காத்திருந்த காதல்- போட்டி கதை எண் – 16

0
(0)

‘காத்திருந்த காதல்’ என்ற சிறுகதையை எழுதியவர் ப. நந்தக்குமார்.

 

                                     காத்திருந்த காதல்

 “கீழ் வானம் வெட்கப்பட்டு சிவக்க கதிரவனின் வருகையை கண்டு ” பறவைகள் எல்லாம் கூக்கூ என்று கூச்சலிட்டு  கயல்விழியை எழுப்பியது. கயல் கண் விழித்தாள். கயல் என்ற பெயருக்கு ஏற்றபடி மீன் போன்ற அழகான விழிகளை உடையவள். கண்கள் மட்டும் அழகா என்றால் இல்லை என்றே கூறலாம். ஏனென்றால் அவள் அழகை வர்ணிக்க வார்த்தை கூட இல்லை என்று சொல்லலாம்.

 ஆம்!அவள் கல்லூரிக்கு செல்லும் அழகை பார்க்க இரு கண்கள் போதாது காரணம் மிகவும் அழகான மென்மையான பூவைப் போன்ற அழகு மட்டுமல்ல, மனமும் படைத்தவள் தான்  கயல். கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறாள். கல்லூரியின் வாயில் காலை வைத்த முதல் நாளே  ஏதோ இனம் புரியாத பாசம் அவளை நெகிழச் செய்தது. அப்படியே ஒரு சில மாதங்கள் சென்றது.

 கயலை சுற்றி எப்பொழுதும் ஒரு நண்பர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் – காரணம் கயல் எல்லோரிடமும் அன்பாக பழகுவாள். கயல் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை படைத்தவள் கயல்.

 ராஜா இக்கதையின் நாயகன்.  இவனும் இக்கதையின் பெயருக்கு ஏற்றபடி “ராஜாவாகவே திகழ்ந்தான்.” இளம் வயதிலே திறமைசாலி!ஆகவே உள்ளான் . ஒரு கம்பெனியை வைத்து நடத்தி அதில் தொழில் அதிபராக உள்ளார். ராஜாவிற்கு அம்மா இல்லை. ராஜாவிற்கு பத்து வயது இருக்கும் போதே அவரது அம்மா உடல்நிலை சரியில்லாத காரணத்தால்  இறந்துவிட்டார். ராஜா தலை பிள்ளைக்கும் கடைக்குட்டி க்கும் இடையில் பிறந்த செல்லக்குட்டி . ராஜா வின்  உடன்பிறந்த சகோதரர்கள் இருவர். ராஜா தந்தையின் தொழிலை சகோதரர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார்.பல சமயங்களில் வேலை காரணமாக வெளியூர் சென்று ஒரு சில வாரங்கள் அல்லது ஓரிரு மாதங்கள் கழித்து வீடு திரும்புவார். இப்படி இருக்கையில் தான் ஒருநாள் கயலை சந்தித்தார்.

 கயலை ராஜா எப்படி சந்தித்தார் தெரியுமா?

 அது ஒரு அழகான மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கயல் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது வெளியூர் சென்றிருந்த ராஜா அந்தப் பாதையைக் கடந்து சென்றார். கயலை பார்ப்பதற்காகவே என்று  தெரியவில்லை அன்று வேறு எங்கே செல்ல வேண்டிய ராஜா இந்தப் பாதை வழியாக மனம் ஈர்க்கப்பட்டு வந்தார். அந்தப் பனி மூட்டத்தில் வானிலிருந்து தேவதை கீழே இறங்கி வந்து கோலமிடுவது போல் காட்சி அளித்தாள் கயல். அதிகாலை இளம் குளிர், இலையுதிர்காலம் அழகான தேவதை இன் கோலம் இதனைப் பார்ப்பதற்கு ராஜாவின் கண்கள் கோடி புண்ணியம் செய்தது போல் கருதினான். சொல்லி வைத்தது போல் ராஜாவின் வண்டியும் கயலைப் பார்த்தவுடன் நின்றுவிட்டது. வண்டியை சரி செய்யும் சாக்கில்  கயலின் தரிசனமும் கிடைத்தது. பின்பு அந்த இடத்தை விட்டு நகர மனமில்லாமல் வீட்டிற்குச் சென்றான் ராஜா.

