முன்கதை சுருக்கம்- தன் குடும்பத்தை கோவிலில் ஒரு திசையில் தொலைத்த பிரியா விசாரிக்க சென்ற இடத்தில் தன் கடந்த காலத்தை ரவி மூலம் கண்டு அதிர்ச்சியால் உறைந்து நிற்கிறாள்)
ஏண்டி ப்ரியா உங்கிட்ட தான் போன் இருக்கே கால் பண்ணிருக்கலாம் தானே என்று அக்கா கோபிக்க, அதற்க்கு போன்ல டவர் எங்கடி இருக்கு, நாங்களே நாயா பேயா இல்ல உங்களை தேடி அலைஞ்சிட்டு இருந்தோம் என்று அம்மா பதில் குடுக்க பிரியா மட்டும் இறக்கி வைக்க முடியா பாரத்தை நெஞ்சில் சுமந்தபடி அவர்களோடு நடந்து கொண்டிருந்தாள்….
ரவி மட்டும் நிதானத்துலையா இருப்பான்…ரவி சார் நீங்க அந்த ரெண்டாவது கதவுக்கிட்ட போய் நில்லுங்க அங்க மக்கள் கூட்டம் அதிகமா இருக்கு என்று வாக்கி டாக்கியில் வந்த தகவலை கேட்ட பின் தான் ரவி தன் சுய நினைவுக்குள் வந்தான்…பின் என்ன மறக்க கூடிய விஷயமா தன் கண்முன்னே வந்து போனது… அவன் எத்தனை நாள் தன் மனதுக்குள் தேடி கொண்டிருந்தான், அவனின் தேடல் அவள் தானே, அவளே தானே….
அவர்களின் கடந்த காலம் அதுவும் அவர்களை இணைத்த காலம் அந்த பிப்ரவரி மாதமே தான்….
ப்ரியா இந்தா சாப்பாடு, சீக்கிரம் கிளம்புனா கிளம்புறையா? எப்ப பார்த்தாலும் காலேஜுக்கு லேட்டா போற வேலை தான்…இருடி அப்பாவ கூட்டிட்டு போய் விட சொல்றேன் என்று தன் பின்னாடி சுத்திய அம்மாவை ஏமாத்தி செல்வது பிரியாவுக்கு கடினமாக தான் இருந்தது…
அம்மா இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் தான்மா, லேட்டா போனா ஒன்னும் சொல்ல மாட்டாங்க அது மட்டும் இல்ல நான் என் ப்ரெண்ட் ரேணு கூட போய்க்கிறேன், நான் கிளம்பறேன்மா என்று பாதி பதிலை கூறிக்கொண்டே வீட்டிலிருந்து ஓட்டமும் நடையுமாக வெளியேறினால்….
ரேணு, தீபு, கலா, மாது, பிரியா எல்லாம் ஒரே கேங்கு…மாதத்தில் ஒரு முறையாவது காலேஜை கட் அடித்து ஊர் சுத்தலைனா அவங்களுக்கு தலையே வெடிச்சிடும்…இன்னைக்கு கூட அந்த ஊர் சுற்றல் ஏற்பாடுக்கு தான் ஓடிகொண்டிருக்கிறாள் பிரியா…
பிரியா உட்பட இவர்கள் அனைவரின் குடும்பமும் ஏகத்துக்கும் ஸ்ட்ரிக்ட், உப்பு சப்பில்லாத விஷயத்திற்கே சலங்கையை கட்டிக்கொண்டு ருத்ரதாண்டவம் ஆடிவிடுவார்கள்,,,இப்படிபட்ட குடும்பதிருக்கு அல்வா குடுத்து ஏமாத்தி வருவதிலிருந்தே அந்த ஐவரின் திறமையை அறிந்து கொள்ளலாம்…
ஆனா அப்படிப்பட்ட இந்தா கேங்குக்கே ஆப்பு வைக்கற மாதிரி அங்க ஒரு பெரும் குழப்பம் நடக்க போறது இவங்க யாருக்குமே தெரியாது…என்னை தவிர…
இந்த குழப்பம் தான் ரவிக்கும், பிரியாவுக்கும் இடையில் சிலந்தி வலை மாதிரி உறவு வலையை பின்ன போகிறது…