நீ வரும் வரை-8

0
(0)

(முன்கதை சுருக்கம்-பிரியாவை தன் காதலியாக நடிக்குமாறு ரவி கேட்டதற்கு ப்ரியாவும் சம்மதிக்க ரவிய,பிரியா மற்றும் அவர்களின் நண்பர்கள் அனைவரும் ப்ரீத்தியை சந்திக்க திருச்சியின் பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு சென்றனர்)

அங்கு இவர்களுக்காக ஏற்கனவே புக் செய்யப்பட்ட டேபிளில் ப்ரியாவும், ரவியும் அமர, மீதி அனைவரும் சற்று தள்ளி இருந்த வேறு ஒரு டேபிளில் ப்ரீத்திக்கு தெரியாதபடி அமர்ந்துகொண்டனர்…

பிரியா வெளியே தைரியமாக காட்டி கொண்டாலும், முன் பின் தெரியாத நபரோடு இப்படி காதலி வேஷம் போடுவதை நினைத்து பார்த்தாலே அவளுக்கு தலையே சுற்றியது..உள்ளுக்குள்ளே இல்லாத சாமியையெல்லம் கும்பிட்டு முடித்துவிட்டு தலையை நிமிர்ந்து பார்த்தால் ரவி பிரியாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்…

என்ன அப்படி பாக்கறிங்க?

இல்ல உன்ன பாத்தா ரொம்ப பயந்து போன மாதிரி இருக்கு என்று ரவி பிரியாவையே உற்று பார்த்தபடி கேட்க …

பிரியாவோ அதெல்லாம் ஒன்னும் இல்ல, நான் எதுக்கு பயப்பட போறேன்…ஒரு ரெண்டு மணி நேரம் உங்க கூட உக்காந்திக்கிட்டு ப்ரீத்தி முன்னாடி உங்க காதலியா நடிச்சிக்கிட்டு ஒரு கப் காபி குடிக்க போறேன்…அதுக்கு எதுக்கு பயப்படனும்…நான்லாம் அப்படி ஒன்னும் பயந்தாகோழி இல்ல, தெரிஞ்சிகோங்க…திருச்சி பொண்ணுங்கள அப்படி ஒன்னும் லேசா எடை போட்டுராதிங்கனு கூறிக்கொண்டே சீட்டில் முழுவதுமாக அமர்ந்துகொண்டு தன் உடல் சைகை மூலம் தான் பயப்படவில்லை என்று ஓவராக பில்ட்அப் குடுத்தாலும் கை காலெல்லாம் பயத்தால் வியர்த்து கொட்ட தான் செய்தது …

பேரர் வந்து ஆர்டரை கேட்க ரவியோ தெரிஞ்சவங்க வரணும், சோ கொஞ்ச நேரம் ஆகும் என்று சொல்ல மறுபடியும் அங்கு அமைதி மட்டுமே வையலின் வாசித்து கொண்டிருந்தது….

மறுபடியும் பிரியா குனிந்து கொண்டு டேபிளின் கண்ணாடியை ஆராய்ச்சி பண்ணும் முயற்சியில் இறங்கிவிட்டாள்…

ரவி,பிரியா பிரண்ட்ஸ் இருந்த டேபிளில் பார்த்தால் ரெண்டு க்ரூப்பும், ரெண்டு அரசியல் கட்சி மாதிரி உர்ர் என்று பிரியா, ரவியையே பார்த்து கொண்டிருந்தனர்…

ஹாய் பிரியா, ஹவ் ஆர் யூ… என்று ப்ரியாவின் தோளில் தட்டியபடி ப்ரீத்தி வந்து அமர்ந்தாள்…

தயங்கியபடியே ஹாய் கூறிவிட்டு ரவியின் முகத்தை பார்த்தாள் பிரியா…

ஹாய் ப்ரீத்தி எப்படி இருக்க என்று ரவி கேட்டுகொண்டிருக்கும்போதே ப்ரீத்தி, ப்ரியாவை முழுவதுமாக பார்த்துவிட்டு பிரியா ஒன்னும் என்ன விட அவ்ளோ பெஸ்ட் இல்லையே என்று சீரியஸாக முகத்தை வைத்தபடி கூற ப்ரியாவும், ரவியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி முழித்தனர்..

அவர்களின் குழப்பத்தை அறிந்துகொண்டவள் போல் ஏய் நான் சும்மா கிண்டல் தான் பண்ணேன், டோன்ட் டேக் சீரியஸ் ஓகே என்று காஷுவலாக சொல்லி விட்டு ஆர்டர் பண்ணிடீங்களா, இல்ல நானே பண்ணிடட்டுமா என்று ப்ரியாவை பார்த்து கேட்க…பிரியா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரவியை பார்த்தாள்…

உடனே ரவி, இல்ல நியே ஆர்டர் பண்ணிடு, உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என்று கூறி நிலைமையை சமாளித்தான்…

ஆனாலும் ரவி உன் எதிர்கால மனைவி ரொம்ப புருசன் பேச்சுக்கு கட்டுபட்டவங்களா இருக்காங்க,சின்ன விஷயத்துக்கு கூட உன் பெர்மிஷன் கேட்கறாங்க என்று குதர்க்கமாக ப்ரீத்தி சொல்ல …

இல்லப்பா அப்படிலாம் இல்ல, புது இடம் ஆச்சே, சோ கொஞ்சம் நெர்வெசா இருக்கா அவ்ளோதான் …

