‘கந்துவட்டி கொடுமை’ என்ற சிறுகதையை எழுதியவர் ப. நந்தக்குமார்.
கந்துவட்டி கொடுமை
மதி ஒரு எளிமையான விவசாயி. மதி என்ற பெயருக்கு ஏற்றபடி நிலவினை போன்று கள்ளம் கபடம் இல்லாதவன்.மதிக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. மனைவியும் ஒரு கூலித்தொழிலாளி. அன்றாடம் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தனர். மதியின் மகள்கள் இருவருமே மிகவும் புத்திசாலிகள் படிப்பில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் மிகவும் அறிவாளியாக செயல்படுகின்றன அதிலும் கடைக்குட்டி நம் கோடு கிழித்தால் அதில் ரோடே போடுவாள். அந்த அளவிற்கு மிகவும் புத்திசாலி திறமையானவள்.
மதியின் மகள் நித்தியா, சத்தியா. இருவரும் இரட்டை குழந்தைகள். “அழகான குடும்பத்தில் பாசப் பறவைகள் சிறகடித்து வாழ்ந்து வந்தார்கள்”. மதிக்கு சொந்தமாக நிலங்கள் கொஞ்சம் இருந்தன அதில் விவசாயம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஆரம்ப காலத்தில் மதின் மகள்கள் இருவருமே அரசு பள்ளியில் படித்து வந்தனர்.அப்போதெல்லாம் அவருக்கு அனைவரும் தன் மகளை புகழ்ந்து புகழ்ந்து பேசுவது மிகவும் பிடிக்கும் சத்யாவின் தந்தை மதி என்பதில் பெருமிதம் கொண்டார்.
பத்தாம் வகுப்பில் சத்தியா, நித்யா இருவரும் நல்ல மதிப்பெண்களை எடுத்தனர். பின்பு பன்னிரண்டாம் வகுப்பிலும் 90 விழுக்காடு மேலேயே மதிப்பெண்ணை எடுத்தனர். சத்யாவை டாக்டராக பார்க்க வேண்டும் என்பது மதியின் கனவு நித்யாவிற்கு டாக்டர், வக்கீல் மீதெல்லாம் விருப்பம் இல்லை அப்பாவின் வயல்களில் வேலை பார்க்க வேண்டும் அதற்காகவே விவசாயத் துறையை தேர்ந்தெடுத்து படித்தார். இருவரின் படிப்புச் செலவிற்கும் முக்கால் சதவீதம் அரசு இட ஒதுக்கீடு செய்தது. மீதமிருந்த கால் பகுதிக்கு படிப்பு செலவிற்காக தனது வயலில் அடகு வைத்தார்.
இப்படித் தனக்கு சோறு போட்ட நிலத்தை அடகு வைத்தது தன் மகள்களுக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் மதி தன் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே வயலை அடகு வைத்தார்.
ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு வறுமை தென்படவில்லை. நாள்பட நாள்பட வேலைவாய்ப்பு குறைய தொடங்கிய பொழுது வறுமை தலை விரித்து ஆட தொடங்கியது. தான் எவ்வளவு பசியும் பட்டினியுமாக இருந்தாலும் தன் மகளிடம் காட்டிக்கொள்ளவில்லை. மதிக்கிற ஒரே ஆறுதல் மகள்களின் புன்சிரிப்பை காண்பது மட்டுமே ஒருகட்டத்தில் வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இவர் நிலத்தை அடகு வைத்த
கொடூர கார் அவர் ஒருநாள் வட்டியை செலுத்தாவிட்டால் கணக்கை முடித்து விட்டு புது கணக்கை தொடங்கி விடுவார். இப்படி இருக்கையில் ஒரு நாள் வட்டி செலுத்த முடியாமல் போய்விட்டது. எப்படியோ கெஞ்சி கதறி காலில் விழுந்து பின்னர் மனம் இரங்கினார். இன்று ஒரு நாள் மட்டுமே உனக்கு அவகாசம் அளிக்கப்படும் பின்பு இதே நிலை தொடர்ந்தால் புது கணக்கு ஆரம்பிக்கப்படும் என்று கூறிவிட்டு கந்துவட்டிக்காரன் சென்றுவிட்டார். அன்று எப்படியும் பத்து அக்கம்பக்கத்தில் வாங்கி வட்டியை கட்டி விட்டனர்.
