நீ வரும் வரை-19
என்னை விட்டு
நீ விலகி போனாலும்
தேடி பிடித்து உன்
இதயத்தை மீண்டும்
திருடி கொள்வேன்-இப்படிக்கு
உன் அன்பு காதலன்…
(முன்கதை சுருக்கம்- பாலாவும் ரவியும் பிரியாவிடம் மாறி மாறி கேள்வி கேட்க ரவியோ பிரியாவின் விரலில் அவன் போட்ட மோதிரத்தை பார்த்து இதற்க்கு என்ன அர்த்தம், என்னை காதலிக்காதவள் எதற்காக நான் போட்ட மோதிரத்தை இன்னும் போட்டு கொண்டு இருக்க வேண்டும் என்று மெயின் பாயிண்டில் கை வைக்க பதில் சொல்ல முடியாமல் விழித்தால் பிரியா)
ரவியின் ஆவேசம் சிறிதும் குறையவில்லை… பாலாவும், ரவியும் பிரியாவின் பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்துகொண்டிருக்க பிரியாவோ என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் யோசனையில் ஆழ்ந்தாள்…இறுதியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தாள், இதற்கு மேலும் உண்மையை மறைப்பதில் எந்த பலனும் இல்லை, எல்லா பிரச்சனைக்கும், குழப்பத்திற்கும் இப்பொழுதே ஒரு முடிவு கட்ட வேண்டியது தான், இதனால் என்ன விளைவு வந்தாலும் அதை பத்தி இப்போது யோசிக்க வேண்டாம், யோசிக்க நேரமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தவளாக தெளிவான முகத்தோடு, உளறாமல் பேச ஆரம்பித்தாள்…
ரவி, பாலா உங்களுக்கு என்ன தெரிஞ்சிக்கணும், நான் ரவிய காதலிக்கிறேனா இல்லையா? இது தான உங்க கேள்வி..
நல்லா கேட்டுகோங்க, இப்போ சொல்றது தான் உண்மை….
நான் ரவிய காதலிச்சிட்டு தான் இருந்தேன், இப்பவும் காதலிக்கிறேன், இனியும் காதலிச்சிட்டு தான் இருப்பேன்…இது தான் நீங்க தெரிஞ்சிக்க நினச்ச என் மனசுல இருந்த உண்மை…இப்போ உங்க பிரச்சன முடிஞ்சதா? இதுக்கு மேல என்ன கேள்வி கேட்டு தொல்ல செய்ய மாட்டிங்களே…என்று பிரியா மடை திறந்த வெள்ளம் போல் தான் மனதில் புதைத்த அத்தனையையும் தெள்ள தெளிவாக கூறிவிட ரவியோ, பாலாவோ இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை…அவர்கள் எதிர்பார்த்தது என்னவோ பிரியா தன் காதலை ஒத்துகொள்ள வேண்டும் என்பது தான், ஆனால் இவ்வளவு நேரம் பிரியா செய்த ஆர்பாட்டத்தில் அவள் இவ்வளவு சீக்கிரத்தில் அதுவும் இவ்வளவு தெளிவாக அவள் காதலை ஒத்துகொள்வாள் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை, ஏன் இந்த பிரச்சனைக்குள் புதிதாக வந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் டாக்டர் கூட இதை எதிர்பார்க்கவில்லை…
இந்த எதிர்பாராத திருப்பத்திலிருந்து மூவரும் வெளியே வர சிறிது நிமிடம் தேவைப்பட்டது…
பிரியாவின் பதிலால் ரவி சந்தோஷத்தில் மிதந்தான், பாலாவோ தான் ஒரு காதலை சேர்த்து வைத்த நிம்மதியில் மகிழ்ந்தான்…ஆனால் பிரியாவோ அடுத்த திருப்புமுனையாக நான் ரவிய காதலிக்கிறேன், ஆனா அவன கல்யாணம் பண்ணிக்க முடியாது…என்று சொல்ல பாலாவும், ரவியும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள பிரியாவே தன் மனதில் உள்ளதை சொல்ல ஆரம்பித்தாள்…
