‘தலையெழுத்தை மாற்றிய ஜாமீன் கையெழுத்து’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு பாரதிராஜன் என்கிற ரங்கராஜன்.
தலையெழுத்தை மாற்றிய ஜாமீன் கையெழுத்து
மனோஜ் ஒரு அரசு ஊழியர். அளவானகுடும்பம். மனோஜ்.மனோஜ் மனைவி ஒரு தனியார் கம்பனியில் பணி புரிந்து வந்தார். ஒரே மகள் 4 ஆம் வகுப்பு பயிலும் மாணவி. மனோஜ் அரசு ஊழியர் என்பதால் அலுவலகத்தில் அனுமதி பெற்று பத்திரிகைகளில் கதை , கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். அதற்கு கிடைக்கும் தொகையை அனாதை இல்லத்துக்கு வழங்குவார்.
கணவன், மனைவி சம்பளத்தில் குடித்தனம் நடத்தி அதில் கொஞ்சம் சேமிப்பு செய்து வந்தார் மனோஜ். அலுவலகத்தில் மனோஜ் நண்பர் களில் ஒருவன் சரவணன்.சரவணன் தம்பிக்கு கல்லூரியில் பட்டப் படிப்பு படிக்க எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை .
சரவணன் படித்தது சென்னை மாநிலக் கல்லூரி, அங்கு படிக்க சரவணன் தம்பி பிரசாத்க்கு பிடிக்க வில்லை பச்சையப்பன் கல்லூரியில் சீட் வேண்டும் என்று எதிர்பார்த்தான்.மனோஜ் பச்சையப்பன் கல்லூரி மாணவன் சரவணன் மனோஜிடம் பச்சையப்பன் கல்லூரியில் சீட் வாங்கி தரச் சொல்ல, முதலில் மறுத்த மனோஜ் பின்னர் சரவணன் குடும்பம் சூழ் நிலை கருதி சீட் வாங்கி கொடுத்து , மேலும் புத்தகங்கள்,புத்தக வங்கி மூலம் வாங்கி கொடுத்தான் மூன்று வருட கல்லூரி கல்வி கட்டணம் சரவணனுக்கு செலவு இல்லாமல் தெரிந்த ஒரு நண்பர் மூலம் ஏற்பாடு செய்தார் மனோஜ்.
எல்லாம் சரியாக ப்போய் கொண்டு இருந்தது.அந்த சமயத்தில் சரவணன் ஒரு தனியார் சீட்டு கம்பெனியில் சேர்ந்து சீட்டு பணம் எடுக்க ஜாமீன் கையெழுத்து கேட்க , மனோஜ் மறுத்து விட்டார்.ஆனால் சரவணன் தொடர்ந்த வற்புறுத்தல் , சரவணன் சகோதரி திருமணம் என்பதால் சரவணணிடம் மாதாமாதம் கண்டிப்பாக கட்ட வேண்டும் என்று சொல்லி ஜாமீன் கையெழுத்து ப்போட்டார் மனோஜ் .சீட்டு எடுத்த பிறகு 4 மாதம் தொடர்ந்து கட்டி வந்து பின்னர் கட்டாமல் விட்டு விட்டான்.
மனோஜ் திருமண நாள் அன்று மனோஜ் குடும்பத்துடன் வெளியே கிளம்ப முடிவ செய்து , கிளம்பும் சமயத்தில் போஸ்ட் மேன் வந்து, சீட்டு கம்பெனியில் இருந்து சரவணன் பணம் கட்டாததால் , மனோஜ் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கடிதம் வந்தது.
அதனால் டென்ஷன் ஆன மனோஜ் , உடனடியாக அந்த சீட்டு கம்பெனியில் போய் பார்க்க , சரவணன் தம்பி அங்கு வேலையில் இருக்க ,அவனே எழுந்து வந்து மனோஜிடம் பேசினான் .
சார் நீங்கள் எதற்காக இங்கு வந்தீங்க என்று கேட்க, சீட்டு கம்பெனியில் இருந்து வந்த கடிதத்தை காண்பிக்க , சார் நீங்கள் கவலைப் பட வேண்டாம்,இது எனக்கும் என் சகோதரனுக்கும் உள்ள பிரச்சினை என்று சொல்லி சீட்டு கம்பெனி மேலாளரிடம் நடந்த உண்மையைத் தெரிந்து , சார் உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட அதன் பின்னர் மறுநாள் அலுவலகம் சென்று சரவணணிடன் சீட்டு பற்றி கேட்க அதை சரவணன் மறுத்தான்.மனோஜ் அவனுக்கு வந்த தபாலைக் காண்பிக்க சரவணன் முகம் மாறியது.
சரவணன் தம்பி அவன் சொன்ன சொல்லை காப்பாற்றி, மனோஜ் க்கு அலுவலகத்தில் அரியர்ஸ் வந்த விவரம் தெரிந்து , அலுவலகத்தில் மேலதிகாரியிடம் பேசி பணத்தை வாங்கி கொண்டு சீட்டு கடன் முடிந்தது.
ஜாமீன் கையெழுத்து மூலம் நண்பன் எதிரியாகி சரவணண் இந்த விஷயத்திற்கு பிறகு மனோஜிடம் பேசுவதை தவிர்த்தான் . இந்த நிகழ்ச்சி க்கு பிறகு மனோஜ் யாருக்கும் கையெழுத்து போடுவதை நிறுத்தி விட்டார் என்று சொல்லவும் வேண்டுமா.
நிறைவு பெற்றது.
5 comments