காதல் கவிதைகள் சிறுகதை- போட்டி கதை எண்- 02

0
(0)

‘காதல் கவிதைகள்’ என்ற சிறுகதை எழுதியவர் எஸ் வீ ராகவன்

காதல் கவிதைகள்

என் பெயர் ரவி. அரசு வங்கியில் பணி. சொந்த ஊர் தென்காசி. பெற்றோர் தம்பி அங்கே உள்ளனர். சென்னையில் இடைகால பணி.‌ ஒரு வருடம் பிறகு தென் காசி கிளையில் ஒரு பணியிடம் காலியாகும் என சொன்னதால் தற்காலிக   பயிற்சி இடம் இது. இங்கு‌ தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளேன். ஊரில் அப்படியே இருந்து பழகி விட்டது. எனக்கு தனிமை பிடிக்கும். மற்றவர்களிடம் நெருங்கி பழக பயம். அடிக்கடி மெரினா கடற்கரை செல்வேன். இசை கேட்பேன். ஒரே பொழுது போக்கு கவிதை படித்தல் பல நேரம் கவிதை எழுதல் சில நேரம்.‌

மாலை நேரம். கடற்கரை ஓரம் மணல் வெளியில் காதல் ஜோடிகள் மனம் திறந்து பேசி கொண்டு இருந்தனர்.‌சில குழந்தைகள் பட்டம் விட்டு கொண்டு இருந்தனர்.‌ சிறு‌ குழந்தைகள் மண் வீடு கட்டல். ரங்கராட்டிணம் சுற்றல் என இருந்தனர். உணவு விரும்பிகள் சுண்டல் பஜ்ஜி ஐஸ்கிரீம் என் கொறித்து கொண்டு இருந்தனர்.

அப்போது “ஓடாதே பாப்பா…நில்லு.” என பெண் ஒரு  குழந்தையை துரத்தி ஓடி வந்தாள். கடற்காற்றில் முடி கலைந்து இருந்தாலும் களையாக இருந்தாள்.

மண்ணில் கால் புதையுண்டு குழந்தை “அம்மா…” என அருகில் விழுந்தது. எனக்கு பாசம் பிறிட ஓடி சென்று குழந்தையை தூங்கினேன்.  அதற்குள் “ரொம்ப நன்றி…‌ சார்”… உங்களை வங்கியில் பார்த்து இருக்கிறேன். நாளை வருகிறேன்.. என ஒரு பெண் சொல்லி விட்டு குழந்தையை பெற்று சென்றாள்.‌

******1*******

தேவதை அருகில் அழைப்பு

அவள் குரல் மிகவும் இனிப்பு

ஒருபுறம் மல்லிகை மணம் தலை’ப்பு (பூ)

மறுபுறம் தென்றல் தாலாட்டி களிப்பு

குழந்தை போல் புன்சிரிப்பு

ஓரமெங்கும் கடை விரிப்பு

முதியோர் நடந்து வந்த களைப்பு

காதலர்கள் பேச்சில் மலைப்பு

குதிரை ஓட்டி சிலர் பிழைப்பு

பெண்களின் வீட்டு நிலை விசாரிப்பு

நண்பர்கள் அரட்டை அடிப்பு

அலைகள் காலை நீராட்டும்

சூரிய வணக்கம் பாராட்டும்

கலங்கரை விளக்கம் ஒளியூட்டும்

மின்விளக்கும் நிலவு வழிகாட்டும்

முறுக்கு சுண்டல் விற்பனை

பார்த்து பிறந்தது கற்பனை

என் கவிதை பிறந்தது

ஒரு காகிதத்தில் எழுதி வைத்து கொண்டேன். தேவதை என் தலைப்பு வைத்தேன். இரவு‌ வெகு நேரம் தூக்கம் வரவில்லை.

வீட்டுக்குள் வந்ததும் அந்த பெண் குரல் காதில் ஒலித்தது. மல்லிகை மணம் மனதை மயக்கியது. கடற்கரை மணல் போல் நினைவுகள் ஒட்டி கொண்டது.

காலை பூக்கடை தாண்டி போகையில் மீண்டும் மல்லிகை மணம் இழந்தது.