அன்று முழுவதும் ராஜாவிற்கு நல்ல செய்தியே தேடி வந்தது. அன்று முதல் ஒரு நாள் கூட தவறாமல் கயலை பார்க்க தினமும் காலை அந்த வழியாக நடந்து செல்வார் ராஜா. இப்படியே அதிகாலை தரிசனத்தை ரசித்து கயலின் முகத்தைப் பார்த்து தன் மனதின் காதலை வளர்த்தான் ராஜா. இப்படியே ஆறு மாத காலம் சென்றது. ஒருநாள் மாலை நேரத்தில் கொட்டும் மழையில் நனைந்தபடியே மீண்டும் அந்த தேவதையை கண்டான் ராஜா. அப்போதுதான் தெரிந்தது கயலின் கல்லூரி எதுவென்று. வேலை காரணமாக  வெளியில் செல்லும் போதெல்லாம் அவன் மனம் கயலின் முகத்தையே நாடியது.

 ஒருநாள் ராஜாவின் நண்பனான மணி கயல் படிக்கும் கல்லூரிக்கு சென்றார்- காரணம் அந்தக் கல்லூரியில் படிக்கும் சுமதி தன்னுடைய அக்கா மகள் என்பதால் அவளை சந்திக்க அடிக்கடி சென்று வந்தான் மணி.இதனைக்கண்ட ராஜாவோ நானும் உன்னுடன் வருகிறேன் இன்று அந்த கல்லூரிக்கு என்றார். சரி போலாம் டா வா நானும் உனக்கு சுமதி அறிமுகப்படுத்தவே இல்லை சுமதியை இன்று அறிமுக படுத்துகிறேன் உனக்கு எனது அக்கா மகளை  பார் என்றான் மணி. ராஜாவின் மனம் கயலை  நாடியது. கயலை பார்த்து விடுவதற்காகவே கல்லூரிக்கு சென்றான்  அன்று ராஜா.சுமதியை பார்த்தபோது தனது தங்கையாக ஏற்றுக்கொண்டான் ராஜா. அப்போது தெரியாது ராஜாவிற்கு கயலின் தோழி சுமதி என்று. இப்படியே ஓரிரு வாரங்கள் சென்றன. ஒருநாள் கயலும்,சுமதியும் சேர்ந்து வருவதைக் கண்டான் ராஜா. அடுத்த நாள் சுமதியிடம் கயலைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டான். அந்த நிமிடத்திலே கயலை தனது மனைவியாகவே பார்க்க நினைத்தான். காரணம் தனது அம்மாவின் குணங்கள் அனைத்தையும்  கயலிடம்  காணப்பட்டன. தனக்கு இன்னொரு தாயாகவே நினைத்தான்.

கயலின் மீது ஏற்பட்ட காதலை ராஜா சுமதி இடம் சொன்னான். மேலும் சுமதி இடம் உதவி கேட்டு தனது காதலை கயல் இடம்  கூறுமாறு கேட்டுக் கொண்டான். சுமதியும் ராஜவின் காதலுக்கு உதவுகிறேன் என்று சம்மதம் தெரிவித்தாள் – காரணம் ராஜாவை தன் உடன் பிறவா சகோதரன் என்று நினைப்பதாலும் கயல் மிகவும் நல்லவள் அவளுக்கு ஏற்ற துணையாக ராஜா இருப்பதை அறிந்தால். இதனால் கயலிடம்  சென்று ராஜாவின் காதலை வெளிப்படுத்தினால் நல்ல பதிலை உன்னிடம் எதிர்பார்க்கிறேன் கயல்.  என் அண்ணன் என்பதால் உன்னிடம் சொல்கிறேன் இல்லை உண்மையில் நீ அதிர்ஷ்டசாலி தான்.உன் மனம் எதிர்பார்த்ததை விட பன்மடங்கு சிறந்தவன் என் அண்ணன் இனிமே தான் பதில் சொல்ல வேண்டும் என்றால் சுமதி கயலிடம்.

