‘கூண்டு கிளி’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு எஸ்வி. ராகவன்
கூண்டு கிளி
‘காமாட்சி அம்மன் முதியோர் இல்லம்’ ஆரம்ப விழா இன்று.
“பிரபல தொழிலதிபர் பரவசிவன். வயது எழுந்தவை நெருங்குகிறது. ரிப்பன் வெட்டி துவக்க வருகிறார். பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அவர் தலைவர். தமிழகத்தின் மான்ஸ்டர் திருப்பூர் மற்றும் கோவையில் அவருக்கு துணி தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் எளிமையானவர். அவர் பள்ளி கல்லூரியில் அரசு நிர்ணயம் செய்த கட்டணம். காரணம் அவர் படித்தது எட்டாம் வகுப்பு. ஆனால் அனுபவம் அதிகம். முதல் முறை பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது. தான் பட்ட கஷ்டங்கள் எதிர்கால குழந்தைகள் பட கூடாது என்ற பரந்த மனது. இவ்வளவு ஏன் நான் அவர் பள்ளியில் படித்தேன். அதில் எனக்கு பெருமை. இந்த இல்லத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார்..”
என் இல்ல நிர்வாகி ராமன் அவர் நண்பர்களிடம் பெருமையாக சொல்லி கொண்டே இருக்கும் போது
சாதாரண கார் வந்து நின்றது. அதிலிருந்து பரமசிவம் இறங்கினார். எளிமையான வெள்ளை வேட்டி சட்டை. கையில் கழுத்தில் நகை இல்லை. யாரும் அவரை பணக்காரர் என நம்ப மாட்டார்கள்.. மாலை மரியாதை வேண்டாம் என மறுத்து நேராக இல்லம் நோக்கி சென்றார் அவருடன் ராமன் குழந்தை போல் தொடர்ந்தார்.
ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த பின் இல்லம் முழுவதும் சுற்றி பார்த்து விட்டு விழா மேடையில் அமர்ந்தார். அவருடன் அரசு அதிகாரிகள் இல்ல நிர்வாகிகள் அமர்ந்து இருந்தார்கள். முதலில் சிலர் பேசி அமர்ந்து பின்னர் பரமசிவம் பேச ஆரம்பித்தார்.
“அனைவருக்கும் வணக்கம். இல்லம் அருமையாக உள்ளது. இதை துவக்கி வைப்பது பெருமை. இந்த இல்லத்துக்கு காஞ்சி காமாட்சி அம்மன் பெயர் உள்ளதால்.. காஞ்சி மகான் மகா பெரியவர் சொன்ன ஒரு சேதி சொல்கிறேன். காஞ்சி மடத்தின் பக்தர் ஒருமுறை இது போன்ற இல்லம் துவங்க அவரை அழைத்த போது மறுத்து.. பள்ளி கல்லூரி தொழிற் சாலைகளில் நாட்டின் வளர்ச்சி ஆரம்பம். ஆனால் மருத்துவமனை மற்றும் இது போன்ற இல்லங்கள் தவறான பாதையில் நாடு செல்கிறது. அல்லது கஷ்டத்தில் உள்ளதை காட்டுகிறது. அதாவது மருத்துவமனை அதிகமானால் நோய் அதிகமாக ஆகிறது. மக்கள் சம்பளம் முழுவதும் அதற்கு செலவாகும். முன்னேற்றம் வராது. அதேபோல் இது போன்ற அனாதை இல்லங்கள் முதியோர் இல்லங்கள் மக்கள் தவறான வழியில் செல்வதை காட்டுகிறது. இவற்றை துவங்கி வைக்க நாமும் அதற்கு உடந்தையாக இருந்த பாவ பலன்… திறக்க மறுத்தார் என நீ நினைத்தால் எனக்கும் உனக்கும் மன கஷ்டம்?” என்றார். அதையே இப்போது நான் சொல்கிறேன். இது போன்ற இல்லம் தோன்றுவது நம் பராம்பரிய கலாச்சாரத்திற்கு விழுந்த அடி.. என சிறிது நிறுத்தி
இங்குள்ள நிர்வாகி ராமன் வறுமையால் படிக்க முடியாமல் கஷ்டபட்டு என் பள்ளியில் சேர்ந்தார். பிறகு எங்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். ஆனால் யாருடைய சாபமோ.. போன் ஜென்ம பாவமோ.. அவருக்கு இரண்டு குழந்தைகள் விபத்து மற்றும் நோய் தாக்கி இறந்து போயினர். மனம் வெறுத்து கோவில் மடம் என அலைந்தார். நான் திருவண்ணாமலை கிரிவலம் வரும் போது பார்த்தேன். பிரமை பிடித்தவர் போல இருந்தார். அவரை ரமண மகரிஷி ஆசிரமத்தில் சேர்த்தேன். சொத்துகளை கோயில் மடம் என எழுதலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னார். நான் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது உதவி செய். உனக்கும் மன அமைதி வரும் .. உன் சொத்து பல சொந்தகளை உருவாக்கும் என சொன்னேன். சிறிது பண உதவியும் செய்தேன் ஆறு மாதத்தில் இந்த இல்லம் தயாரானது..