நினைவுகள் மனதில் தோன்றியது. பேருந்தில் அலுவலகம் செல்ல ஏறினேன்.

‌ “பாப்பா..‌ பஸ்சில் தண்ணீர் கொட்ட கூடாது..” வேகமாக திரும்பி பார்த்தேன். அதே குரல் ஆனால் வேறு பெண். குழந்தையின் அம்மா.

ஆனால் மனசு அவளை தேட ஆரம்பித்தது ஒவ்வொரு செயலும் அவளிடம் முடிந்தது.‌

வங்கியில் நெரிசல் மிகுந்த நேரம். “இந்த அக்கவுண்ட் எவ்வளவு பணம் இருக்கு பாத்து சொல்லுங்க.. அவசரம்…” பெண் குரல் கேட்டு டக்கென நிமிர்ந்து பார்த்தேன்..‌ கண்னை நம்ப முடியவில்லை.

அவளே தான்..

******2******

கனவு இன்று நனவு

நினைப்பு தந்த பிரமிப்பு.

உடுப்பு ரொம்ப எடுப்பு

சிரிப்பு பார்த்து மலைப்பு

அலுப்பு நீக்கும் வனப்பு

சிலிர்ப்பு மூட்டும்.துடிப்பு

களைப்பு போக்கும் அமைப்பு

தடுப்பு ஊட்டும் இழுப்பு

இழப்பு ஆனால் தவிப்பு

அன்பு ஆகுமா நீடிப்பு

_என் கவிதை கொட்டியது

அவசரம் அவசரமாக விபரம் கேட்டால் முகத்தில் என்ன பார்க்கரீங்க..‌ பதில் என புத்தகம் நீட்டினாள். பதில் சொல்லாமல் பத்தாயிரத்து எட்டு நூற்று இருபது என சொல்லி புத்தகம் திரும்ப தந்தேன். இம்முறை அவள் போட்டு வந்த சந்தன செண்ட் மணம் மனதில் புகுந்தது. சுடிதார் துப்பட்டா காற்றில் கழுத்தை வருடியது.

இரண்டு நாட்கள் சந்தன வாசமும் துப்பட்டா ஞாபகம்.

சனிக்கிழமை மாலை அலுவலகம் முடிந்து காய்கறி வாங்கி கொண்டு இயர் போன் கடைகள் பக்கம் போனேன்.

“ரொம்ப நன்றி சார். என்ன வேணும்..”

கடை உள்ளிருந்து அதே குரல்..

“எல்லாரும் பிசின்னு எழுதி தரலை. நீங்க எழுதி தந்து பிறகு எங்கப்பா பென்சன் பணம் வந்தது தெரியும்.‌ அப்பா உயிரோட இல்லாமல் அம்மா கஷ்டபடுராங்க. வங்கி கடன் கட்ட கடைசி நாள் அதான்..

“நான் இந்த செல் கடையில் வேலை செய்யறேன்… குறைந்த சம்பளம் இருந்தாலும் வீட்டுக்கு அருகில்…. அம்மாவிற்கு பண உதவி செய்வது மகிழ்ச்சி. என் வருத்தத்தை சொன்னாள். தேவதை கவலை அடைவது பிடிக்காமல் நம்பிக்கை கொடுக்கும் வகையில்

“பாராட்டுக்கள்…‌இந்த வயதில் ரொம்ப பொறுப்பு. அம்பாள் பசங்க போல தைரியம்..”.‌ என புகழ் அவள் முகத்தில் ஒளிவந்தது பயம் போனது.‌

“பென்சன் படத்தில் ஐயாயிரம் நகை கடன் கட்டி விட்டேன். மீதி இம்மாத செலவு.‌ என் சம்பளம் வீட்டு வாடகை மளிகை சாமான் பால் பாக்கெட் சரியா போச்சு. விலைவாசி தினமும் ஏறுது. சம்பளம் ஏறுதா…” என் கேலியாக சிரித்தாள். இயர் போன் வாங்கி கொண்டு திரும்பும் போது… பில்லை பார்த்தேன். செல்வி என முத்து முத்தாக கையெழுத்து மனதில் கல்வெட்டாக பதிந்தது.