என் வீட்ல எல்லாரும் எவ்ளோ சந்தோஷத்துல இருக்காங்கனு தெரியுமா? இப்போ போய் என் காதல பத்தி சொல்லி அவங்கள கஷ்டபடுத்தணுமா.. வேண்டாம், அவங்கள அழ வச்சிட்டு எனக்கு எந்த சந்தோஷமும் வேண்டாம்…நான் வேணாம்னு என்ன விட்டு போனவன் போனவனாவே இருக்கட்டும்…பாலா ப்ளீஸ் இந்த கல்யாணத்த நிறுத்திடாதிங்க என்று பிரியா கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் ரவி மேல் அவளுக்கு உள்ள சின்ன மனஸ்தாபத்தையும், இந்த கல்யாணம் அவளது குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அவளது ரத்த பாசத்தையும், அதற்காக அவள் செய்ய இருக்கும் தியாகத்தையும் வெளிபடுத்தின…
இவ்ளோ தானா, இதுக்கு தான் நீ இப்படி எல்லாம் பண்றியா, கவலைய விடு..ரெண்டு வீட்லயும் நான் பேசி சம்மதம் வாங்கறேன்..அது மட்டும் இல்ல பிரியா, உங்க காதல் சேரணும்னு நான் துடிக்க வேற காரணமும் இருக்கு…நானும் ஒருத்திய காதலிச்சேன், ஆனா எங்க குள்ள வந்த ஒரு சின்ன பிரச்சன பெருசாகி நாங்க ரெண்டு பேரும் பிரியற நிலைமை வந்துடுச்சு…உயிருக்க்யிரா காதலிச்ச பொண்ண பிரியற வலி என்னனு எனக்கு தெரியும், அந்த வழிய ரவிக்கு குடுத்துடாத பிரியா என்று பாலா தான் அனுபவிக்கும் காதல் வலியோடு கூற…
ரவியோ பிரியாவின் கைகளை பிடித்து கொண்டு ” சாரி பிரியா, நான் செஞ்சதுலாம் தப்பு தான்…உன்ன விட்டுட்டு நான் போயிருக்க கூடாது தான், உன் காதல விளையாட்டா நினைச்சிருக்க கூடாது தான்…ஆனா இப்போ என் எல்லா தப்பையும் உணர்ந்து உன்ன மட்டுமே என் மனசு முழுக்க சுமந்துட்டு வந்துருக்கேன், அன்னைக்கு நான் செஞ்ச அதே தப்ப இணைக்கு நீயும் செஞ்சிடாதே” என்று கண்கலங்கியபடி கூறிய ரவியை பார்த்த பின், அவனது அந்த அன்பான, காதல் நிறைந்த தொடுதலை உணர்ந்த பின்னும் பிரியாவால் தன்னை கட்டுபடுத்த முடியும் என்று தோன்றவில்லை…அவளும் காதலோடு ரவியை கட்டிகொண்டாள்…”ரவி, ரவி” என்று பிரியா தன் காதலை கண்ணீரால் வெளிபடுத்த ரவியும் பிரியா “ஐ லவ் யு, ஐ லவ் யு என்று உணர்வு பூர்வமாக தன் காதலை வெளிபடுத்தினான்…
இவர்களின் காதல் யுத்தம் ஒரு வழியாக நிறைவடைந்தது…
சரி சரி போதும் போதும், இங்க நானும், டாக்டரும் இருக்கறத மறந்துடாதிங்க என்று பாலா கிண்டலோடு கூற சிரித்தபடியே இருவரும் கண்களை துடைத்து கொண்டு விலகி கொண்டனர்…டாக்டரும் ஒரு நல்ல காதல் ஜோடி சேர்ந்த அழகான தருணத்தை ரசித்த திருப்தியில் அங்கிருந்து கிளம்பினார்…
இந்த பிரச்சனையை இப்போ இங்க சரி ஆகிடுச்சு ஆனா ரெண்டு பேர் வீட்லயும் பேசி சம்மதம் வாங்கறது அவ்ளோ சின்ன விஷயம் இல்ல, அத எப்படி சரி செய்யறதுன்னு யோசிக்க ஆரம்பித்துவிட்டான் பாலா…
ரவியின் வீட்டை பொறுத்த வரையில் இனி ரவியின் விருப்பம் தான் அவர்களது விருப்பமும்..ஆனால் இப்பொழுது சமாளிக்க வேண்டியது பால, பிரியாவின் குடும்பத்தை தான்…
தேவை இல்லமா வாய குடுத்து வம்புல மாட்டிகிட்டோமோ என்று தோன்றினாலும் அவர்கள் இருவரின் காதலை பார்க்கும்போது எப்படியாவது அவர்களது திருமணத்தை செய்து முடித்தே தீர வேண்டும் என்று முடிவாய் அடுத்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கினான்…