 

                       ” துருதுருவென அலையும்

      அவளின் கண்களில்

                        காதலில் சம்மதம் தெரிந்தது.

– ஆனால் அவள் இல்லை என்று மறுத்து விட்டாள்.

 அதன்பிறகு ராஜாவும் எத்தனை முறை கயலை  சந்தித்துப் பேசினாலும் எனக்கு உன் மீது காதல் இல்லை நான் யாரையும் காதலிக்கவில்லை என் வீட்டில் எனக்கு மாமா இருக்கிறார்கள் நான் அவரை திருமணம் செய்யப் போவதாக கூறி மீண்டும், மீண்டும் மறுப்பு தெரிவித்தாள்.

 காதலை ஏற்க மறுப்பு தெரிவித்தது கயலின் உதடுகள்தான் உள்ளமில்லை இப்படி ஒவ்வொரு முறையும் ராஜாவிடம் மறுப்பு தெரிவித்தாலும் கயலின் மனதில் ராஜாவின் முகம் ஆழமாய் பதிய தொடங்கியது காதலும் வளர்ந்து வந்தது.

 ராஜா வேலை காரணமாக வெளியூர் சென்றனர். எத்தனை முறை தன்னை   வேண்டாம் என்று கூறி கயல் காயப்படுத்தினாலும் ராஜாவின் கண்களும், மனதும் தேடும் ஒரே முகம் கயலின் முகம் தான். சுமதியும்,கயலும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சுமதியிடம் ஒருமுறை ராஜா வாங்கினான்.இதனை அவ்வப்போது வெளியூர் செல்லும் சமயங்களில் எடுத்து பார்த்து பேசி ஆறுதல் அடைவான். கயல் எவ்வளவு திட்டினாலும் அவளைப் பார்ப்பதற்காகவே கயலை  விடாமல் துரத்துகிறது ராஜாவின் மனம்.

 இதனால் வேலையை விரைந்து முடித்து விடுவான் அதாவது ஒரு சில வாரம் சென்ற உடனே ஒரு சில மாதங்களில் முடிக்கும் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவான் ராஜா.

 இதற்கு இடையில் ராஜாவை பார்க்காமல் கயலுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.மேலும் கயலின் மனம் அதிகம் ராஜாவை நினைக்க வைத்தது சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட பசலை நோய் கயலை  சூழ்ந்தது.

   ” தங்க நிற உடல் வெளுத்து

     கருமை அடைந்தது

     தேவதையின் முகம்

     பொலிவு இழந்தது

     தலைவனைக் காணமல்- அவளின்

     கைவளைகள் கூட கழன்டுவிட்டன. “

-இவ்வாறு பசலை நோய் என்பது சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட ஒரு காதல் நோய், இது தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த ஒரு வித சோகை நோய் சங்க இலக்கியங்கள் கூறுகிறது.

 ஆம் காவியக் காதலில் கூறப்பட்ட பசலை நோயால் கயலும் அவதிப்பட்டால் இதனை சுமதி அறிந்துகொண்டு கயலிடம்  பேசினாள்.எதற்காக உன் காதலை மறைக்கிறாய் நீ? என் அண்ணன் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறார் நீ பின்பு என் காதலை ஏற்க மறுப்பு தெரிவிக்கிறாய்?- என்றாள் சுமதி. கயலும் எனக்கு தெரியவில்லை காரணம் சிறிது கால அவகாசம் வேண்டும் ராஜாவிடம் நான் என் காதலை கூறுவதற்கு என்றாள்.

