‘தெய்வத்தாய்’ என்ற சிறுகதையை எழுதியவர் சியாமளா வெங்கட் ராமன்.
தெய்வத்தாய்
அன்று சுகன்யாவிற்கு 40வது கல்யாண நாள். உடனே தன் சினேகிதி பத்மாவின் பெண் ஜனனிக்கு கல்யாண நாள் என்பது நினைவிற்கு வந்தது. உடனே பத்மாவின் ஆன்லைனுக்கு போன் செய்தாள் ஆனால் ரிங் போய்க்கொண்டே இருந்தது யாரும் எடுக்கவில்லை .சரி நாள் கிழமை என்பதால் கோவிலுக்கு போய் இருப்பாள் என்று நினைத்தாள்.
மாலையில் சுகன்யாவின் போனுக்கு பத்மாவிடம் இருந்து போன் கால் வந்தது உடனே காலையில் ஆன்லைனுக்கு போன் செய்ததையும் ஏன் யாரும் எடுக்கவில்லை என்றும் கேட்டார் அதற்கு பத்மா நாங்கள் லேண்ட்லைன் ஐ சரண்டர் செய்து விட்டோம் நாளைக்கு நாங்கள் வீட்டை காலி செய்கிறோம் எங்கள் வீட்டை ஒரு வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டு விட்டு வேறு ஊருக்கு போகிறோம் ஆனால் எந்த ஊர் என்று எனக்கு தெரியாது இனி உனக்கு என்னால் போன் செய்ய முடியாது இந்த நம்பர் இனி வேலை செய்யாது என கூறினாள். என்ன காரணம் என சுகன்யா கேட்க ஜனனி வாடகை தாய் மூலம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள் அந்த தாய் என்ற ஊரில் இருக்கிறார் இங்கேயே நாங்கள் இருந்தால் அந்த வாடகை தாய் தன் குழந்தையை பாசத்தின் காரணமாக பார்க்க வரலாம் அதுவே பிற்காலத்தில் அந்த குழந்தையிடம் உரிமை கொண்டாட ஆரம்பிப்பாள் மேலும் உறவினர்களுக்கு தெரிய வர இது மிகப்பெரிய விஷயமாக என் மகளுக்கு நிம்மதி இல்லாமல் போய்விடும் அவள் மலடி என்ற பட்டத்தை சுமக்க விரும்பவில்லை எனவே தான் இந்த ஏற்பாடு குழந்தை பிறந்து 15 நாட்கள்தான் ஆகிறது எனவே டாக்டரின் ஆலோசனைப்படி நாங்கள் எடுத்துச் செல்கிறோம் என்று கூறினாள். இதைக்கேட்டதும் ஒரு பக்கம் சந்தோஷமாகவும் ஒரு பக்கம் தன் சினேகிதி கண்காணாத இடத்திற்கு போகுது வருத்தமாகவும் இருந்தது எப்படி வாடகைத் தாயை கண்டுபிடித்தீர்கள் எனக் கேட்டதும் என்று கேட்டதற்கு அதைப் பற்றிய விவரங்களை விவரமாகக் கூறினாள். அவள் போன் பேசி முடித்ததும் அப்படியே ஆயாசமாக சோபாவில் கண் மூடி உட்கார்ந்து பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை அசை போட ஆரம்பித்தாள்
ஜனனியின் கல்யாணம் கும்பகோணத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது கும்பகோணம் ஹெட் போஸ்ட் ஆபீஸில் சுகன்யாவும் பத்மாவும் ஒன்றாக கிளார்க்காக வேலை செய்தார்கள் சுகன்யாவிற்கு ஒரே பிள்ளை பத்மாவிற்கு ஜனனி மட்டுமே!ஜனனி நன்றாக படித்தாள். அவளுக்கு ரயில்வேயில் இன்ஜினியர் மாப்பிள்ளை வர ஜனனி படித்து முடித்ததும் திருமணம் செய்துவிட்டாள்.பத்மா!
சென்னையில் புரசைவாக்கத்தில் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் இருந்தார்கள் சொந்த வீடு எனவே ஜனனியும் அவள் கணவன் சந்தோஷம் அவர்களுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார்கள் திடீரென்று சந்தோஷுக்கு கோயம்புத்தூர் மா ற்றல்கிடைத்தது ஜனனியும் சந்தோஷும் கோயம்புத்தூர் தனிக்குடித்தனம் சென்றார்கள் சாய்பாபா காலனியில் ஒரு அப்பார்ட்மெண்டில் அவர்கள் குடியேறினார்கள். இப்படியே சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால்………………
தலைவலி என்று ஒரு நாள் மாலையில்.ஜனனிட கூறினாள் மறுநாள் லேசான ஜுரம் சாதாரண ஜுரம் தானே என்று பாராசிட்டமால் போட்டுக்கொண்டாள் அதில் ஜுரம் குறையவில்லை அடுத்த நாள் 103 டிகிரிக்கு சென்றது உடன் தன் அம்மா அப்பாவிற்கு கூற அவள் அம்மா உடனே கோயம்புத்தூர் வேலைக்கு லீவு போட்டு விட்டு வந்தாள். நாளுக்கு நாள் ஜனனிக்கு ஜுரம் அதிகமாகி கொண்டே இருந்தது ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள் அங்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது அதன் ரிசல்ட் மூலம் இரண்டு சிறுநீரகங்களும் வேலை செய்யவில்லை என்று தெரிவித்தார்கள் உடனடியாக டயாலிசிஸ் பண்ண ஆரம்பித்தார்கள்.. கணனிக்கு சிறு வயது என்பதால் மாற்று சிறுநீரகம் வைப்பது சிறந்தது என டாக்டர்கள் கூறினார்கள் பத்மா தன் மகளுக்கு தன் சிறுநீரகத்தை தர ஒப்புக் கொண்டாள் உடன் கோயம்புத்தூரில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையில் பத்மாவிடம் இருந்து சிறுநீரகம் எடுத்தஜனனிக்கு பொருத்தப்பட்டது. ஜனனிக்கு சிறுநீரகம் வேலை செய்ய ஆரம்பித்தது பத்மாவின் உடல்நிலையும் தேறியது பத்மா மறுபடியும் வேலைக்கு வர ஆரம்பித்தாள், ஐந்து வருடங்கள் உருண்டோடியது மறுபடி ஜனனியின் உடல்நிலை சரியில்லாமல் போக தொடங்கியது அவளை பரிசோதனை செய்ததில் பொருத்தப்பட்ட சிறுநீரகம் பழுதடைந்து விட்டது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள் மறுபடியும் புது சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று கூறிவிட்டனர்.
