நீ வரும் வரை-9

0
(0)

(முன்கதை சுருக்கம்- பிரியாவும் ரவியும் ப்ரீத்தியை ஹோட்டலில் சந்தித்தனர்….ரவிக்கு சாப்பாட்டை ஊட்டி விடும்படி ப்ரீத்தி சொல்ல , வேண்டா வெறுப்பாக பிரியாவும் ஊட்டிவிட்டாள்…இவை அனைத்தையும் பிரியா,ரவியின் நண்பர்கள் தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்தனர்…எல்லாம் முடிந்து அவர்கள் கிளம்பும் நேரமும் வந்தது)

சரி ப்ரீத்தி உன்ன சந்திச்சதுல எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோசம், அப்போ நாங்க கிளம்பட்டுமா என்று ரவி கேட்க…ப்ரியாவோ ஆள விட்டா போதும் என்ற முகபாவனையில் ப்ரீத்தியின் பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்துகொண்டிருந்தாள்….

அட என்னப்பா அதுக்குள்ளே போகறேனு சொல்றிங்க, இதுக்கு மேல தான் மெயின் பார்ட்டியே இருக்கு…உங்களை கூப்டது ஹோட்டல்ல லஞ்ச் சாப்டறதுக்கு மட்டும் இல்ல…இன்னைக்கு டின்னெர் கூட நாம எல்லாரும் ஒண்ணா தான் சாப்ட போறோம், அது வரைக்கும் நீங்க என் கூட தான் இருக்க போறிங்க….

என்ன பிரியா நான் சொல்றது சரி தான என்று பிரியாவை பார்த்து கேட்க பிரியாவோ அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை ஆட்டினாள்…

பாத்தியா, பிரியா கூட ஓகே சொல்லிட்டா…இனி வேற ஆப்ஷனே இல்ல ரவி…நீங்க என்கூட வந்து தான் ஆகணும் என்று ப்ரீத்தி கண்டிப்பாக கூற, ரவியும் வேறு வழியில்லாமல் ஒத்துகொண்டான்…

சரி ரவி நான் ஒரு கால் பண்ண வேண்டியது இருக்கு, இங்கயே வெயிட் பண்ணுங்க பைவ் மினிட்ஸ்ல வந்துடறேன் என்று கூறிவிட்டு ப்ரீத்தி சென்றது தான் தாமதம் பிரியா கோபத்தில் ரவியை திட்ட ஆரம்பித்துவிட்டாள்…

நீங்க என்ன சொன்னிங்க, ரெண்டு மணி நேரத்துல எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடும், எங்கள விட்டுருவீங்கனு சொல்லிட்டு இப்போ அவ கேட்டதும் சரின்னு சொல்லிடிங்க…என்னால நைட்டு வரைக்கும் உங்களோட நடிச்சிட்டு இருக்க முடியாது..என்று சண்டை போட்டாள்…

நான் ஒன்னும் முதல அவ கேட்டதுக்கு வேகமா தலை ஆட்டல, நீ தான் ஓகே சொன்ன..சரி உனக்கே நைட் வரைக்கும் என்கூட இருக்க விருப்பம் இருக்கு, நான் எதுக்கு நோ சொல்லனும்னு ஒத்துகிட்டேன் என்று ரவியும் பதிலுக்கு பிரியா தான் இதற்க்கு காரணம் என்று பதில் குடுக்க..

ஆமா நீ பெரிய அரவிந்த்சாமி உன்கூட நடிக்க எனக்கு ரொம்ப ஆசை பாரு… உன்கிட்ட நிக்கவே எனக்கு எரிச்சலா இருக்கு..என்று கோவத்தில் பிரியா வார்த்தைகளை விட ( ஆனால் அவளுக்கு தெரியாதே இந்த நாடகம் முடிவதற்குள் ரவியின் நினைவுகளை மனதுற்குள் முடிந்துகொண்டு தவிக்க போவது இப்படி பேசிகொண்டிருக்கும் அவள் தான் என்று)

இவர்களின் சண்டையை தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த இவர்களின் நண்பர்கள் அதற்குமேல் பொறுமை இல்லாமல் சமாதானம் செய்தனர்…இறுதியில் ப்ரீத்தியை நம்ப வைக்க இந்த நாடகத்தை தொடர்வதாக முடிவு எடுக்கப்பட்டது…

போன் பேசிவிட்டு வந்த ப்ரீத்தியை பார்த்தும் ஒன்றும் நடக்காததை போல் எல்லாரும் அவர்களின் இருக்கையில் அமர்ந்துகொண்டனர்….