 மேலும் கயல் நான் ராஜா வை  சந்தித்த மூன்றாம் நாளே எனக்கு ராஜாவை பிடிக்க ஆரம்பித்துவிட்டது நான் கல்லூரியில் தடம் பதித்த நாள் முதலே ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு (அன்பு) ஏற்பட்டது. அது ராஜாவிடம் என்னை   சேர்ப்பதற்கு என்பதை இன்றுதான் புரிகிறது எனக்கு டி. ராஜாவை நான் எனக்குத் தெரியாமலே காதலிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் இப்போது நான் அதை உடனே உணரும் தருணத்தில் எனக்கு சிறிது அவமானமாக இருக்கிறது -காரணம் நான் ராஜாவை எவ்வளவு அவமானம் செய்துள்ளது. ஒவ்வொரு முறையும் என்னை சந்திக்க வரும் போதெல்லாம் காயங்களையும், வேதனையை மட்டுமே நான் கொடுத்தேன்.ஆனால் அவன் பதிலுக்கு எனக்கு பன்மடங்கு காதலியை திருப்பித் தந்தான்.

ஒருமுறை கல்லூரி பேருந்து நிலையத்தில் பல பெண்கள் சிலர் வம்பு இழுத்தார்கள். அதனை யாரும் கேள்வி கேட்கவில்லை ராஜா என்னைப் பார்க்க வரும் சமயத்தில் அந்த சம்பவம் நடைபெற்றது.உடனே ராஜா வண்டியை நிறுத்திவிட்டு அவர்களுடன் சண்டை போட்டு வெளியே அனுப்பினர். இதனால் அந்த பெண்கள் எல்லாம் நன்றி கூறி மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் நான் மட்டும் சென்று என்ன இப்படி எல்லாம் செய்தால் நான் மயங்கி விடுவேன் என்று நினைக்காதே நீ. உன் ஹீரோ  வேலையெல்லாம் என்கிட்டே வேணாம் வேற யார்கிட்டயும் போய் காட்டு என்று திட்டிவிட்டு சென்றேன்.

 சில நாட்கள் சென்றதும் அன்று ராஜா சண்டை போட்ட கூட்டத்தில் இருந்த பெண் ஒருவள் ராஜாவிடம் காதலை சொன்னால்.அது மிகவும்  பிரம்மாண்டமாய் காதலை வெளிப்படுத்தினால். அதற்கு ராஜா சிரித்தபடியே பதிலளித்தான். உன்னிடம் வேண்டுமானாலும் நிறைய காசு,பணம் இருக்கலாம், ஏன் அறிவும், அழகும் நிறைந்த பெண் தான் நீ உனக்கு எல்லாமே வாழ்வில் தானாக கிடைத்து விட்டது. ஆனால் என்னை விட்டால் என் கயலுக்கு  யாருமே இல்லை. கயலை தவிர வேறு யாராலும் எனக்கு இன்னொரு அம்மா வாய் இருக்க  முடியாது.எனக்கு 10 வயது இருக்கும்போது என் அம்மா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து விட்டால் அப்போது முதல் அம்மாவின் பாசத்துக்கு ஏங்குறேன்.

  கயலை நான் முதன்முதலில் பார்த்தபோது என் அம்மாவின் சாயலும்,அன்பும் தென்பட்டது.அது மட்டுமல்ல கயல் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த பெண். மிகவும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறாள் அவளை ஒரு தேவதை போல் வைத்துப் பார்த்துக் கொள்ளனும் நான் நினைக்கிறேன். மனதால் அவளுடன் தினமும் குடும்பம் நடத்துகிறேன். அவளுக்கு என்னை பிடிக்கா விட்டாலும் பரவாயில்லை அவளை பார்த்துக் கொண்டே இருந்தாலே போதும் எனக்கு இந்த ஜென்மம் என்றான் ராஜா.

