நீ வரும் வரை – 4

0
(0)

(முன் கதை சுருக்கம்: பிரியாவும் அவள் தோழிகளும் மாதுவுக்காக காத்திருக்கும் நேரத்தில் அங்கு ஒருவன் ஒரு பெண்ணிடம் தகராறு செய்வதை பிரியா பார்க்கிறாள், அந்த பெண்ணை அவனிடமிருந்து பிரியாவும் அவள் தோழிகளும் தப்பிக்க விடுகின்றனர், அதனால் அந்த இளைஞனுக்கும் பிரியாவுக்கும் இடையில் சண்டை நடக்கிறது)

 

எதுக்கு அவள தப்பிக்கவிட்ட, நீ பெரிய ஜான்சி ராணியா, அவள தப்பிக்கவிட்டு உன் வீரதீரத்த நிருபிக்கிரயா? அவ யாருன்னு தெரியுமா?

என் பணத்த திருடிக்கிட்டு ஓடினவள பிடிச்சி என்னோட பர்ஸ குடுக்க சொல்லி சண்ட போட்டா நீ வந்து அவளையும் தப்பிக்கவிட்டதும் இல்லாம எங்ககிட்ட சண்ட வேற போடறியா?

 

டேய் அருண் போலீஸ்க்கு கால் பண்ணுடா எனக்கென்னவோ அந்த திருட்டு பொண்ணுக்கும் இந்த கும்பல்க்கும் சம்பந்தம் இருக்கும்னு தோணுது என்று அவன் கூற

 

ஆமாட ரவி நீ சொல்றது சரி தான் இப்பவே இங்க போலீஸ் வந்தா தான் உண்மை தெரியும் என்று அருணும் போலீஸ்கு கால் பண்ண போனை எடுத்தான்… (பிரியாவிடம் சண்டை போட்ட அந்த இளைஞன் வேறு யாருமல்ல நம் ஹீரோ ரவி தான்)

 

போலீஸ் என்றவுடன் ரேணு பயந்து போய் சார்… சார்… நாங்கலாம் காலேட்ஜ் ஸ்டுடெண்ட்ஸ் சார், போலீஸ்லாம் வேணாம் சார், எங்களுக்கும் அந்த திருட்டு பொன்னுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, அந்த பொண்ணு யாருன்னு கூட தெரியாது…

இவதான் நீங்க அந்த பொண்ணுகிட்ட பிரச்சன பன்றிங்கனு நினச்சு எங்கள கூப்டா…ஏய் என்னடி பாத்துட்டு நிக்கற சொலுடி அவங்ககிட்ட என்று பிரியாவை பயத்தோடு பார்த்தாள் ரேணு….

 

ஆமா சார் ஏதோ தப்பு நடந்து போச்சு, இப்படி நடுரோட்ல ஒரு பொண்ணு கைய பிடிச்சு தகராறு பண்ணிட்டு இருந்தா யாருமே தப்பா தான் நினைபாங்க…சாரி சார் என்று பிரச்சனையை முடிக்க பார்த்தாள் பிரியா…

 

ஆனால் இது முடிய கூடிய பிரச்சனையா என்ன…

 

இப்போ போலீஸ் வருவாங்க அவங்ககிட்ட இந்த கதைலாம் சொல்லுங்க என்று தினேஷ் சொன்னதும் கலாவும் பயத்தில் நடுங்கிவிட்டாள்…சார் எங்க வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட், வீட்டுக்கு தெரியாம காலேட்ஜ் கட் அடிச்சிட்டு தான் வெளிய வந்துருக்கோம், இப்போ மட்டும் போலீஸ் அது இதுன்னு பிரச்சன பெருசாகி வீட்டுக்கு தெரிஞ்சா எங்கள வீட்டுக்குள்ளயே அர்ரெஸ்ட் பண்ணி வச்சிருவாங்க, காலேட்ஜ் கூட அனுப்ப மாட்டாங்க, ப்ளீஸ் சார் என்று தன் பயத்தில் ஒட்டு மொத்தமாக உளறி கொட்டினாள் ….

 

ஆனால் ரவியோ என்னோட பணமும், அதோட அதுல இருந்த என்னோட ATM கார்டும் திருப்பி கிடைக்கிற வரைக்கும் உங்களை விட முடியாது…வேணும்னா அந்த பணத்த நீங்க குடுங்க உங்களை விட்டர்றோம் என்று பெரிய குண்டையே தூக்கி போட்டான்….

 

தோழிகள் அனைவரும் ஒருவர் முகத்தையே ஒருவர் பார்த்தபடி செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர்…

 

அப்பொழுது தான் சீனு அவர்கள் வைத்திருந்த பையை பிடுங்கி கொண்டு “தினேஷ் இதுல பணம் இருக்கானு பாருடா” என்று

தினேஷிடம் குடுத்துவிட்டான்….

 

முழுவதுமாக இவர்களிடத்தில் சிக்கிவிட்ட அதிர்ச்சியில் நால்வரும் அதிர்ந்து போய் நின்று கொண்டிருந்தனர்…

 

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!