இதேபோன்று மற்றொரு மாசம் இந்த நிலையே தொடர்ந்தது அப்பொழுது அவருக்கு உதவ யாரும் இல்லை எனவே வட்டி கணக்கை முடித்து விட்டு புதுக்கணக்கை ஆரம்பிக்கிறார். இன்னொரு வட்டி போட்டு இதனால் மனம் நொந்து போன மதி என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவித்து இருந்தார். தன் மன வருத்தத்தை சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை மகள் நித்யாவும் சத்யாவும் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தனர். ஒருவேளை மட்டுமே உணவு உண்டு இரண்டு வேளை தண்ணீர் குடித்து வாழ்ந்தனர்மதியும், தன் மனைவியும் வாழ்ந்து வந்தனர். இப்படி இரண்டு மூன்று முறை கணக்கை முடித்து விட்டு புது கணக்கு ஆரம்பிக்கவும் பொழுது இனிமேல் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்று எண்ணி தன் நிலத்தை விற்று விட்டார் கந்து வட்டி காரரிடம்.
இப்பொழுது இறுதியாண்டு சத்யாவும் நித்யாவும் படித்து வருகின்ற நிலையில் தன் தந்தையின் நிலை தெரிய வந்தது. இதனால் மகள்கள் இருவரும் மனம் நொந்து இருந்தனர். சத்யாவும் நித்யாவும் கல்லூரி படிக்கும்போது பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பரிசுகளை வென்று பணம் திரட்டி உள்ளனர். தந்தையின் நிலையை அறிந்த உடனே சத்யாவும் நித்யாவும் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு நிலத்தை மீட்டு விடலாம் என்ற எண்ணத்துடன் வீட்டிற்குச் சென்றனர். ஐயோ பாவம் அங்கு இவர்கள் மகள் வருவதற்கு உள்ளேயே அவர் தூக்கு கயிற்றில் தொங்கி விட்டார். ஒருபக்கம் வாங்கிய சிறு தொகை பெரும் தொகையாக மாறிவிட்டது மற்றொரு பக்கம் மகள்களின் முகத்தை எப்படி நான் பார்ப்பேன் என்ற தயக்கம் இருந்தது இப்படி மாறி மாறி யோசி த்து தற்கொலைக்கு தள்ளினார்.
“தான் தான் படிக்கவில்லை
தன் பிள்ளையாவது படிக்க வேண்டும் -என்ற
கனவோடு கல்லூரிக்கு அனுப்பினான் தன் பிள்ளையை
தன் கனவோடு சேர்த்து அவனையும்
மரணக் குழியில் தள்ளியது வட்டிக்கு மேல் வட்டி”.
மதி இன் கனவு நிறைவேறும் முன்னே மதியை மரணம்வென்று விட்டது. காரணம் இதுபோன்ற கொடூர கந்துவட்டி கொடுமை. இதற்கு மதி மட்டும் விதிவிலக்கல்ல நம் சமூகத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு காரணங்களால் விவசாயிகள் ,மற்றும் ஏழை கூலித் தொழிலாளிகள் பல்வேறு பேர் பல்வேறு சமூக சூழலில் தமிழகத்தில் கந்து வட்டியால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதை மாற்ற நாளைய சமுதாயமே முடிவெடுங்கள். “இனி ஒரு விதி செய்வோம் ஜகத்தில் கந்து வட்டி என்ற கொடூரனை அழித்திடுவோம்” வாழ்வோம் பிறருக்கு வாழ்வு கொடுப்போம் கந்துவட்டி ஒழிப்போம் இக்கதையின் மையக்கருத்து பிற்காலத்தில் கந்துவட்டி கருவோடு அளிப்பதே.
நிறைவு பெற்றது.
1 comment