இன்று சுற்றி பார்க்கும் போது கோயில் பூங்கா மருத்துவமனை எல்லாம் உள்ளேயே உள்ளது. மீண்டும் சொல்கிறேன்.கோயில் பூங்கா அமைதி நல்லது… மருத்துவமனை கவலை துயரம்.. பல முதியோர் தங்களை தங்கள் குழந்தைகளே கொண்டு வந்து சேர்ந்த கதை சொன்ன போது கஷ்டமாக இருந்தது.. இதுவரை இருபது பேர் சேர்ந்து உள்ளனர் என்றார். இறைவன் அருளால் இந்த எண்ணிக்கை ஏற கூடாது.. இறங்க வேண்டும்.. வெளியே சுதந்திர பறவைகளாக இருந்தவர்கள் இங்கு கூண்டு கிளிகளாக அடைந்தது ஒருபுறம் கவலை..அதே சமயம் மறுபுறம் அவர்களை கவனிக்க இது போன்ற இல்லமும் ராமன் போன்ற நல்ல மனிதர்கள் இருப்பது மகிழ்ச்சி. அருமையான இந்த வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி வணக்கம்..” என உரையை முடித்துக் கொண்டார்.
அடுத்து பேசிய நிர்வாகி ராமன். “பரமசிவம் நல்ல மனிதர். ஐயாவுக்கு பரந்த மனது.. என்னை போன்ற பலரை மேலே ஏற்றிவிட்ட ஏணி. அதற்கு ஐயாவிற்கு நன்றி. அடுத்து இந்த இல்லம் துவங்க போகிறேன் என கேட்ட போது தயங்காமல் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த வள்ளல். அவரின் தனித்தன்மை எளிமை. இப்போது லட்சாதிபதி கோடீஸ்வரன் ஓவராக ஆடும் போது. இவர் அன்று போல் என்றும் எளிமையாக இருக்கிறது சிறப்பு. அவரை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். என் அழைப்பு ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி..” என்று உரையை முடித்துக் கொண்டார். கைதட்டல் முடிந்தது
அடுத்து பத்திரிகை நிருபர் ராமு பேசுவார்..அவர் சிறந்த நிர்வாகி பரந்த அனுபவம் உள்ளது. அவர் தன்னுடைய உரையில் பல நல்ல கருத்துக்களை தெரிவிப்பார்” என்று அறிவித்தார் ராமன்.
அடுத்து பேசிய ராமு இல்லத்தை ராமனை.. வாழ்த்தி பேசினார். அடுத்து பரமசிவம் ஐயாவை புகழ்ந்து பேசினார். மூன்று கதைகளை சொல்ல அனுமதி கேட்டார்.
முதல் கதை நம்மை வளர்த்த தாய் தந்தையை காப்பது பொறுப்பு. முதல் கடமை. சொத்துகளில் உரிமை கேட்கிறோம் ஆனால் அவர்களை கவனிப்பதில்லை. கதை ஒன்று மகன் மகள்கள் தாயை மதிக்கும் போது மருமகள் வெறுப்பது கொடுமை. பேரன் பேத்தியிடம் கொஞ்சினால் தவறு. நின்றால் தவறு அமர்ந்தால் தவறு.. படுத்தால் தவறு உணவு உண்டால் தவறு என வாட்டுவது தான் தவறு. நாளை நமக்கும் நடக்கும் என்பதை மறைத்து விடுகிறார்கள். இந்த இல்லத்துக்கு அவர்களை வர அவர்களுக்கு வெட்கமாக இல்லை. எனக்கு கேவலமாக இருக்கிறது எல்லாரும் இருந்தும் பரமசிவம் ஐயா என் பள்ளி நண்பர். நான் ஓரளவு வசதி அதனால் பியூசி வரை படித்து ஒரு அச்சகத்தில் வேலை செய்து இன்று நிருபராக பணிபுரிகிறேன். ஐயா சொன்னது போல பலர் கூண்டு கிளிகளாக அடைந்தது பரிதாபம். நாம் குழந்தைகளாக இருந்த போது எத்தனை முறை தடுக்கி விழுந்து இருப்போம் தூக்கி விட்டது யார்? உணவு ஊட்டி வளர்த்தது யார்? மனைவியா? நண்பர்களா? இல்லை நம் பெற்றோர்கள். நேற்று வந்த மனிதர்கள் சொன்னது வேதம் எனும் நாம் பெற்றோர்களை குப்பை என தூக்கி எறிந்தது ஏன்? அவர்களுக்கு உதவாத கைகள் எதற்கு? கால்கள் எதற்கு? அவர்களை புகழாத வாய் எதற்கு? சொத்துகள் வேண்டும் அவர்கள் வேண்டாமா?” என கோபமாக பேசிய போது ஒரு இளைஞன் ஓடி வந்து அவர் காலில் விழுந்தான். தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். யார் நீ? பாவமன்னிப்பு?”. ஏன் கேட்ட போது இங்கே உள்ள தன் பெற்றோர்களை அடையாளம் காட்ட.. அவர்களை அழைத்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். பரமசிவம் ராமனுக்கு மகிழ்ச்சி. ராமுவுக்கு பாராட்டு தெரிவித்தனர்
மீண்டும் தன் பேச்சை துவக்கினார்.
