அன்றும் இன்றும் – போட்டி கதை எண் – 28

0
(0)

 

‘அன்றும் இன்றும்’ என்ற சிறுகதையை எழுதியவர் சி.சினேகா

                                    அன்றும் இன்றும்

அன்று சனிக்கிழமை இரவு 9 மணி சென்னை ரயில் நிலையத்தில் இருந்து காரைக்கால் செல்லும் தொடர்வண்டி தயார் நிலையில் இருந்தது. தொடர்வண்டியில் பெண்களுக்கான பெட்டியில் 22ஆம் இருக்கையில் 22 வயது கொண்ட ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். தண்டவாளங்களுக்கு அருகிலுள்ள மின்விளக்குகளை ஜன்னல் வழியே பார்க்கிறாள்.
தான் தொடர்வண்டியில் கடந்து சென்று கொண்டிருக்கும் பாதையையும் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையையும் நினைத்துப் பார்க்கிறாள். டிக்கெட் பரிசோதகர் வந்து அடையாள அட்டையை கொடுஉன் பெயர் என்ன என்று கேட்கிறார். ருத்ரா என்று கூறினாள்.
ருத்ராவிற்கு தாய் மட்டுமே தந்தை தன்னுடைய இரண்டு வயதிலேயே இறந்துவிட்டார். அவள் பிறந்து வளர்ந்ததோ ஒரு கிராமம். ஆறுதல் சொல்ல ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உதவுவதற்கு ஒரு உறவு கூட முன்வரவில்லை. தந்தை இல்லாத குறை தெரியாமல் மகளை வளர்கிறாள் தாய்
இருந்தும் அவ்வப்போது தமக்கு தந்தை இல்லையே என்ற எண்ணம் ருத்ராவின் மனதில் அடிக்கடி வந்து போகும்.
தான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பள்ளி முடிந்ததும் தன் தோழிகள் தனது தந்தையின் வண்டியில் செல்லுவார்கள் தானும் அம்மாவும் நடந்து வீட்டிற்கு செல்லும்போது, எட்டாம் வகுப்பு படிக்கும்போது தன் தோழியுடன் மிதிவண்டியில் செல்லுகையில் இருவருடைய மிதிவண்டியுமே பஞ்சர் ஆகிவிட்டது. அப்போது தன் தோழி தந்தைக்கு போன் செய்து வரவழைத்து சென்றுவிட்டார்.
ருத்ராவோ மிதிவண்டியை கடையில் போட்டுவிட்டு பேருந்து வரும் வரை வீடு சென்றாள்.மறுநாள் காலையில் பொழுது விடிந்ததும் மிதிவண்டியை எடுப்பதற்காக நடந்த கடைக்கு செல்கிறாள்.இருவருடைய மிதிவண்டியுமே இன்னும் தயாராகவில்லை. சிறிது நேரம் கழித்து தன் தோழிஉடைய தந்தை அங்கு வந்து மிதிவண்டியை கேட்கிறார் தன்னுடைய மிதிவண்டியை பார்த்துக்கொண்டிருந்த கடைக்காரர் அப்படியே போட்டுவிட்டு தன் தோழிஉடைய மிதிவண்டியை பார்க்கிறார். இதைப்பார்த்த ருத்ராவிற்கு “நான்தான முன்னாடி வந்தேன் அப்பறம் ஏன் அவருக்கு முன்னுரிமை” என்று மன வருத்தம் அடைகிறாள். கடைக்காரரிடம் கேள்வி கேட்க மனம் ஏங்குகிறது இருந்தாலும் ஒரு பயம்.
பத்தாம் வகுப்பு படிக்கையில் பள்ளியில் ஒரு நாள் இரவு மணி10 ருத்ரா கண்களில் கண்ணிர் மல்க சாலை ஓரம் நின்று கொண்டு இருந்தாள்.காவலர் ஒரவர் பார்த்து விட்டு விசாரிக்க “ தனக்கு தந்தை இல்லை, தான் முதல் மதிப்பெண் பெற்தற்காக இரண்டு நாற்காளிகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கிதை எடுத்து செல்ல வழி தெரியால் நிற்பதாகவும் கூறினாள்.” காவலர் மனவறுத்தம் அடைத்து விட்டிற்க்கு அழைத்து செல்கிறார். வண்டியில் செல்லும்போது ‘என் மா அழுற’ என்று கேட்க தான் வந்ததது அம்மாவிற்கு தெரியாது பள்ளியில் இருந்நு நேடியாக வந்துவிட்டதாகவும் கூறினாள்.