 மேலும் ரித்திகா  உன்னை நான் என் தந்தையாக ஏற்றுக் கொள்கிறேன். நீ எப்ப வேண்டுமானாலும் என்னிடம் வந்து என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேள் உனக்காக அண்ணன் நான் இருக்கிறேன் என் உடன் பிறந்த சகோதரி என்று யாரும் இல்லை இதுவரை சுமதியை மட்டுமே என் சகோதரியாக நினைத்தேன். இன்றுமுதல் உன்னையும் நான் என் சகோதரியாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி ரித்திகாவை  அனுப்பி வைத்தான் ராஜா. இதை சமீபத்தில் என்னிடம் வந்து ரித்திகா  சொன்ன பிறகுதான் நான் கேள்விப்பட்டேன். அப்போதே எனக்கு  நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறிராஜாவை கட்டி பிடித்துக் கொண்டு கத்தனும் போல ஆசையா இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாளே என் தலையில் இடி விழுந்தது என்ன தெரியுமா சுமதி?

 ராஜாவுக்கு  நிறைய சொத்துஇருக்கு. அதனால் நான் சொத்துக்காக திருமணம் செய்வேன் என்று ராஜாவின் நண்பன் வாசு பேசியதை கேட்டேன். ராஜா இதுவரை உன்னை காதலித்த கயல்  ஒருவேளை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள் என்றால் அது உன் சொத்துக்காக தான் வாசு என்று கூறியதை கேட்ட உடனே நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன் என்றாள் கயல். இதனால் தான் நான் ராஜாவிடம் காதலை சொல்லவில்லை,உன்னிடமும், சொல்லவில்லை என் மனதிற்குள் புதைத்து விட்டேன்.ஆனால் அவனைப் பார்க்காமல் பசலை நோய் வந்து  என்னை வதைத்து உன்னிடம் காட்டிக் கொடுத்து விட்டது டி என்று சொல்லி சுமதியை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதால் கயல்.

சுமதி அதற்கு நீ பைத்தியமா டி!எப்பயும் எதையும் முழுசா தெரிந்துகொள்ள மாட்டியாநீ ராஜா அண்ணாவும், வாசு அண்ணாவும்  பேசினது முழுசா கேட்டிருந்தால் இது மாதிரி பேசி இருக்க மாட்ட டி. அண்ணனை நீ புரிஞ்சுகிட்ட அவ்வளவுதானா. அண்ணன் உன்னை கோபுரத்தில் வைத்து பாக்குறாங்க  நீ முழுசா கதை கேட்டுட்டு அப்புறம் பேசு.

 வாசு அண்ணா உன்னை பத்தி தப்பா பேசினதெல்லாம் ராஜா அண்ணா ஒத்துக்கவே  இல்ல நீ நிறுத்துடா பஸ்ட் பழகிட்டேன்னு பாக்குறேன் இல்லைன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியல கயில பத்தி பேசாத. உனக்கு என்ன தெரியும் அவள  பத்தி. அவ அழகுக்கு எத்தனை பேர் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இருக்காங்க தெரியுமா? ஒரு முறை சீர்வரிசை எதுவும் வேண்டாம் உங்க பொண்ண கொடுத்தா போதும் என்று கேட்ட போது  கயல் எனக்கு சொத்து எல்லாம் வேண்டாம் என மனைவியாக பார்க்காமல்  ஒரு நண்பனாய் பார்க்கும் ஒரு கூலித் தொழியாக இருந்தாலும் கூட எனக்கு போதும் என்று மாப்பிள்ளை புகைப்படத்தைக் கூட பாக்கல டா. திருப்பி அனுப்பி வைத்தாள்.ஏன் தெரியுமா? மாப்பிள்ளை வீட்டுல ஸ்டேட்டஸ் பார்த்து பேசினாங்க பொண்ணா ரொம்ப புடிச்சிருந்துச்சு அவங்களுக்கு. என்ன ஸ்டேட்டஸ் பார்த்து பேசுறாங்க என்ற  ஒரே காரணத்தினால். எனக்கு எவ்ளோ பணக்காரர்களாக இருந்தாலும் வேண்டாம்னு சொன்னாள். பொண்ணு பார்க்கப் போனது வேற யாரும் இல்லடா எங்க சித்தி தான். அதனால தான் டா எனக்கு நல்லா தெரியும் கயலை பத்தி

