கு பயங்கரமான இடி சத்தத்துடன் கூடீய படபட வென மிகுந்த மழை பெய்து கொண்டு இருந்தது. வயல்களில் உள்ள வரப்புகள் முழ்கும் அளவிற்கு வெள்ள நிர் ஓடி கொண்டு இருந்தது. இரவு முழ்வதும் அதிக மழை பெய்து கொண்டு இருந்ததால் அக்கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் கதவுகளை முடிகொண்டு விட்டிற்குள்ளே இருந்தனர். மழை மிகுதியாக பெய்து வந்தததாள் வீட்டிற்குள் இருப்பவருக்கு கூட உறக்கம் வரவில்லை, ஒரு அச்சம் வெளியில் உள்ள ஆடுகளையும் மாடுகளையும் நினைத்து. விடியலை எதிற்பார்த்து காத்துகொண்டு இருந்தனர். ஆட்டு குட்டிகள் தன் தாய்ஆட்டு குட்டிகளின் அனைவில் நின்று கொண்டு “மேமே” என்று கத்திகொண்டு இருந்ததது. பசு மாடுகள் தன் கன்றுகுட்டியை நினைத்து வருத்ததுடன் கத்தியது.
தாய் கோழி தன் குஞ்சுகளை அனைத்து போர்த்திகொண்டது. மழையின் அளவு குறைய தொடங்கியது.அமைதியாக பொழுது விடிய தொடங்கியது. அந்த விடியல் அவர்கள் வாழ்வில் புதிய மாற்றங்களை ஏற்படுத்ததும் என்பதை அவர்கள் உணரவில்லை.அக்கிராமதிற்க்கு மிகுந்த கட்டுபாடுகள் இருந்தது. அங்கு உள்ளவர்கள் சாதிசமய வேறுபாடு கருதினர். பெண்கள் விட்டை விட்டு வெளியே செல்ல கூடாது, குணிந்த தலை நிமிரகூடாது போன்ற கட்டுபாடுகளும் இருந்தது. அக்கிராமத்தில் நான்கு அடி உயரமான கோவில் இருந்தது அக்கோயிலுக்குள் பெண்கள் யாரும் செல்லகூடாது என்ற விதிமுறையும் இருந்தது. அன்று காலை மணி ஆறு பூசாரி கோவிலுக்கு செல்லுகிறார்.
கதவினுடைய பூட்டு உடைக்க பட்டு இருந்தது அக்கதவுகளில் கைவைத்து மெல்ல தள்ளுகிறார் அவருக்கு ஒரு அதிற்ச்சி காத்துகொண்டு இருந்தது. உள்ளே பசிக்கு பஞ்சம் பிழைக்கும் சாலை ஓர மக்கள் ஏழு எட்டு பேர் இருந்தனர்.
அதில் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளும் இருந்தனர். அதை பார்த்துவிட்டு கையில் இருந்த சாவியை கிழே பொட்டுவிட்டு ஊர் பெரியவர்களிடம் பதட்டத்துடன் நடந்ததை கூறுகிறார். ஊர் முழுக்க செய்தி பரவி பதட்டம் அடைந்து கோவில் வாசலில் கூடுகின்றது.
