நீ வரும் வரை-6

0
(0)

(முன்கதை சுருக்கம்-பணத்தை கொடுக்க ப்ரியா மறுக்க அதே வேளையில் ரவிக்கு பிரச்சனை போன் ரூபத்தில் வந்தது…)

நடந்த சண்டைக்கு நடுவே ரவிக்கு கால் வந்தது, கால் பண்றது வேற யாரும் இல்ல அவளே தான்…

இவ எதுக்கு இப்ப கால் பண்றா என்ற குழப்பத்தை சுமந்தபடி ரவி தனியாக சென்று போனை எடுத்து பேசினான்…

அவன் ஹலோ சொல்லும் முன்பே அந்த பக்கத்திலிருந்து” எப்படி இருக்க ரவி, உனக்கு நானே தான் கால் பண்ணனுமா? நீ பண்ணி பேசி இருக்கலாமே…அது சரி என்னலாம் எங்க நியாபகம் வச்சிருக்க போற…அதான் உனக்கே உனக்குன்னு ஒரு லவர் இருக்காளே”…என்று எடுத்த எடுப்பிலேயே மெயின் ஸ்விட்ச்சில் ப்ரீத்தி கை வைக்க ஷாக் அடித்தது என்னவோ ரவிக்கு தான்…

இவ எதுக்கு மறுபடியும் இத பத்தி பேசறா என்று வியர்த்து போய் ரவி நிற்க, அவன் மௌனமானதால் “ரவி நான் சும்மா உன்ன கிண்டல் பண்ணேன், இதுக்கே இப்படி சைலேண்ட் ஆகிட்ட…நீ உன் லவ் பத்தி இவ்ளோ தூரம் சொன்ன பிறகும் நான் உன்ன தொந்தரவு பண்ணுவேனா.,,, பயப்படாதே, நான் உங்கிட்ட பிரெண்ட்லியா பேசலாம்னு நினச்சு தான் போன் பண்ணேன்…அது மட்டும் இல்ல நீ லவ் பண்றேன்னு தெரிஞ்சதும் நான் கோவப்படவும் இல்ல, டென்ஷன் ஆகவும் இல்ல, சின்னதா ஒரு வருத்தம் அவ்ளோ தான்”…

சரி ரவி நீ எங்க இருக்க, நான் உன்ன பாக்கணுமே..” என்று ப்ரீத்தி கேட்க அவளிடம் இருந்து கொஞ்ச நேரமாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்து ரவி மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்ள போவது தெரியாது “நான் ப்ரியாவோட இருக்கேன்…என்று ப்ரியாவிடம் பேசியதில் இருந்த அதே டென்ஷனில் பிரியா பெயரை கூற உடனே ப்ரீத்தியும் “அப்படியா, சூப்பர்,உன் லவர் பேரு ப்ரியாவா, நீ உன் லவ் பத்தி சொன்ன ஆனா உன் லவர் பேரு கூட நியாவே சொல்லவும் இல்ல நானும் கேட்கவும் இல்ல, ப்ரியா நைஸ் நேம்…ஓகே நீங்க ரெண்டு பெரும் ஒண்ணா இருகிங்களா, அப்போ உங்க ரெண்டு பேரையுமே நான் பாக்கணுமே என்று ப்ரீத்தி மிக எளிதாக கூற உடனே ரவி “இல்ல ப்ரீத்தி இப்போ நீ எங்கள பாக்க முடியாது, ஏனா இப்போ நாங்க திருச்சில இருக்கோம்”என்று பாதி உண்மையும் மீதி பொய்யுமாக ரவி சொல்ல “இது நிஜமாவே தற்செயலா நடக்குதா, என்னால நம்ப முடியல, ரவி இப்போ நான் எங்க இருக்கேன்னு தெரியுமா? என்று ப்ரீத்தி விடுகதை போட பாவம் ரவிக்கு தான் விடையும் தெரியவில்லை, அவளிடம் இருந்து தப்பிக்க வழியும் புரியவில்லை…

இது என்ன விளையாட்டு ப்ரீத்தி எங்க இருக்கணு என்கிட்டே கேட்டா நான் என்ன சொல்ல முடியும்…வேணும்னா நீ திருச்சில இருக்கேன்னு சொல்லட்டுமா என்று எதார்த்தமாக ரவி சொல்ல

ப்ரீத்தியும் “அதே தான், உனக்கு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி சொல்ற…இப்போ நான் திருச்சில தான் இருக்கேன் என்று குதுகளித்ததொடு நிற்காமல், நான் இங்க என் ப்ரெண்ட் மேரேட்ஜ்காக வந்தேன்… கல்யாணம்லாம் முடிஞ்சிடுச்சு, ஊருக்கு கிளம்பறதா இருந்தேன்…ஆனா நீயும் இங்க தான் இருக்கேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் இதுக்கு மேல நான் அப்படியே போனா நல்லா இருக்குமா..உன்னையும் உன் லவ்வரையும் பாத்து விஷ் பண்ணனும், என்ன விட உன் லவ்வர் எந்த அளவுக்கு பெஸ்ட்னு டெஸ்ட் பண்ணனும்…அது மட்டுமா நீ எனக்கு ட்ரீட் வேற குடுக்கணுமே என்று ப்ரீத்தி பாட்டுக்கு அடுக்கி கொண்டே போக

ப்ரீத்தி இப்போ எங்களால வர முடியாது என்று வெடுக்கென ரவி கூறிவிட்டான்…

அவன் கூறியும் ப்ரீத்தி விடவில்லை “ரவி அப்படிலாம் நீ சொல்ல முடியாது, நான் உனக்கு எவ்ளோ செஞ்சுருக்கேன் எனக்காக நீ இத கூட செய்ய மாட்டியா..நீ என்ன பண்ணுவையோ எனக்கு தெரியாது…நீயும் ப்ரியாவும் என்ன பாத்தே ஆகணும்…