கதை இரண்டு வெளிநாட்டுக்கு சென்று படிக்கிறோம். கை நிறைய சம்பளம் வாங்கும் நாம். தினமும் நம்மை நன்றாக கவனித்து கொள்கிறோம். ஆனால் நம்மை பெற்றவர்களை கவனிக்க தவறுகிறோம். அவர்களுக்கு டாலர் ரியால் மட்டுமே தேவையில்லை. அன்பான பாசமான ஒரு வார்த்தை. தினமும் ஒரு நிமிடம் அவர்களிடம் பேச நேரமில்லை. மணி கணக்கில் வேலை பேச்சு.. பாட்டு கூத்துக்கு.. நேரம் உள்ளதா? காதில் செல்லில் இணைய தொடர்பு உள்ளது. பேச நேரமில்லையா? என் முன் வரிசையில் அமர்ந்து இருந்த கோட் சூட் போட்ட ஆசாமியை பார்த்து கேட்க தலைகுனிந்து கொண்டான். வாழ்க்கைக்கு பணம் சம்பாதிப்பது முக்கியம். ஆனால் அதுவே வாழ்க்கை இல்லை. ஓடி கொண்டே இருக்கும் பலர் நோயாளிகளாய் மருத்துவமனைகளில் அனுமதி சரியாக சாப்பிடாமல் தூங்காமல்.. யாரையும் கவனிக்காமல்.. என மீண்டும் அந்த ஆசாமியை பார்க்க
அவன் மேடையை நோக்கி வர ராமனுக்கு பயம் இவன் அப்பா இல்லை. அம்மாவை ஐம்பதாயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுத்து சேர்த்த அமெரிக்கா வாழ் இந்தியர்.. பெயர் கூட அஸ்வின். என்று நினைத்து கொண்டு இருந்த போது ராமுவை அடிக்க வருகிறான் என நினைத்து தடுக்க அருகே ஓடினார். ஆனால் அந்த பையன் கோர்ட்டை ஷாவை சுழற்றி போட்டு விட்டு ராமுவின் காலில் விழுந்தான். “ஐயா நீங்கள் சொல்வது ரொம்ப சரி நல்லா இருக்கும் போது என்னையும் குழந்தைகளை கவனிச்ச அவங்களை உடல் தளர்ச்சியால் கஷ்டம் என இங்கே கொண்டு வந்து விட்டது பெரிய தவறு. நான் இருபது வருடம் வெளிநாட்டில் சம்பாதிக்கும் போது நிம்மதி இல்லை... சொத்து இருக்கு பல லட்சம். அம்மா அங்கு வர மாட்டார்கள் எனக்கும் ஐம்பது வயது ஆகிறது. உடனே வேலை ராஜினாமா செய்து விட்டு இந்தியா வருகிறேன் அம்மாவை அருகில் இருந்து கவனிக்கிறேன். என் கண்களை திறந்து விட்டீர்கள்”.. என ராமுவை வணங்கினான் ராமுவுக்கு இரண்டு குடும்பங்களை சேர்ந்து வைத்த திருப்தி.
கடைசியில் மூன்றாம் கதை என ஆரம்பித்தார். அங்கே அமர்ந்து இருந்த நவநாகரீக மங்கையை மேடைக்கு அழைத்தார். “வாம்மா.. உன் பெயர்? என்ன படித்து இருக்கே? என் கேட்டார்.
அவள் ஏன்? எதற்கு? என் கேள்வி கேட்க எல்லாவற்றையும் நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். நான் இங்கு வந்து இரண்டு மணி நேரம் ஆகிறது. நானே சொல்றேன். நீ போய் உட்கார்ந்து கொள். என் சொல்ல அவள் அதிர்ச்சி ஆனாள். அரங்கம் விட்டு வெளியே போக ஆரம்பித்தாள்.
