(முன்கதை சுருக்கம்-ரவியும், பிரியாவும் ப்ரீத்தியின் வார்த்தையை ஏற்று அவளோடு அவள் பின்னே செல்கின்றனர்… அவர்களை பின்தொடர்ந்து கொண்டு அவர்களின் நண்பர்களும் செல்ல….அங்கே பிரியாவுக்கும் ரவிக்கும் மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது…)
வா ரவி, என்ன அப்படியே ரெண்டு பேரும் ஷாக் ஆகி நின்னுடீங்க…இந்த ஏற்பாடே உங்க ரெண்டு பேருக்கும் தான்.. வாங்க உள்ள வாங்க என்று ப்ரீத்தி அழைக்க இருவரும் தயக்கத்தோடு உள்ளே சென்றனர்…
அங்கே எப்படியும் பத்து பதினைத்து பேராவது இருப்பார்கள்…ஒரே பார்ட்டி கலாட்டாவாக இருந்தது, தோரணங்களும் அலங்காரங்களும் எதோ பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாக உணர்த்தியது…
என்ன ப்ரீத்தி இது, எதுக்கு இந்த டெக்கரேஷன்லாம்…என்று குழப்பத்தோடு அதற்க்கு மேலும் பொறுக்க முடியாமல் ரவி கேட்டு விட…எல்லாம் உங்களுக்காக தான் என்று கூலாக சொல்லிவிட்டு அங்கு இருந்த பெண்களை நோக்கி சென்று விட்டாள்….பிரியாவுக்கோ என்ன நடக்க போகிறதோ என்று மனதுக்குள் படபட என்று பயம் அடித்து கொண்டிருந்தது…ரவிக்கும் ஒன்றும் புரியவில்லை….
சிறிது நேரம் கழித்து ப்ரீத்தி இவர்களை நோக்கி வந்தாள், வாங்க இப்படியே நின்னா எப்படி பார்டிய என்ஜாய் பண்ண முடியுமா? என்னோட வாங்க இன்னும் நிறைய சர்ப்ரைஸ் உங்களுக்காகவே காத்துட்டு இருக்கு என்று அவள் முன்னாள் செல்ல இதுவே பெரிய சர்ப்ரைஸ் தான், இன்னும் வேற இருக்கா என்று திருதிருவென முழித்தபடி இருவரும் ப்ரீத்தி பின்னால் சென்றனர்…இவர்கள் நண்பர்களோ உள்ளே வரமுடியாமல் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கேட்டுக்கு வெளியே பதட்டத்தோடு காரிலேயே இருந்தனர்…
ரவிக்கும் பிரியாவுக்கும் இருந்த அதிர்ச்சி பெரிதாய் ஒன்றுமில்லை, அவர்கள் முன் ஒரு கேக் வைக்கப்பட்டு கையில் கேக் வெட்ட கத்தியும் கொடுக்கப்பட்டது…
எதுக்கு ப்ரீத்தி இதல்லாம் என்று ரவி கேட்க அவனை பேச விடாமல் முதல கேக் வெட்டி பிரியாவுக்கு ஊட்டி விடு என்று சொல்ல வாயை மூடிக்கொண்டு பதில் எதுவும் பேசாமல் அவள் சொன்னபடியே கேக் வெட்டி பிரியாவுக்கு ஊட்டி விட்டான்…பிரியாவை மட்டும் ப்ரீத்தி விட்டுவிடுவாளா என்ன, அவளையும் ரவிக்கு ஊட்டிவிடும்படி சொல்ல அவளும் ரவிக்கு ஊட்டிவிட்டாள்…ஏற்கனவே ஹோட்டலில் பிரியா ரவியின் காலை மிதித்ததற்கு பழி வாங்கும் விதமாக இந்த முறை பிரியா கேக் ஊட்ட ரவி அவளின் விரலை கடித்துவிட்டான்…பிரியாவோ கத்தவும் முடியாமல் அவனை திட்டவும் முடியாமல் கையை உதறிக்கொண்டு அவனை முறைத்தாள்….
அவனோ எப்படி உன்ன பழி வாங்கிட்டேன் பாத்தியா என்று நக்கலாக சிரித்தான்…இருவரின் இந்த நக்கல் பரிமாற்றங்களுக்கு இடையே மற்றொரு வினோத அதிர்ச்சியும் அரங்கேற ரெடியாய் இருந்தது…
பிரீத்தி அதை எடுத்து வந்து ரவியின் கையில் கொடுத்தாள், அது வேறு ஒன்றும் இல்லை நிச்சய மோதிரம் தான்…பிரியாவோ விட்டால் அழுதுவிடும் நிலையில் இருக்க ரவி எவ்வளவு மறுத்தும் பிரீத்தி விடவில்லை…போட்டால் ஒழிய உங்களை விடவே மாட்டேன் என்று ஒற்றை காலில் விழ போய் தொலையட்டும், இதோடு இந்த பிரச்சனையை முடிந்தால் போதும் என்று இருவரும் மோதிரம் மாற்றி கொள்ள தயாராகினர்…
உள்ளே இவ்வளவு கலவரம் நடக்க, வெளியே இரு கட்சியினரும் ஒன்றும் புரியாமல் அந்த வீட்டையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தனர்….
ரவி கெஞ்சல் முகத்தோடு சாரி பிரியா என்று உள்ளுக்குள்ளே சொல்லிக்கொண்டே பிரியாவின் விரலில் மோதிரம் போட்டான்…பிரியாவோ கண்கள் சிவக்க நல்லதுன்னு நினச்சி செஞ்ச எனக்கு இதுலாம் தேவையா என்று கை நடுங்க பதற்றம், வருத்தம், வலி என அத்தனை உணர்வுகளும் ஒருமிக்க அவன் விரலில் மோதிரத்தை போட்டாள்….
இந்த மோதிரம் தான் இவர்கள் இருவரின் வாழ்க்கையும் இணைக்கும் மந்திரவளையம் என்று தெரியாமல் வேண்டாவெறுப்பாய் இருவரும் மோதிரத்தை மாற்றிகொண்டனர்…