சரி கிளம்பலாமா ரவி, நான் கால் டாக்ஸி சொல்லிருக்கேன்…வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கு என்று ப்ரீத்தி அழைக்க பில்லை செட்டில் பண்ணி விட்டு மூவரும் கிளம்பினர்…இவர்களின் பின்னாலேயே இன்னொரு கால் டாக்ஸியை பிடித்துகொண்டு கலா,சீனு,தினேஷ்,கீது,ரேணு,மோகன் என அனைவரும் ரவியையும் பிரியாவையும் பாலோ செய்து கொண்டு கிளம்பினர் …

பிரியாவுக்கோ எங்கு தெரிந்தவர் யாராவது பார்த்துவிட்டு வீட்டில் சொல்லிவிடுவாரோ என்று பயம், ரவிக்கோ ப்ரீத்திக்கு உண்மை தெரிந்தால் அவளோடு கல்யாணம் தான் அவன் தலை எழுத்தாய் மாறிவிடும் என்று பயம்..இப்படி ஆளுக்கொரு பயத்தோடு மெளனமாக இருக்க ப்ரீத்திக்கு தான் அந்த காரில் அமர்த்துகொண்டு வர போர் அடித்தது…ஆரம்பித்துவிட்டாள் அவள் விளையாட்டை…

பிரியா நாம போக வேண்டிய இடம் வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகும், அதுவரைக்கும் உன் காதல் கதையை சொல்லேன் என்று ப்ரீத்தி ஆர்வமாக கேட்க..என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு பழைய படத்தின் காதல் கதையை தன்னுடைய காதல் கதையாக மாற்றி பிரியா கூற…

ஹைய்யோ… இப்படிலாம காதலிச்சிங்க, உங்க லவ் ஸ்டோரி வெரி இண்டரஸ்டிங் என்று குதூகலித்தாள் ப்ரீத்தி, இத வச்சு ஒரு படமே எடுக்கலாம் என்று அப்பாவியாக ப்ரீத்தி கூற.,..

இதுக்கு மேல இத படமா எடுத்தா ஏற்கனவே படம் எடுத்த டைரக்டர் கதை என்னோடதுன்னு கேஸ் போட்டுருவாறே என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டாள் பிரியா…

இப்படியே இருவரிடமும் மாறி மாறி கேள்வி கேட்டு கொண்டே இருக்க ரவியும், பிரியாவும் ஏதாவது ஒரு கதையை கூறி சமாளித்தனர்…

இவ முன்னாடி நடிக்கிறதுக்கு படத்துல நடிச்சிருந்தா இந்நேரம் அவார்டே வாங்கிருக்கலாம் என்று உள்ளுக்குள்ளே புலம்பி கொண்டான் ரவி…

ஒருவழியாக அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்தது…அங்கு எந்த சத்தமும் இல்லாமல் இடமே அமைதியாக இருந்தது…எதுவும் புரியாமல் காரிலிருந்து இறங்கி ரவியும் பிரியாவும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்…

இங்க என்ன பிரச்சன பண்ண போறாளோ இந்த ப்ரீத்தி என்று பயந்து கொண்டே அவள் பின்னாலே சென்றனர் இருவரும்…

இவர்களை பாலோ செய்தவர்களோ நடுவிலே அங்கும் இங்கும் தடு மாறி தடுமாறி எப்படியோ வழி மாறமால் வந்து சேர்ந்துவிட்டனர்….

ப்ரீத்தியின் பின்னால் வந்த இருவரும் அவளோடு அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்….அங்கு இருந்த சூழ்நிலையை பார்த்த இருவரும் அதிர்ச்சியும் பயமுமாக எப்படி தப்பிக்க போகிறோமோ, ஒரு பொய்யை சொன்னதற்கா இத்தனை சோதனை என்று தங்களையே நோந்துகொண்டனர்…

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!