தந்தை என்னும் தெய்வம் – போட்டி கதை எண் – 08

0
(0)

‘தந்தை என்னும் தெய்வம்’ என்ற சிறுகதையை எழுதியவர் திருமதி ராணி பாலகிருஷ்ணன்.

தந்தை என்னும் தெய்வம்

                    அர்ச்சனா கூறியதைக் கேட்ட அவள் தந்தை தட்சிணாமூர்த்தி திக்பிரமை அடைந்து போனார் . அவள் அம்மா சுசீலா அலறியே விட்டாள்   ஆனால் அர்ச்சனா பெற்றோர்களின் சம்மதத்தை  அசோகனை மணம் செய்து வைக்குமாறு வேண்டி கேட்டுக் கொண்டாள்

அசோகன் பெற்றோருக்கு ஒரே மகன் . பெரும் செல்வந்தன்  . உயர்கல்வி பெற்றவன் . ஆறடி ஆணழகன் . ஆனால் கேன்சர் நோயாளி வாழ்நாட்கள் என்ன பட்டு உள்ளன

அசோகனை பார்க்கவில்லை எனினும் அர்ச்சனாவின் பெற்றோர்கள் அவனைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறார்கள் . அர்ச்சனாவின் தோழி பாவனாவிற்கு மாமன் மகன் தான் அசோக் . சிறுவயது முதலே பாவனா அசோக்குக்கு தான் என்று பேசிப் பேசியே. வளர்ந்தவள் .

அலுவலகத்தில் உயர் அதிகாரியாக இருந்த அசோகன் உடல் பரிசோதனை செய்த போது கேன்சர் நோயாளி என அறிந்தான் .  எனவே பாவனாவை வேறு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கும்படி தன் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டான் .

அவன் பெற்றோரும் அத்தை மாமாவும் செய்வது அறியாமல் கலங்கிவிட்டனர் . பாவனா  இதுபற்றி தன் தோழி அர்ச்சனாவிடம் கூறி வருத்தப்பட்டாள் .

அர்ச்சனாவிற்கு அவள் அண்ணன் சங்கர் நினைவுகள் வந்தன.    இன்ஜினியரிங் முடித்து வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிய பொழுது அவனுக்கு திருமணம் செய்விக்க பெண் தேடிக் கொண்டிருந்தனர் .  அப்போது வயிற்று வலி அதிகமாகவே ஆஸ்பத்திரிக்கு சென்றனர் .  கோலன் கான்சர் என்ற ரிசல்ட் பார்த்து குடும்பத்தினர்  மிரண்டு போயினர் .  பின் ஆபரேஷனுக்காக சென்றதும் சரியாக 21 நாளில் மரணம் அடைந்ததும் மிகவும் வருத்தத்திற்கு உரியதாக ஆனது .

அவன் இறந்து ஒரு வருடம் நினைவு நாளன்று அர்ச்சனா அசோகனைத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டாள் .

ஒரே மகனை இழந்த சோகம் எனினும , மூர்த்தி் அசோக்கின் நிலையை புரிந்து மௌனமாக இருந்தார் தட்சிணாமூர்த்தி மகளின் தீர்க்கமான முடிவினால் அசோக் வீட்டிற்கு சென்று பேசினார் .

அசோக்குமார் மறுத்தாலும் அவன் பெற்றோர்கள் சந்ததி தொடர வேண்டும் என்பதனால் ஒப்புக்கொண்டனர் .

மிகவும் எளிமையாக வைத்தியநாதசுவாமி கோயிலில் திருமணம் நடந்தது . அர்ச்சனா தானும் மகிழ்ச்சியாக இருந்து குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தாள .் அசோக் வைத்தியம் தொடர்ந்தது அர்ச்சனாவும் கருவுற்று பத்தாவது மாதம் அழகிய ஆண் குழந்தை பெற்றாள் .

ஆதித் கிருஷ்ணா என்று பெயரிட்டனர் . ப்வெகு கவனத்துடன் மிகுந்த பிரியத்துடன் வளர்க்கப்பட்டான .