வண்டியை நிறுத்துங்கள் என்று மாணவி கூற அங்கு உள்ள பள்ளி வாசலில் அம்மா நின்று கொண்டு இருந்தார். காவலர் வண்டியில் இருந்து மகள் கண்ணிருடன் இறங்கியதை கண்ட தாயின் மனம்….,இதயத்தில் விழுந்த இடியை விட கொடுமையானது.
பரிசு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வழி தெரியாமல் நின்றபோது இப்படிப் பல இடங்களில் தனக்கு தந்தை இல்லாத வருத்தம் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருந்தது.
இதனை ஒரு தடவைகூட தாயிடம் காட்டிக்கொள்ளவில்லை ருத்திரா.
11ஆம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி மாணவன் ஒருவன் அடிக்கடி கேலி செய்து கொண்டிருந்தான் ருத்ராவை அப்படி ஒருமுறை நண்பர்களுடன் சேர்ந்து “ருத்ராவுக்கு தான் அண்ணன் அப்பா தம்பி அப்படின்னு கேக்கறதுக்கு யாரும் இல்ல அப்புறம் என்ன” என்று கேலி செய்தனர்.அதுவரை அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்த ருத்ராவிற்க்கு கண்கள் சிவக்க கோபம் வந்தது.தன் அம்மாவிடம் கூறவில்லை, ஆசிரியரிடம் கூறவில்லை, நேராகச் சென்று அம்மாணவனின் கன்னத்தில் இவளுடைய நான்கு விரல்களும் பதிய அறைந்துவிட்டு “உன் அப்பா என்ன காயம் என்று கேட்பார்கள் ஒரு பொண்ணு அறைந்துவிட்டாள் என்று கூறு”என்று சொல்லிவிட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு புறப்பட்டு விட்டாள் ருத்ரா. வீட்டிற்குச் சென்றதும் செய்திகளில் பெண்கள் மீது ஆசிட் அடிப்பது, கொலை செய்வது போன்ற செய்திகளைக் கேட்டதும் ருத்ராவிற்கு மிகுந்த பயம் ஏற்பட்டு விட்டது. பள்ளிக்கு செல்வதா? வேண்டாமா? என்ற எண்ணம் தோன்றியது. என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள் மனமே என்று சொல்லி விட்டு மறுநாள் எப்பொழுதும் போல் பள்ளிக்கு செல்கிறாள் ருத்ரா.
ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக அம்மாணவன் பள்ளிக்கு வரவில்லை. அதிலிருந்து மற்ற மாணவர்களும் ருத்ரா பக்கம் கூட திரும்பிப் பார்ப்பதில்லை. பயத்திலிருந்து விடுபட்டு கொஞ்சம் தைரியமாக பெண்ணாக மாறினாள். தன்னுடைய மிதிவண்டிக்கு கூடை வைப்பதற்கு அதே கடைக்கு செல்லுகிறாள் ருத்ரா. மிதிவண்டி போட்டுவிட்டு “கூடை வைத்து தாருங்கள் அண்ணா” என்று கூறுகிறாள்.அதே சமயம் தன் தோழி உடைய தந்தை அங்கு வந்து தன் வண்டிக்கு காற்றடித்து கொடுக்குமாறு கேட்கிறார். இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு ருத்ராவின் மிதிவண்டியை அப்படியே போட்டுவிட்டு செல்ல, அதற்கு ருத்ரா “முதலில் வந்தது நான் முதலில் என் மிதிவண்டியை சரிபார்த்து விட்டு அவர்களுக்கு காற்றடித்து கொடுங்கள்” என்று கூறுகிறார். அதற்கு கடைக்காரர் காற்றடிக்க இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். இறுதியில் தன் தோழி உடைய தந்தையை முதலில் ருத்ரா உடைய மிதிவண்டிக்கு கூடை வைத்து தாருங்கள் என்று கூறுகிறார். ருத்ராவின் தைரியத்தை பாராட்டுகிறார்.