அவளுடைய உடல் வாகுக்கு ஏற்ற சிறுநீரகம் கிடைப்பது அரிது என டாக்டர்கள் கைவிரித்து விட்டனர் அவள் உயிர்பிழைக்க உடனடி மாற்று சிறுநீரகம் வைத்து வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அவருடைய கணவரின் சிறுநீரகம் பொருத்தமாக இருக்க உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது ஜனனிக்கு மறுபிறப்பு என்றே கூறலாம்!!!!!!!!!!
இதை நினைத்து அப்படியே யோசனையில் சுகன்யா ஆழ்ந்திருந்தாள் இருட்டு இது கூட தெரியாமல் விளக்கு கூட போடாமல் உட்கார்ந்திருக்க அவள் கணவன் கோபால் வீட்டிற்குள் வந்து விளக்கைப் போட்டு எந்தக் கோட்டையைப் பிடிக்க கண் மூடி உட்கார்ந்து இருக்க என கேட்க பத்மா போன் செய்த விவரத்தை கூற கோபால் என்ன வாடகைத்தாய் இதுவரை இதுபோன்று கேள்விப்பட்டதே இல்லையே அதைப் பற்றி சொல் எனக் கூறி பத்மாவின் அருகில் அமர்ந்தான்..
ஜனனிக்கு இரண்டாவது முறையாக ஆப்பரேஷன் செய்து உடல்நிலை தேறியது பழையபடி சுறுசுறுப்பாக வேலைகள் செய்ய ஆரம்பித்தாள் ஆனால் அவள் மனதில் ஒரு வெறுமை தான் தாய்மை அடைய தகுதியில்லை என்ற குற்ற உணர்ச்சி தன் உயிரை காத்த தன் கணவனுக்கு தன்னால் ஒரு மழலைச் செல்வத்தை கொடுக்க முடியவில்லையே என வருந்த தொடங்கினாள். தனக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் எம் கலந்து ஆலோசித்து அவரின் ஆலோசனைப்படி அவளுடைய கணவனின் உயிரணுவை எடுத்து வேறு ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து குழந்தை பெற முடியும் என்று அறிந்தால் முதலில் அதற்கு உடன்படாத கணவனை சம்மதிக்க வைத்தாள் ஒரு ஏழைப் பெண்ணை தேர்ந்தெடுத்து அவளுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து பத்துமாதம் தங்கள் கண்காணிப்பில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அவளை பராமரிக்கவும் குழந்தை நல்லபடியாக பிறந்ததும் அவனுக்கு பேசியபடி கணிசமான தொகையைக் கொடுத்து அவள் அந்த குழந்தையை அவர்களுக்கு பூரண சம்மதத்துடன் கொடுத்து விட்டதாகவும் எந்த உரிமையும் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றதாகவும் பத்மா கூறினாள் என்று சுகன்யா கூறி முடித்தாள்
அதைக்கேட்ட கோபால் பிரசவம் என்பதே பெண்களுக்கு மறுபிறவி என்பார்கள் ஏழ்மையின் காரணமாக அந்தப் பெண் பத்துமாதம் சுமந்து குழந்தை பெற்றதும் அந்தக் குழந்தை பிறந்தவுடன் வேறு ஒருவருக்கு கொடுத்ததும் இனி அக்குழந்தையை பார்க்காமல் இருப்பதும் எவ்வளவு பெரியதியாகம்.!! இந்த தியாகத்திற்கு முன் பணம் ஒன்றும் பெரியது அல்ல ஆனால் ஒரு உயிரை பெற்றுத் தருவது என்பது உலகிலேயே மிகப் பெரிய தியாகம். இப்படிப்பட்ட யாகம் செய்பவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைத்துள்ளது என்று கூறிவிட்டு சரி சரி வா கோவிலுக்கு சென்று ஊர் பெயர் தெரியாத அந்த வாடகைத்தாய் இல்லை இல்லை அந்த தெய்வத்தாய் பல்லாண்டு நலமுடன் வாழ கடவுளை வேண்டிக் கொண்டு வருவோம் எனக்கூறி தன் மனைவியுடன் கோவிலுக்கு செல்ல கிளம்பினான்
1 comment