பாவனாவும் அசோக்கின் அத்தை மாமாவிற்கு ஒரே. மகள் . செல்வ செழிப்பான   குடும்பத்தை சேர்ந்தவள் . அவளுக்கும் திருமணம் செய்வித்தனர் அர்ச்சனா கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆர்வமாக செய்தாள்  . தோழியும் உறவினர்களும் ஆன பாவனா திருமணம் முடிந்து தன் கணவன் வசீகரன்‌ உடன்.  பெங்களூர் சென்று விட்டாள் .

அசோக் வேலையில் கெட்டிக்காரன் ஆனதால் அவனுக்கு ஜிஎம் பதவி உயர்வு கிடைத்தது அதித்  கிருஷ்ணாவுக்கு 5 மாதத்தில் காது குத்தி மொட்டை போட்டனர் .

அர்ச்சனா திரும்பவும் இரண்டாவது குழந்தை கருவுற்றதால்  குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அதிகம் ஆனது . அசோக் நோயினால் தளர்வுற்று காணப்பட்டாலும் இரண்டாவது குழந்தையை ஆர்வத்துடன் வரவேற்றான

அஸ்வின் பிறந்ததும் அசோக்கின் பெற்றோர் அர்ச்சனாவை உள்ளங்கையில்.  வைத்து தாங்கினார்கள் . அசோக்கின் உடல்நிலை பற்றி மிகுந்த கவலை உடையவர்களாக இருந்தார்கள .

் அவர்களுக்கு இடியென வந்து இறங்கியது பாவனாவின் இறப்பு செய்தி .  கணவன் காமுகனாக இருந்ததும் பாவனாவிடம் பணம் கேட்டு கொடுமைப் படுத்தியது அம்பலமாகியது .

மகள் இறந்த துக்கம் மிகுதியில் அவள் அப்பாவும் ஆறு மாதத்தில் இறந்து போனார் . மூர்த்தியின் சகோதரி சாரதா கணவனும் இல்லாததினால் தன் அண்ணன் வீட்டிற்கு அடைக்கலம் ஆனாள.

பாவனாவின் இறப்பும் தொடர்ந்து அவள்  அப்பாவின் இறப்பும் தட்சிணாமூர்த்தியை வாட்டியது . எனினும் அசோகன்.  மீது மிகவும் கவனமாக இருந்தனர்

ஆதித் கிருஷ்ணாவிற்கு நான்கு வயதும் அஸ்வினுக்கு இரண்டு வயது நிரம்பிய நிலையில் நோயுடன் போராடிய அசோகன் இறந்து போனான் . அந்த நிலையிலும் தைரியமாக சமாளித்தாள அர்ச்சனா .

‌.   ஏற்கனவே எதிர்பார்த்த மரணம் தான் . எனினும் இந்த ஐந்து ஆண்டு காலம் அசோகனை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருந்தாள் . அவனும்  அவனது அழகான இரண்டு வாரிசுகளையும் கண்டு திருப்தியுடன் மறைந்தான் .

தன் அண்ணனின் படத்தை பார்த்தவாறு மனம் தெளிவடைந்தாள் . இரண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கும் அதற்கு நேரம் சரியாக இருக்கும் அசோகன் மறைவு குறித்து கலங்க வேண்டாம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டாள் .

அவளது அப்பா அவளை டாக்டருக்கு படிக்க ஊக்கம் கொடுத்தார் பணம் அவரிடமும்  அசோக்கின்  பெற்றோர்  மற்றும் அத்தையிடமும் கொட்டிக்கிடக்கிறது அனைத்தும் அர்ச்சனாவுக்கும் அவளது  இரண்டு குழந்தைகளுக்கும் தானே .

அதனால் படிப்புச் செலவு பற்றி கவலைப்படவில்லை எனினும் அர்ச்சனா நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றாள் .  அவள் படிப்பு அவளது வருத்தத்தை மறக்கடிக்கும்   அதனால் தந்தையின் இந்த தீர்மானத்தை மனதார ஏற்றுக் கொண்டாள் .   அர்ச்சனா சாய்வதற்கு ஒரு தோள் இருக்கிறது என்று மன நிறைவுடன் தன் தந்தையின் தோள்   மீது சாய்ந்தாள் .  மிக மிக உன்னதமான தெய்வீக பெண்மையை அர்ச்சனாவிடம் கண்ட தக்ஷிணாமூர்த்தி , “   நீ என் குலசாமி அம்மா. ! ‌ என்றார் .

நிறைவு பெற்றது.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!