 இன்னும் ஒன்று  கூட சொல்றேன் கேளு டா. அவ   அவ கல்லூரிக்கு போற நேரத்தை தவிர மத்த நேரமெல்லாம் பக்கத்தில் உள்ள கடையில் வேலை செய்ற டா. அதுல வர்ற சம்பளத்தில் ஒரு பகுதியை அவள மாதிரி அப்பா இல்லாத குழந்தைக்கு செலவு பண்ற டா.” என் தங்கம் டா அவ”. நான் எப்படி அம்மா பாசத்துக்கு ஏங்குறேன்.   அது மாதிரி அவ அப்பா ஒரு விபத்தில் பறி கொடுத்துவிட்டு அப்பா பாசத்துக்கு ஏங்குகிறாள். எனக்கேற்ற சரியான ஜோடியும் அவள் தான்  டா. அன்று மாப்பிள்ளை தலைமுறை கூட பார்க்கலா அவ. இன்னொரு வாட்டி என் முன்னாடி கயலை பத்தி எதுவும் தப்பா  பேசாத பிரண்டு கூட அப்புறம் நான்  பார்க்க மாட்டேன்.நான் இந்த ஜென்மம் எடுத்தது என் கயலை பாக்குறதுக்கு தாண்டா கயல் எனக்கு கடவுள் கொடுத்த வரம் அவளை நான் இழக்க மாட்டேன் என்று வாசு அண்ணா இடம் ராஜா அண்ணா சொன்னாங்க.

இப்ப இப்ப புரியுதா டி நீ எவ்ளோ பெரிய தப்பு பண்ணி இருக்கேன்னு.  ராஜா அண்ணா கிட்ட பேசு இனிமே  யாச்சு ரெண்டு பேரும் நல்லா சந்தோஷமா இருங்க போடி போ. பஸ்ட் அண்ணன் கிட்ட போன் பண்ணி எல்லாத்தையும் சொல்லு. சுமதி நிச்சயமா உங்க அண்ணா கிட்ட காதலை  சொல்றேன்.- ஆனா இப்ப இல்லை இன்னைக்கு மார்ச் 5 மார்ச் 10 அன்று உங்க அண்ணா பிறந்த நாள். அதனால் நான்  அன்னைக்கு சொல்றேன். ஏண்டி இப்படி பண்ற சொல்லு நா கேட்க மாட்டேங்கிற. இல்ல ப்ளீஸ் என்னை கட்டாயப் படுத்தாத எனக்கு உங்க அண்ணா கண்ண பாத்து சொல்லணும் அப்ப உன் அண்ணன்  முகத்தில் வரும்  சிரிப்பை நான் பார்க்கணும். இப்ப எனக்கு உங்க அண்ணா கிட்ட பேசணும் போல இருக்குடி ஒரு போன் பண்ணி தரியா. சரி இரு போன் பண்றேன். ஹலோ அண்ணா நான் சுமதி பேசுறேன் எப்படி இருக்கீங்க? ஹேய் பாப்பா சுமதி நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க? என் செல்ல குட்டி, தேவதை எப்படி இருக்கா? ஆ தேவதை எல்லாம் நல்லா தான் இருக்காங்க. உங்க கிட்ட ஒருத்தர்  பேசணுமா நீங்க பேசுறீங்கள. யார்டா அது என்கிட்ட பேசனுகிறது. எல்லாம் உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்க தான். அப்படி  யார் எனக்கு  இருக்காங்க சரி கொடு பேசுறேன். ராஜா கயல்  பேசுறேன். என்னால நம்பவே முடியல.கயல் நீயா பேசுற?இரு ஒரு முறை என் கையை கிள்ளி படுத்துகிறேன் நான் பேசுறது கனவா இல்ல நினைவா. ஆ வலிக்குது நிஜம்தான். செல்லம் உன்னை எவ்வளவு நான் கஷ்டப்படுத்தி இருக்கேன் என்னை மன்னிச்சுக்கோ. இல்ல ராஜா நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்ன மன்னிச்சிடுங்க. உன்ன புரிஞ்சுக்காம நடந்துகிட்டேன் இத்தனை நாளா. ப்ளீஸ் கயல் என்கிட்ட மன்னிப்பு எல்லாம்  கேட்காத எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.  எனக்கு ரொம்ப புடிக்கும் உன்ன.நீ என் தேவதை டா. ராஜா பஸ்டு நம்பர் பிரண்டா பேசலாம் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. என்னடா ப்ளீஸ் எல்லாம் கேக்குற நீ  பேசினாலே  எனக்கு போதும். எனக்கு இப்ப பறக்குற மாதிரி இருக்கு தெரியுமா நீ இது மாதிரி என்கிட்ட பேசுவது. இல்ல எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கியா நீ என்கிட்ட பேசறது எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு. நீ ஒரு அஞ்சு நாள் மட்டும் வெயிட் பண்ணு செல்லம் நான் வந்துடுறேன். ஓகே ராஜா  என்றால் கயல். இப்படியே ஐந்து தினங்கள் சென்றன.