எங்க வரணும்னு சொல்றேன் நோட் பணிக்கோ என்று ஒரு ஹோட்டலின் பெயரை கூறி ரவியின் பதிலை கூட எதிர்பாக்காமல் கட் செய்தாள்…

ரவியின் முக கலவரத்தை பார்த்த அவன் நண்பர்கள் அவன் அருகில் சென்று ” என்ன ரவி? என்ன ஆச்சு? யாரு போன் பண்ணா?இவ்ளோ டென்ஷனா இருக்க என்று கேட்க “டேய் தினேஷ், ப்ரீத்தி பேசனாடா…இப்போவே என்னையும் ப்ரியாவையும் ஒண்ணா பாக்கனும்னு சொல்றாடா…

பிரியாவா அது யாருடா?

அந்த லூசு பேரு தாண்டா பிரியா என்று பிரியாவின் பக்கம் கை காட்ட “அவள எதுக்குடா ப்ரீத்தி பாக்கனும்னு சொல்றா?” என்று புரியாமல் விழித்தான் தினேஷ்…

அத ஏண்டா கேட்கற, இவளுங்க பண்ண குழப்பத்துல நான் ப்ரியா பேர உளற அவ ப்ரியா தான் என் லவ்வர்னு நினைச்சிட்டா”

அது மட்டும் இல்ல ப்ரீத்தியும் இந்த ஊர்ல தான் இருக்காளாம்…இப்போவே எங்க ரெண்டு பேரையும் மீட் பண்ணனும்னு சொல்றாடா என்று பயத்தோடு ரவி கூற

அவள விடுடா, அவளுக்கு போய் பயப்படற, அவள போய் பாக்கனும்னு எந்த கட்டாயமும் இல்ல” என்று சீனு ஆறுதல் கூற

ரவியோ உண்மையான பிரச்சனையை விளக்கினான்…அப்படி இல்லடா அவ சொன்னதால தான் இப்போ எங்க வீட்ல கல்யாணம் பத்தி பேச்ச எடுக்காம இருக்காங்க, அது மட்டும் இல்ல நான் போலீஸ்ல சேரவும் பெர்மிஷன் கிடைச்சிருக்கு, இந்த நேரத்துல அவள நாம ஏமாத்திட்டோம், நான் லவ் பண்றது பொய்னு தெரிஞ்சா அவ ஒரு பெரிய கலவரத்தையே உண்டு பண்ணிருவா…வீட்லயும் அவ சொல்றத தான் கேட்பாங்க…அதனால இப்போ நாம அவள ஸ்மூத்தா டீல் பண்ணி தான் ஆகணும் என்று ரவி எதார்த்தத்தை கூறினான்…

அப்போ இப்ப என்ன செய்றது என்று சீனு புரியாமல் கேட்க ரவி பிரியாவையே பார்த்தான்…

அதிலிருந்தே மீதி நால்வருக்கும் புரிந்தது…

ரவியும் அவன் நண்பர்களும் ப்ரியா இருந்த இடத்திற்கு சென்றனர்…

ப்ரியாவோ,அவள் தோழிகளோ அமைதியாக இவர்கள் வருவதையே பார்த்து கொண்டிருந்தனர்…

மறுபடியும் ப்ரியா ரவியிடம் “சார் நிஜமாவே எங்ககிட அவ்ளோ பணம் இல்ல, நீங்க கூட எங்க பை எல்லாத்தையும் செக் பண்ணி பாத்திங்களே, எங்களால அவ்ளோ பணத்தை ரெடி பண்ணா முடியாது என்று கெஞ்ச

நீங்க எங்களுக்கு பணம் தர வேணாம் என்று ரொம்ப சாதாரணமாக ரவி கூறவதை கேட்டு

ஹை ஜாலி ஜாலி என்று அவர்கள் நால்வரும் சந்தோஷத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்…

ரொம்ப தேங்க்ஸ் சார், நீங்க இவ்ளோ நல்லவரா இருபிங்கனு தெரியாது என்று ரேணு ஐஸ் வைக்க

ஆமா சார் நான் கூட உங்களை புரிஞ்சிக்காம சண்ட போட்டுட்டேன் என்று ப்ரியா சாரி கேட்க

வெயிட் வெயிட், நான் பணம் வேணாம்னு தான் சொன்னேன் உங்களை விட போறதா சொல்லவே இல்லையே…நான் சொன்ன மாதிரி நீங்க ஒரு ரூபா கூட எனக்கு தர வேண்டாம், ஆனா எங்களுக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணனும் என்று ரவி தான் திட்டத்தின் பிள்ளையார் சுழியை ஆரம்பித்தான்…

என்ன உதவியா, இதுல என்ன சிக்கல் இருக்க போவுதுன்னு தெரியலையே என்று ப்ரியா முழிக்க

சார் நீங்க எவ்ளோ பெரிய உதவிய எங்களுக்கு செஞ்சுருக்கிங்க உங்களுக்காக நாங்க எதையும் செய்வோம் என்று கீது தானாக போய் அவர்கள் வலையில் பிரியாவை கோர்த்து விட்டாள்..

சொலுங்க சார் என்ன ஹெல்ப் வேணும் உங்களுக்கு என்று கலா ஆர்வமாக கேட்டாள்…

ரவியும் தன் பிரச்னையை விளக்க ஆரம்பிக்க ஒருவர் முகத்திலும் ஈ ஆடவில்லை…தொடரும்….

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!