அங்கு வந்த ஒரு அம்மா…

இரவு‌ எட்டு மணி ஆச்சு வீட்டுக்கு போகலாம் வாம்மா.. கல்யாணம் ஆகாத பொண்ணு இரவு நேரம் கழித்து அனுப்ப கூடாது உன் முதலாளிக்கு தெரியாது.. என அவள் அம்மா அழைக்க வந்தாள். அவளை போன்ற உருவம்… குரல்…

*******3*********

குரலின் ரீங்காரம்

தாயின் பிரதிபிம்பம்

அன்பின் அடையாளம்

பண்பின் அங்கீகாரம்

மனதில் நங்கூரம்

மணக்கும் சந்தனம்

இனிக்கும் தினந்தோறும்

கவலைகள் தீர்க்கும்

நம்பிக்கை கொடுக்கும்

என்னோடு வாழும்

கவிதைக்கு அர்த்தம்

கை சேர வேண்டும்

ஏன் இப்போது எல்லாம் கவிதை மயம் அவளை பார்த்த பிறகு தான் இப்படி தோன்றுகிறது.‌ நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் வெகு நேரம் தூக்கம் வரவில்லை. அவள் நினைவு வளையம் சிக்க வைத்தது.‌ நான் மாட்டி கொண்டேன்.

அடிக்கடி காய்கனி . கடையில்…‌ வங்கியில் அவளை பார்க்க பரவசம். குற்றாலம் அருவி மனதில் பாய்ந்தது. அங்குள்ள மந்தி போல மனது அவளிடம் தாவியது‌

ஒரு வாரம் வேகமாக போனது.‌ அலுவலகம், வீடு, தொலைக்காட்சி, பெற்றோர் தொலைபேசி உரையாடல் என கழிந்தது. இருந்தும் இதுவரை வீட்டில் சொல்லவில்லை.‌அடுத்த வாரம் தீபாவளி. அனைவருக்கும் உடை வாங்கி செல்ல வேண்டும்.‌அதில் அவளுக்கும் அவள் அம்மாவிற்க்கும் சேவை வாங்க தீர்மானம். ஊருக்கு சென்றவுடன் அம்மாவிடம் பேசி விட்டு முடிவு எடுக்கும் எண்ணம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பொழுது போகாமல் அருகில் உள்ள .பூங்காவில் அமர்ந்தேன். அப்போது குழந்தை அம்மாவுடன் அவள் வந்தாள் .‌எனக்கு உற்சாகத்தில் தலைகால் புரியவில்லை…மனசு இறக்கை கட்டி பறந்தது

******4*******

பூக்கள் வாசம் மலரும்

வண்டுகளை அருகில் இழுக்கும்

குழந்தை ஆட்டம் பாட்டம்

மரங்கள் சுற்றி ஓட்டம்

பெரியோர்கள் நிம்மதி கூட்டம்

இளைஞர்கள் உற்சாகம்

பெண்கள் சமையல் குறிப்பு

காவல்துறை பாதுகாப்பு

ஊழியர்கள் பராமரிப்பு

பூங்கா ரொம்ப ஜொலிப்பு

_என கவிதை அருவியாய் கொட்டியது

அடுத்த முறை பார்க்கும் போது. காதலை சொல்ல வேண்டும் என உறுதி எடுத்தேன். இருந்தும் இரு வீட்டாரும் ஒத்து கொள்வார்களா? என்ற பயம்.‌அவள்.வறுமை பொருளாதார சிக்கல். என் பெற்றோர் கெடுபிடி.. என் பல நினைவுகள் சூழ்நிலையை பிரச்சினை ஆக்குமா?. என் மனதை வாட்டியது. இருந்தும் கனவுகள் அவளை சுற்றியே வந்தது.‌ கடற்கரை வங்கி கடைவீதி பூங்கா என எங்கும் அவள் ஞாபகம்.‌ கவிதை புத்தகம் திறந்து பார்க்க தயங்கிய காலம் உண்டு இப்போது அடிக்கடி திறக்கிறேன். அதில் என் கவிதைகள் இடம் பிடித்தது. தனிமையை மேலும் ரசிக்க ஆரம்பித்தேன். காதல் பாடல்கள் ருசிக்க துவங்கினேன். உணவு குறைந்து வருகிறது. நினைவு அதிகமானது.