இன்று 5வது நாள் மார்ச் 10 கயல் ராஜாவிடம் காதலை சொல்ல வேண்டிய நாள். எப்பொழுதும்போல் அன்று காலை விடிந்ததும் ராஜாவிற்கு கயல் போன் செய்தால் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா. நீ என்ன சொன்ன இன்னொரு வாட்டி சொல்லு. அதெல்லாம் சொல்ல முடியாது எனக்கு இப்பவே உன்ன பாக்கணும் போல இருக்கு கொஞ்சம் வெயிட் பண்ணு மணி இப்ப பத்து.  ரெண்டு மணிக்கெல்லாம்  வந்து விடுவேன். ரஜனிக்கு உனக்கு பிறந்தநாள் பரிசு ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது சீக்கிரம் வா. ஹே கிப்ட்டா அந்த பார் மாட்டீங்கள் எல்லாம் நமக்குள்ள வேணாம். இல்ல எது நீ ரொம்ப நாள் எதிர் பார்த்தது. ரொம்ப நாள்  எதிர்பார்த்தா ப்ளீஸ்  என்னன்னு சொல்லு செல்லம். இல்லை இது நேர்ல வந்தா மட்டும் தான் கொடுக்க முடியும் கிப்ட். ஓகே அந்தளவு சீக்கிரமா வர முடியுமோ அந்த அளவுக்கு சீக்கிரமா வந்தர்றேன்  என்று கூறி போனை கட் பண்ணினேன் இருவரும்.

 ராஜா கயல் சொன்னதைக் கேட்டு மிகவும் ஆர்வமாக இருந்தான்.என்ன பரிசாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். ஊருக்கு கிளம்பி விட்டான். ராஜா வருகின்ற வழியில் சுமதி போன் செய்தாள். அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேங்க் யூ டா பாப்பா. நான் நினைக்கிறேன்  கயல் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க உங்கள. என்னமோ  உங்களுக்கு பெரிய கிப்ட் என்று சொல்லி இருக்கா. சஸ்பென்ஸ் என்று சொல்றா எனக்கென்னமோ லவ்வா இருக்கும் என்று தோணுதுன்னா. நிஜமா சொல்றியா டா கயல் காதலுக்கு சம்மதம் சொன்னாளா. ஆமாங்கனா ஆனா இன்னும் சரியா சொல்லல வாங்க பேசிக்கலாம். ஓகேடா நான் கிளம்பி வந்துட்டு தான் இருக்கேன் வந்து தரேன்.