கூட தான் நீ இருக்கியே அப்படி இருந்தும் எதுக்கு பயப்படனும், சரி சரி நான் ஆர்டர் குடுக்கறேன் என்று அருகில் வந்த பேரரிடம் ஆர்டர் குடுக்க மும்மரமானால் ப்ரீத்தி…

அந்த இடைவெளியில் அம்மாதாயே ஒழுங்கா நடிமா, அவ மட்டும் கண்டுபிடிச்சிட்டா நான் தப்பிக்கவே முடியாது என்று கெஞ்சியபடி ரவி கூறிகொண்டிருக்க… என்ன ரவி நான் பக்கத்துல இருக்கும் போதே பிரியாவ மிரட்டிட்டு இருக்க மாதிரி தெரியுது என்று பிரியா கையை பிடித்தபடி ஆர்டர் கொடுத்து முடித்துவிட்ட ப்ரீத்தி கேட்க… நானே மிரண்டபடி தான் இருக்கேன் இதுல எங்க அவள மிரட்டறது என்று உளறிகொட்டினான் ரவி…

என்ன சொன்ன என்று ப்ரீத்தி கேள்வியாய் பார்ப்பதை உணர்ந்த ரவி “அத விடு ப்ரீத்தி நீ எப்படி இருக்க, அத்த மாமா எல்லாரும் எப்படி இருக்காங்க என்று சூழ்நிலையை வேறு திசைக்கு மாற்றினான்…

ஆமா எங்க மேல அவ்ளோ அக்கறை உள்ளவனா இருந்தா நீயே வீட்டுக்கு ஒரு தடவையாவது வந்து பாத்துருக்கணும்…என்று ப்ரீத்தி வருத்தப்பட….

எதுக்கு ப்ரீத்தி பழைய கதை, இனிமே பிரியாவோட அடிக்கடி உங்க வீட்டுக்கு ஒரு விசிட் வந்துடறேன் என்று பிரியாவை பார்த்து கண்சிமிட்டியபடி ரவி கூற…

ப்ரியாவுக்கோ உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தது, எப்ப இந்த டிராமா முடிஞ்சு எஸ்கேப் ஆகறதோ என்று எதிர்பார்த்தபடி இருந்தாள்…

குடுத்த ஆர்டர் வந்துவிட்டது…

என்ன பாத்துட்டே இருக்க பிரியா,சாப்டு என்று ப்ரீத்தி கூற, எனக்கு பசி இல்ல என்று பிரியா மறுத்துவிட்டாள்…

சரி உனக்கு பசி இல்ல, ஆனா ரவிக்கு பசிக்குமே, நீ தானே அவருக்கு ஊட்டி விட போற என்று 100 வோல்டேஜை ப்ரியாவின் மனதிற்குள் இறக்கினால் ப்ரீத்தி…

என்ன ப்ரீத்தி இப்படி பொது இடத்துல, எல்லாரும் பாப்பாங்க, அதலாம் வேண்டாம் என்று சமாளிக்க பார்த்த ரவியை பார்வையால் அடக்கிவிட்டாள் ப்ரீத்தி…

உன் காதலி தான, அப்புறம் எதுக்கு தயங்குற, இப்போ ஊட்டி விடறயா இல்ல என்ன கட்டிக்க போறியா என்று ப்ரீத்தி விளையாட்டாக கேட்க…(உன்ன கட்டிக்கிறதுக்கு இந்த பிசாசுக்கு ஊட்டி விட்டுடுவேன்) என்று மனதிற்குள்ளே கூறியபடி அவ்ளோ தானே ஊட்டிவிட்டா போச்சு, நானே முதல ஊட்டி விடறேன் என்று ப்ரியாவின் வாய்க்கருகில் சாப்படை கொண்டு செல்ல அவனை முறைத்தபடியே வேறு வழியில்லாமல் ஏற்றுகொண்டால் பிரியா…

பிரியா என்ன பாக்கற, இப்போ நீ ஊட்டி விடனும் என்று ப்ரீத்தி விடாபிடியாக பிரியாவையும் ஊட்டி விட கூற மறுத்துபேசமுடியாமல் அவனுக்கு ஊட்டி விட்டதோடு வந்த கோவத்தில் அவன் காலை ஒரு மிதி மிதித்தாள்…

ஆஆஆஆஆஆஆஆஆஆ….. என்று ரவி கத்த என்ன ஆச்சு என்று ப்ரீத்தி பதறியபடி கேட்டாள்…

ஒன்னும் இல்ல கால்ல எறும்பு கடிச்சிருச்சு என்று பிரியாவை முறைத்தபடியே ரவி கூறினான்…இப்படியே ஒருவழியாக சாப்பிட்டு முடித்தனர் மூவரும்..இவர்களை பார்த்தபடியே இருவரின் நண்பர்களோ டென்ஷனில் நகத்திற்கு பதிலாக விரலை கடித்து கொண்டிருந்தனர்…

இதற்க்கெல்லாம் பெரிய ட்விஸ்ட்டாக ப்ரீத்தி வைக்க போகும் ட்விஸ்ட் இனி தான் நடக்க போகிறது என்று தெரியாமல் அந்த பட்சிளம் குழந்தைகள் பிரச்சனை முடிந்தது என்று சற்று நிம்மதி அடைந்தனர்…

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!