நீ வரும் வரை-7

0
(0)

(முன்கதை சுருக்கம்: ப்ரீத்தி கால் செய்து ரவியையும் அவன் காதலியையும் பார்க்க வேண்டும் என்று சொல்ல ரவியோ காதலிப்பதாக ப்ரீதியிடம் நாடகமாடி கொண்டிருப்பதால் இல்லாத காதலியை எப்படி அவளிடம் காட்ட முடியும் என்று யோசிக்கிறான், கடைசியில் ப்ரியாவையே அவன் காதலியாக நடிக்க வைக்க முடிவு எடுக்கிறான்)

இங்க பாருங்க நான் சொல்றத கவனமா கேட்டுகோங்க என்று பெரிய ராணுவ ரகசியத்தை சொல்வதை போல ரவி ஆரம்பிக்க, பிரியா உட்பட அனைவரும் கவனமாக ரவி சொல்வதை கேட்க தயாராயினர்…

எனக்கு போலீஸ் ஆகணும்னு ரொம்ப ஆசை,ஆனா அப்பாவுக்கு நான் அவரோட பிசினஸ் பாத்துக்கணும், அம்மாவுக்கு நான் அவங்ககூடயே இருக்கணும்….அதனால ரெண்டு பெரும் சேர்ந்து எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க நினச்சாங்க…அதுவும் என் அத்த பொண்ணு ப்ரீத்தியயே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சா நல்ல இருக்குமேன்னு முடிவு பண்ணிடாங்க…

ப்ரீத்தி குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ரொம்ப நாளாவே மனகசப்பு இருந்தது, அது கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் சரி ஆனுச்சு, அதுக்கு காரணமும் ப்ரீத்தி தான்.. ஏற்கனவே ப்ரீத்திய என்னோட குடும்பத்துக்கு ரொம்ப பிடிக்கும்…இப்போ சொல்லவே வேண்டாம் ரொம்ப செல்லம் ஆகிட்டா…

ப்ரீத்தி நல்ல பொண்ணு தான், ஆனா ப்ரீத்திய எனோட மனைவியா நினச்சி கூட பாக்க முடியல, அவ எனக்கு ப்ரெண்டா இருக்கலாம் , ஆனா மனைவியா இருக்க முடியாது…அவ மேல அந்த உணர்வு எனக்கு வந்ததும் இல்ல, இனியும் வராது…ஆனா இத யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க…ப்ரீத்தி கூட இத புரிஞ்சிக்கல…

அவகிட்ட நான் எவ்ளோ சொல்லியும் ஒத்துக்கல…நான் என்ன சொல்றேனும் புரிஞ்சிக்கல…இந்த கல்யாணத்த ஸ்டாப் பணனும்னா அவ சொன்னா மட்டும் தான் நடக்கும், அதனால அவ வாயாலேயே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வைக்க நாங்க பொய் சொல்ல வேண்டியதா போச்சு…வேற ஒன்னும் இல்ல, நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்னு சொன்னேன், அத அவளும் நம்பிட்டா…

அவளே வீட்லயும் பேசி இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம், நான் மேல படிக்கணும்னு ரெண்டு வீட்லயும் சொல்லி கல்யாண பேச்சுக்கு இப்போதைக்கு கமா போட்ருக்கா…என்று ரவி தன் கதையை முடிக்க…

சார் இது உங்க பர்சனல் பிரச்சினை, இதுக்கு நாங்க என்ன பண்ண முடியும், பர்ஸ்ட் இதலாம் எங்ககிட்ட எதுக்கு சொல்றிங்க என்று முறைத்தபடியே ப்ரியா கேட்க…

நல்லதா போச்சு நீயே பாய்ண்டுக்கு வந்துட்ட..நான் சொன்னதுல இருந்து உங்களுக்கே தெரியும் எனக்கு காதலின்னு யாரும் இல்லன்னு, ஆனா ப்ரீத்தி என்னையும் என் லவ்வரையும் உடனே பாக்கனும்னு சொல்றா…இப்போ மட்டும் நான் என் காதலின்னு யாரையாவது கூட்டிட்டு போகலைனா அவளுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிரும்…அப்புறம் என்ன நடக்கும், ரொம்ப பேஷா என் கல்யாணம் தான் நடக்கும் என்று ரவி சைகைகளோடு பரிதாபமாக கூற…

சார் அப்போ நீங்க உங்க காதலியா யாரையாவது பொய்யா செட் பண்ணி ப்ரீத்தி முன்னாடி நடிக்க வைங்க…அவளும் நம்பிடுவா, உங்க பிரச்சனையும் தீர்ந்துடும் என்று கீது ஐடியா குடுக்க..