 கயல் ராஜாவுக்கு பிடித்தமாதிரி புடவை அணிந்து கொண்டு, பூ வைத்து ஒரு மணப்பெண்ணை போல், தேவதை போல் காட்சி அளித்தாள். ராஜா சுமதி சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். கயலை  பார்த்து இருபது நாள் ஆகிவிட்டது ஏதாவது நாமும் பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கயலுக்கு பிடித்த கலரில் ஒரு புடவையும்,தங்க வளையலையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். மிகவும் சந்தோசமா இருந்தால் நிதானத்தை இழந்து தனது வண்டியில் உள்ள  சைடு ஸ்டாண்டை  எடுக்க மறந்து விட்டான். இன்னும் அரை மணி நேரத்தில் கயிலை சந்திக்கப் போகிறோம் என்ற ஆர்வம் அவனுக்குள் அதிகமாக இருந்தது. இன்னும் வேகமாக வண்டியை ஓட்டினால் இன்னும் சீக்கிரமாகவே கயலை  பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் வேகமாக வண்டியை ஓட்டினான். அடுத்த கணமே இதுவரை நம் இக்கதை எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு நடந்தது. அது என்னவென்றால் எதிரே வந்த லாரியின் மீது ராஜாவின் பைக் மோதி விட்டது. காரணம்  சைடு ஸ்டாண்ட் எடுக்கப்படவில்லை, வண்டியின் வேகமும் அதிகமாக இருந்தது.  இதனால் நிலை தடுமாறி எதிரே வந்த லாரியின் மீது  இடித்து  விட்டான் ராஜா.

 “ஒருபுறம் மணக்கோலத்தில் கயல். மறுபுறம் பிணக் கோலத்தில் ராஜா”. ஆம் ராஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

 கயல் ராஜாவின் வருகையை வழி மேல் விழி வைத்து பார்த்தாள். ஆனால் ஐயோ பாவம்!அவளிடம் ராஜா வரவில்லை ராஜாவின் பரிசு மட்டுமே வந்தது. ராஜா உயிரிழந்த செய்தியை கேட்டு மயக்கம் அடைந்தால் கயல். மூன்றாம் நாள் ராஜாவின் இதயத்தில் மட்டுமல்ல கல்லறையிலும் இடம் வாங்கினாள் கயல்.

” கள்வனின் காதல் கை கூடும் நேரத்தில்

 பாசானின் கயிற்றால்  உயிர் பிரிந்தது “.

 ஒருவர் மேல் வைத்த பாசம் உண்மை எனில் அது நம்மளை என்றுமே இணைத்து விடும் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம். ராஜாவைப் போல் நீங்களும் ஒரு நிமிடம் யோசிக்காமல் இருந்து விடாதீர்கள் ஒரு நிமிடம் யோசித்து சைடு ஸ்டாண்ட் எடுத்திருந்தால் இன்று அந்த அவல நிலை இல்லாமல் இருக்கும்.

    ” சந்தோஷத்திலும்

        கோபத்திலும்

       நிதானம் தேவை

                – இல்லையென்றால்

                         நம் வாழ்வே

                         கேள்விக்குறியாய் மாறிவிடும் “.

 வாழ்க்கையில் சேர முடியாமல் எமன் தடுத்தாலும் மரணத்தில் இணைந்து விட்டனர்.” இப்பூவுலகில் மனிதர்கள் வாழும் வரை இவர்கள் காதலும் வாழும்”. இது ஒரு உண்மை கதை.

        ” இங்கே

               இரு இளம் காதலர்கள்

        கல்லறையில் ஒன்றிணைந்து உள்ளார்கள்

               இங்கேயும் எமனே வந்து விடாதே!                    

               அவர்களை வாழ விடு…                     

நிறைவு பெற்றது.                       

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

1 comment

  1. பி சண்முகவடிவு - Reply

    கதை ஓக்கே , முடிவு சரியில்லை

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!