வாழ்க்கை ருத்ரா விற்கு புரிய தொடங்கியது தன்னுடைய தன்னம்பிக்கையும் தைரியமும் மட்டுமே அனைத்து இடங்களிலும் உதவும் என்பதை நன்றாக புரிந்து கொண்டால் ருத்ரா. பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் மீண்டும் ஒரு விஸ்வரூபம். தன்னுடைய உறவினர் ஒருவர் தன்னை மணந்து வைக்கும்படி தன் தாயிடம் வற்புறுத்துகின்றர். ஓரளவுக்கு வசதி நல்ல இடம் என்பதால் ருத்ராவின் தாயாரும் ஒத்துக்கொண்டார். நிச்சயம் அன்று தான் ருத்ராவிற்க்கு தெரியவந்தது. மிகுந்த கோபம் அடைந்து தன் உறவினர்களைப் பார்த்து “பத்தொன்து வருஷமா கண்டுகொள்ளாத நீங்க உங்க தேவைக்காக எங்களை பயன்படுத்தாதீர்கள் வீட்டை விட்டு வெளிய போங்க” என்று கூற அதற்கு அவர்கள் தன் தாயின் வளர்ப்பு சரியில்லை என்று கூறி விட்டு செல்கின்றனர். இதனால் ருத்ராவிற்கும் அம்மாவிற்கும் இடையே சண்டை நிலவுகிறது. “ஏன்அம்மா அப்பா இருந்தா என்ன படிக்க வச்சு இருப்பாங்க இல்ல” என்று கூற மனம் உருகிய தாய் தன்னுடைய மகளை நன்றாக படிக்க வைக்கிறாள். கடிவாளம் கட்டிய குதிரை போல் ஓடிக் கொண்டிருந்தால் ருத்ரா.கல்லூரி முடிந்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறாள் ருத்ரா.
இதிலிருந்து முதன்முதலில் ருத்ராவிற்கு வருமானம் கிடைத்தது வருமானத்தில் முதல்முறையாக தன் அம்மாவிற்கு ஒரு புடவை எடுத்துக் கொடுக்க நினைக்கிறாள் ருத்ரா.ஆறு வருடங்களுக்கு முன்பு தன் அம்மா ஆசைப்பட்ட அதே புடவையை தேடித்தேடி பார்த்து வாங்கி கொடுக்கிறாள் ருத்ரா. தாய்க்கு சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி அனைவரிடமும் இதை சொல்லி காட்டி சந்தோசமடைந்தாள்.படிப்பு முடிந்ததும் சென்னையில் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்தது. ருத்ராவிற்கு முதல் மாதம் சம்பளம் வாங்கிக்கொண்டு தாயைப் பார்ப்பதற்கு தான் அவள் செல்கிறாள்.இருட்டு என்றுமுதல் மின்கம்பத்திலேயே நின்று விட்டால் அடுத்தடுத்த மின்கம்பங்கள் தெரியாமலேயே போயிருக்கும். செல்லவேண்டிய பாதைக்குநம்மால் செல்ல முடியாது போயிருக்கும்.
வீட்டிற்கு வந்த ருத்ரா முதல் மாத 20 ஆயிரத்தை தன் தாயின் கையில் கொடுக்கிறாள். அதேசமயம் மற்றொரு கையில் வைத்திருந்த செய்திதாளில் தன் கணவருடைய அண்ணன் மகனை குடிபோதையில் தகராறு செய்ததற்காக கைது செய்யப்பட்ட செய்தியும் வந்திருந்தது.
அன்று பெண் குழந்தை பிறந்ததற்காக மிகவும் வருத்தப்பட்ட ருத்ராவின்அம்மா, இன்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள். “ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ வளர்க்கும் விதத்தில் தான் இருக்கிறது” என்று மனதில் நினைத்தாள்.
……நிறைவுபெற்றது….

 

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

6 comments

  1. Suba - Reply

    பெண்களுக்கு முக்கியமானது தைரியம் தன்னம்பிக்கை மட்டுமே

  2. Aakashraj - Reply

    பெண்கள் நம் நாட்டின் கண்கள்….

  3. Varsha - Reply

    நினைத்ததை நினைத்த இடத்தில் பேசும் உரிமை பெண்களுக்கு குறைவு

    • Vel - Reply

      பெண்களுக்கு முதல் எதிரி பயம்

      • Subasri - Reply

        சன்டிவி கயல் மாதிரி இருக்கணும்னு ஆசையா தான் இருக்கு …..

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!