ஊருக்கு பேருந்து ஏறினேன். பண்டிகை தினம் முன்னரே பதிவு செய்து இருந்தேன். அதனால் நிம்மதி. இரவு முழுவதும் பயணத்தில் உறக்கம். முடிந்ததும் காலை ஊரை சேரும் போது நிம்மதி. சொந்த மண். நண்பர்கள் கூட்டம். தீபாவளி கொண்டாட்டம். பெற்றோரை பார்க்க வேண்டும் என உற்சாகம். அத்தோடு செல்வி பற்றி பேசி முடிவெடுக்க வேண்டும்.

********5*********

அலை அலையான எண்ணங்கள்

எதிர்கால வண்ணங்கள்

பெற்றோர் விருப்பங்கள்

மனதுக்கு ஏற்றங்கள்

சமுதாய மாற்றங்கள்

காதல் கவிதைகள்

நாளை நிறைவேறும்

நம்பிக்கை உற்சாகம்

எதிர்பாராத திருப்பம்

புது வாழ்க்கை துவக்கம்

 

ஊருக்கு சென்று வீட்டை அடைந்தேன்.‌ குளித்து விட்டு அனைவருக்கும் இனிப்பு மற்றும் உடைகள் தர மகிழ்ச்சி பிறந்தது முக்கியமாக அம்மா மற்றும் தம்பி மிக சந்தோஷம்

எப்ப இங்கு மாற்றல்?

அப்பா கேள்விக்கு ஆறு மாதங்கள் கழித்து.. என் ஓரே வரியில் பதில் சொன்னேன்.

என்னமோ தெரியலை….‌ அப்பாக்கள் அதிகார தோரணையா? விசாரணை கேள்வியா? பதில் சொல்ல பிடிக்கவில்லை.‌ ஆனால் அம்மா விருந்து உபசரிப்பு.‌ அன்பான கேள்விகளில் குழைத்து போகிறோம். இரு துருவங்கள் வாழ்க்கையில்..

அம்மாவிடம் மெல்ல பேச்சு ஆரம்பித்தேன். முதலில் எதிராக சொன்னாலும் மகனை ஆசைகள் நிறைவேற்ற தாயே கதி. கடைசியில் ஒத்து கொண்டு

அப்பாவை சம்மதம் சொல்ல வைக்கும் முயற்சியில் அம்மா ஈடுபட்டார்.‌ அவர் கோபத்தில் பதில் பேசவில்லை.. அப்பாவை சாதி ஏற்ற தாழ்வு ஆரம்பித்து பல விஷயங்கள் சுற்றி வந்த பின்

“முதலில் அவர்கள் பெண் வீடு சம்மதம் சொல்லட்டும் எனக்கு ஒரு பிரச்சினை இல்லை. பையன் சந்தோஷமாக வாழனும். நிம்மதியாக இருக்கனும்” என்றார்.

பெரிய பிரச்சினைகளை அரை மணிநேரத்தில் அம்மா முடித்து வைத்தார்.  சந்தோஷமாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விண்ணை விட்டு வெளியே வந்தேன்.

முதலில் கேலி கிண்டல் என செய்தாலும் காதல் திருமணம் வாழ்க்கையில்

மறக்க முடியாத தருணங்கள். வாழ்த்துக்கள் சோல்லி அனுப்பினார்கள் பள்ளி கல்லூரி நாட்களில் காதலில் விழவில்லை. இன்று விழுந்து விட்டார். காலத்தை நேரத்தை மாற்ற முடியாது.

கவலைகள் தீர்ந்து நிம்மதியாக சென்னை நோக்கி பயணம் ஆரம்பித்தேன்.. அடுத்த முறை செல்வியுடன் வந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம்.

முற்றும்.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

1 comment

  1. Rani Balakrishnan - Reply

    கவிதையும் கதையும் நன்று . வாழ்த்துகள்

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!