அப்போது ராமு.. “அம்மா ஸ்வேதா.. பிகாம் மற்றும் எம்பிஏ கல்வி தகுதி சிறப்பு. கை நிறைய ஐடி சம்பளம் கொழுப்பு. ஆனால் பெற்றோர் மேல் ஏன் வெறுப்பு? என்று கவிதை நடையில் கேட்க..” வெட்கப்பட்டு திரும்பினாள். ஸ்வேதா அருகில் இருந்த நாற்காலியில் தலை குனிய அமர்ந்தாள்
ராமு தொடர்ந்து நீ ஊரை சுற்றினால் கேட்க கூடாது.. பண கணக்கு கேட்க கூடாது. ராத்திரி நேரம் கழித்து வந்தால் கேட்க கூடாது.. உணவு உடை அலங்காரம் வீண் செலவு எதையும் கேட்க கூடாது. ஆனால் நீ விரும்பும் பையனை கல்யாணம் செய்து வைக்கனும்.. சரிதானே.. என கேட்டார்
ஸ்வேதாவிற்கு அவமானமாக இருந்தது.வெளியே ஓட வேண்டும் என நாற்காலியில் இருந்து எழுந்தாள்.
மீண்டும் ராமு தொடர்ந்து பேச ஆரம்பித்தார். அம்மா உனக்கு வயது குறைவு. அனுபவம் குறைவு. உலகம் பற்றி விபரம் தெரியாது. அதுவும் செல்போன் தான் உலகம் அதில். தினமும் ஏமாற்றபடும் பெண் எத்தனை? குழந்தைகளின் பெற்றோர் பாடு உனக்கு தெரியாது குறைவான அளவு உடை உனக்கு முதல் எதிரி அதுவும் உனக்கு தெரியாது.. ஆனால் எல்லாம் தெரிந்தவர் போல் ஆட்டம் நல்லது சொன்னது கேட்க பிடிக்காது உன் பெற்றோரிடம் சண்டை போட்டு இங்கே சேர்த்து ரொம்ப தவறு நீ சொல்வதை கேட்டு சரி என்றால் அவர்கள் நல்லவர்கள்.. இல்லை குழந்தை நீ தண்டனை கொடுப்பாய். பாவம் அவர்கள் உன்னை சீராட்டி பாராட்டி படிக்க வைத்தால்.. அது கடமை என்று சொல்லி தூக்கி எறிந்து விட்டது மிகவும் தவறு..” என்றார்.
ஸ்வேதாவிற்க்கு தான் செய்த தவறு தெரிந்தது. இருந்தும் ஏற்க மனமில்லை. திமிர் கண்ணை மறைத்தது. நான் செய்தது சரி என சாதித்தாள். நீ காதலிக்கும் விமலுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஜார்க்கண்டில் குடும்பம். ஒரு குழந்தை கூட உள்ளது. உன்னைவிட உன் நலத்தை விரும்பும் ஒரே ஜீவன். உன் பெற்றோர் மட்டுமே. நீ சொன்னது போல அவர்களுக்கு உன்னிடம் பொறாமை ஏதும் இல்லை.அவர்கள் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் நீயாகும்.. .இதெல்லாம் அவர்கள் உனக்கு தெரியாமல் சேகரித்த தகவல்கள்..என்று சொல்ல..”
அப்போது பரமசிவம் எழுந்தார் “ஐயா ராமு வேண்டாம் விட்டு விடுங்கள்.. இன்றைய பெண்கள் பக்குவம் குறைவு கோபம் அதிகம். ஏதாவது.. செய் து கொண்டால்”. என சொல்ல
ஸ்வேதா “அதுமாதிரி ஆள் இல்லை. என் பெற்றோர் அது போல் வளர்க்க வில்லை என சொல்ல.. அங்கே ராமு ஏற்கனவே சொல்லி வைத்தது போல ஸ்வேதா பெற்றோர் மேடைக்கு வந்தனர். ஸ்வேதா ஓடி சென்று அவர்களை அனைத்து கொண்டாள். ராமுவிடமும் பரமசிவம் ஐயாவை நோக்கி கை கூப்பி வணங்கினாள். அது அவள் தவற்றை உணர வைக்க போட்ட நாடகம் என ராமனுக்கும் ராமுவுக்கும் மட்டுமே தெரியும்.
ராமன் மேடையில் ஏறி அனைவருக்கும் நன்றி தெரித்தார்.
பரமசிவம் மற்றும் நிருபர் ராமு விடை பெற்று சென்றனர். ராமனுக்கு மூன்று குடும்பங்களை சேர்ந்து வைத்த மகிழ்ச்சி. மூன்று கூண்டு கிளிகள் குடும்பத்தை சேர்ந்தனர்.
நிறைவு பெற்றது.