நீ வரும் வரை 3
(முன் கதை சுருக்கம்: பிரியா காலேட்ஜ் கட் அடித்துவிட்டு வீட்டுக்கு தெரியாமல் அவள் தோழிகளோடு ஊர் சுற்ற கிளம்புகிறாள்)
ரேணு,தீபு,கலா,ப்ரியா எல்லாரும் அசெம்பிள் ஆயாச்சு இன்னும் மாது மட்டும் வரல..
இங்க பாருடி இன்னைக்கு இந்த ப்ளான பிக்ஸ் பண்ணதே மாது தான், ஆனா இன்னும் அவளே வரல, எவ்ளோ நேரமா இப்படி நடுரோட்ல நிக்கறது என்று சலித்து கொண்டால் தீபு…
இருடி நான் அவளுக்கு கால் பண்ணி கேட்கறேன் என்று பிரியா தன் போனை எடுத்து அவளுக்கு டயல் செய்தாள்…
இங்க சிக்னல் வீக் போல இருக்குடி நான் அந்த பக்கமா போய் அவளுக்கு கால் பண்ணி பாக்கறேன் என்று சிறிது தூரம் சென்று மீண்டும் கால் செய்தாள்…
டிரிங்…..டிரிங்…..டிரிங்…..
ஹலோ…
ஏய் லூசு, என்னடி பண்ற இங்க எல்லாரும் ரோட்ல நிக்கறோம்..பிளான் பண்ணா மட்டும் போதாது கொஞ்சமாவது அத செயல்படுத்தனும், உன்ன நம்பினா இப்படி தான் போல இருக்கு, இப்போ வரியா இல்ல அங்கேயே இருந்துகிட்டு ஹலோ மட்டும் சொல்ல போறியா என்று இருந்த கோபத்தில் பொரிந்து தள்ளினால் பிரியா…
கொஞ்சம் மூச்சு விட்டு பேசுடி, ஹார்ட் அட்டாக் வந்துட போகுது, நான் சிக்னல்ல மாட்டிகிட்டேண்டி இன்னும் 5 நிமிஷத்துல அங்க இருப்பேன் போதுமா..ஆனா ஒரு கண்டிஷன் நான் வந்ததும் மறுபடியும் இப்படி என்ன திட்ட கூடாது ஒகே வா என்று கொஞ்சம் கெஞ்சலாக கேட்டவளிடம் இன்னும் நீ 5 நிமிஷத்துல வரல திட்ட மாட்டோம் உதைப்போம் சீக்கிரம் வந்து சேரு என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தாள்…
கட் செய்து திரும்பியவளுக்கு அங்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது…
அங்கே ஒரு நடுத்தர வயது பெண்ணிடம் ஒரு இளைஞன் தகராறு செய்து கொண்டிருந்தான்…அவர்கள் தூரமாக நின்று கொண்டிருந்ததால் அவர்கள் பேசியது காதில் விழவில்லை, ஆனால் அந்த பெண் ஓட முயற்சிப்பதும் இவன் அவளை விடாமல் இழுத்து பிடிப்பதுமாய் இருந்ததில் பிரியாவுக்கோ அவன் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிப்பது போல் தோன்றவே என்ன செய்வது என்று புரியாமல் முழித்தாள்..
சுற்றும் முற்றும் பார்த்தால் அங்கே யாரும் இல்லை, என்ன செய்வது என்று தெரியவில்லை…திரும்பி தன் தோழிகளுக்கு சீக்கிரம் இங்க வாங்க, என்று சிக்னல் காட்டிவிட்டு அந்த பெண்ணிடம் ஓடினாள்…
அவன் அந்த பெண்ணை இழுக்க பிரியா அவனை இழுக்க இந்த கலாட்டாவிற்கு மத்தியில் ரேணு,தீபு,கலாவும் பிரியாவோடு சேர்ந்து கொண்டு அவனை தள்ளி விட இது தான் சாக்கு என்று அந்த பெண் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்….
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அந்த பெண்ணை காணவில்லை…அந்த பெண்ணை தொலைத்த இல்லை இல்லை பிரியாவால் தொலைக்கபட்டதால் கீழே தள்ளப்பட்ட அந்த இளைஞன் கோவமாக எழுந்தான்…
நீ என்ன பைத்தியமா, இல்ல வேற ஏதாவதா, எதுக்குடி இப்போ அவள தப்பிக்கவிட்ட என்று அவன் கோபத்தில் கத்த
என்னது டீனா சொல்ற என்று பிரியாவும் கத்த அதற்குள் அந்த இளைஞனின் நண்பர்களும் வந்து விட்டனர்…
இரு கோஷ்டிகளும் வாக்குவாதத்தில் இறங்க சண்டை முடிவில்லாமல் போய்க்கொண்டிருந்தது… கடைசியாக உண்மை என்னவென்று தெரிந்ததும் பிரியா முதல் கொண்டு எல்லாரும் தானாக வழிய போய் வம்பை விலை கொடுத்து வாங்கியதை உணர்ந்து கொண்டனர்.. இதுவே பெரிய பிரச்சனையா நினச்சு பயந்து போனவங்களுக்கு இன்னும் தெரியல இதுக்கு மேல தான் பிரச்சனையின் கதையே ஆரம்பிக்க போகுதுன்னு….
1 comment