கோவிலில் உள்ளவர்களிடம் யார் உங்களை அழைத்து வந்ததது என்று ஊர் பெரியவர்கள் வினவ, பதில் கூற மறுக்கின்றனர் அங்கு உள்ளவர்கள். கடும் கோபத்துடன் அவர்களை வெளியே செல்ல கூறினார்கள். அவர்களும் வெளியே செல்ல தயாரான நிலையில் நில்லுங்கள் என்று ஒரு பெண்ணின் குரல் அனைவரின் காதுகளிலும் ஒலித்தது அனைவரும் திரும்பிப் பார்த்தனர் கோவிலின் வாசலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். கோவிலின் முதல் படியில் மழை நீரிலிருந்து தன்னுடைய பாதங்களை தூக்கி வைக்கிறாள். முத்துக்கள் பொருந்திய தன் கொலுசுகளில் இருந்து மழை நீர் சொட்டுகிறது காய்ந்த அப்படிகளில் அவளுடைய பாதங்களின் தடம் பதிகிறது. நில் பெண்கள் உள்ளே வரக்கூடாது என்று ஊர் தலைவர் கூற. அதைப் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த படிகளில் ஏறி கோயிலுக்குள் நுழைகிறாள். “நான் தான் இவர்களை இங்கு அழைத்து வந்தவள்” என்று கூறினாள் வாக்குவாதம் முற்ற தொடங்கியது. இதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும் என்று கூற நீரில் நனைந்த தன் சிகப்புநிற துப்பட்டாவில் இருந்து தண்ணீர் கோயிலுக்குள் சொட்டு சொட்டாக சிந்த கடைக்கண்ணால் அவர்களை நோக்க அமைதி அடைந்தனர் அங்குள்ளவர்கள். “மிகுந்த மழையின் காரணமாக அவர்களை அழைத்து வந்ததாகவும் அவர்கள் இனிமேல் இங்கு தான் இருப்பார்கள் கடவுளாகிய இக்கல்லிற்கு ஊற்றும் பாலை குழந்தைக்குக் கொடுங்கள் உங்கள் வீட்டில் மிச்சமான சாப்பாடுகளை அவர்களுக்கு எடுத்து வந்து கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நான் இவ்விடத்தை விட்டு செல்கிறேன்” என்று ஆவேசத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். அக்குழந்தையின் முகத்தைப் பார்த்து அனுப்ப மனதில்லாமல் அவர்களும் தடுமாற்றம் அடைந்தனர். கிழக்கு திசையில் சூரியன் முழுமையாக உதித்தது. மணி பதினொன்று அவர்களை அங்கேயே விட்டுவிட்டு கூட்டம் கலைந்து சென்றது. ஊர்தலைவரின் மனைவி நனைந்த விறகுகளை வைத்து அடுப்பை பற்ற வைக்கிறாள். அங்கு நடந்த சம்பவம் அனைவரின் மனதிலும் ஓடிக் கொண்டே இருந்தது. உலை கொதிக்க பானையில் இருந்து அரிசியை எடுக்கும் பொழுது அவர் மனதில் ஒரு தடுமாற்றம் எப்பொழுதும் போடும் அரிசியை விட இரண்டு கைப்பிடி அதிகமாக போடுகிறாள்.மீதமான சாதத்தை எடுத்து கொண்டு கோயிலுக்கு செல்ல வேண்டுமென்று ஆசையாகவும் இருக்கிறது அதே சமயம் சென்றாள் கிடைக்கும் தண்டனையை நினைத்து ஒரு பக்கம் பயமாகவும் இருக்கிறது.
அவளுக்கு குழந்தை இல்லை கோயிவிலிருந்த குழந்தையின் முகத்தை நினைத்து சாதத்தை எடுத்து கொண்டு கோயிலுக்குள் செல்கிறாள் தயக்கத்துடன் அப்படிகளில் காலை எடுத்து வைக்கிறாள் உள்ளே சென்று சாதத்தை கொடுக்கிறாள். அடுத்த ஒரு சில நொடிகளில் ஊரில் உள்ள மற்ற பெண்களும் தைரித்துடன் அவ்வாறே செய்கின்றனர். நேற்று அப்பெண் உடைத்தது அக்கோயிலின் பூட்டை மட்டுமல்ல ஊரில் உள்ள பெண்களின் மனதின் பயம் என்னும் பூட்டையும்தான். அதிக விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் நிறைந்த இந்த கிராமத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இங்கு மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டால் சிறிய கிராமங்கள் தானாக மாறிவிடும் என்ற நம்பிக்கையில்தான். நான்கு நாட்களுக்குப் பிறகு அவர்களைக் காண கோயிலுக்குச் செல்கிறாள் அப்பெண். அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை நினைத்து மன மகிழ்ச்சியுடன் திரும்புகிறாள்.அவள் சமுதாய மாற்றத்தை விரும்பும் ஒரு சராசரிப் பெண். “அக்கா உங்க பெயர் என்ன?” என்று ஒரு குழந்தை வினவ இதல்களின் சிறிய புன்னகையுடன் ருத்ரா என்று கூறிவிட்டு செல்கிறாள்.
நிறைவு பெற்றது.
1 comment