ம்ம்ம் கரெக்ட் அதையே தான் நாங்களும் நினைச்சோம், அதுக்கு தான் இப்போ உங்ககிட்டையும் ஹெல்ப் கேட்கறேன் என்று தன் திட்டத்தை நிறைவேற்றுவதில் பாதி தூரம் வந்துவிட்டான் ரவி…

இதுல நாங்க என்ன ஹெல்ப் பண்ண முடியும் என்று குழப்பத்தோடு கேட்டாள் ப்ரியா…

இன்னுமா புரியல நாங்க போட போற டிராமாவோட ஹீரோயினே நீ தான் என்று தன் திட்டத்தை முழுவதுமாக போட்டு உடைக்க ஆடிபோனார்கள் நால்வரும்…

“என்ன சொல்றிங்க” என்று அதிர்ச்சியில் மூவரும் கேட்க பிரியா மட்டும் பேச கூட முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்…

எதுக்கு இப்படி ஷாக் ஆகறிங்க, ஒன்னும் பெருசா இல்ல, ஒரு ரெண்டு மணி நேரம் என்கூட வந்து என் காதலியா பிரியா நடிச்சா போதும் அதுக்கு அப்புறம் என் பிரச்சனையும் தீர்ந்துடும்…நீங்களும் பணம் தரவேண்டியது இல்ல,உங்களையும் விட்ருவோம் என்று ரவி பாட்டுக்கு இது தான் திட்டம் நீங்க செஞ்சு தான் ஆகனும்னு ரொம்ப பூடகமா சொல்லி முடித்தான்…

கீது,ரேணு,கலா மூவரும் அதலாம் முடியாது என்று ஆர்பாட்டம் செய்ய பிரியா மட்டும் குழப்பத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்…

கீது, ரேணு,கலா மூவரும் திட்டவட்டமாக பிரியா நடிக்க மாட்டாள் என்று கூற…

ரவியோ பிரியா தான் நடிக்கனும்னு அவசியம் இல்ல நீங்க கூட நடிக்கலாம்னு மேலும் ஒரு அதிர்ச்சியை மூவருக்கும் கொடுத்தான்…

எங்கு தன்னை நடிக்க சொல்லிவிடுவானோ என்று பீதியில் மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியே அமைதியாக நின்றுவிட்டனர்…

ஆனால் பிரியா இப்பொழுது பேச ஆரம்பித்தாள்…நான் நடிக்கிறேன்..ஆனா சொன்னபடி இந்த நாடகம் முடிஞ்சதும் எப்பவுமே எங்கள நீங்க தொந்தரவு செய்ய கூடாது என்று கூறியவுடன் ரவியும் கண்டிப்பா அதுக்கப்புறம் உங்களுக்கு எங்களால எந்த பிரச்சனையும் வராது என்று வாக்கு கொடுத்தான்…

ரவியின் திட்டம் வெற்றி அடைந்ததை நினைத்து தினேஷ்,சீனு,மோகன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்…

ப்ரியாவின் இந்த திடீர் முடிவால் குழப்பமடைந்த கலாவும் மற்றவர்களும் அவளை தனியே இழுத்து சென்று

“ஏய் பிரியா நீ என்ன லூசா? அவன் தான் சொல்றானா நீயும் சரின்னு சொல்லிட்ட, இதனால எவ்ளோ பெரிய பிரச்சன வரும் தெரியுமா என்று ஆவேசமாக அவளை கேள்விகளால் துளைக்க..

தெரியும்டி,ஆனா இப்போ மட்டும் இத நாம செய்யலைனா அத விட பெரிய பிரச்சன வரும்..எப்பவோ வர பிரச்சனைக்கு கண்ணு முன்னால நிக்கற இத நாம செய்யாம விட்டா இப்பவே நாம எல்லாரும் வீட்டு ஜெயுளுக்குள்ள இருக்க வேண்டியது தான் என்று அவள் விளக்கி கூற பிரியா எடுத்த முடிவே சரி என்று பாதி மனதோடு மூவரும் ஏற்று கொண்டனர்…

திரும்பி வந்த நால்வரையும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ரவி…

உங்க திட்டத்துல நடிக்க எனக்கு சம்மதம், நான் என்ன பண்ணனும் என்று பிரியா கேட்க, பெருசா நான் அவகிட்ட உன்ன பத்தி அதாவது என் காதலிய பத்தி எதுவும் சொல்லல….அதனால பிரச்சன இல்ல,ஆனா ரெண்டு பெரும் எல்லாத்தையும் ப்ரீபர் பண்ணிக்கிட்டு போகணும், இல்லனா அங்க போய் எல்லாம் சொதப்பலா முடிஞ்சிடும் என்று சில விஷயங்களை மட்டும் முன்கூட்டியே அவளுக்கு சொல்லி கொடுத்தான் ரவி …

அப்புறம் நீங்க எல்லாரும் எங்ககூடயே வரலாம்..ஆனா ஒண்ணா இருக்க வேண்டாம்…நீங்க கொஞ்சம் டிஸ்டன்ஸ்லையே இருங்க என்று எல்லாத்தையும் தெளிவாக கூறியபடியே தன் நண்பர்களிடம் காரை கொண்டு வரும்படி சைகை செய்தான்…

ப்ரீத்தியை சமாளிக்கும் திட்டத்தில் பிரியா உட்பட அனைவரும் தயாராக இருந்தனர்..

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!