வ(லி)ழியா இல்லை வாழ்க்கையில் – போட்டி கதை எண் – 53

5
(1)

‘வ(லி)ழியா இல்லை வாழ்க்கையில்’ என்ற சிறுகதையை எழுதியவர்  சீ. அருண் குமார்

                                                  வ(லி)ழியா இல்லை வாழ்க்கையில்

காலை எழுந்தவுடன் வீட்டின் சுவர் கடிகாரத்தை பார்த்த ராணி, நேரம் ஐந்தரை (5.30) மணி. இன்னைக்கு பழங்காநத்தம் உழவர் சந்தைக்கு ஒன்பது (9.00) மணிக்கு போகணும். வேக வேகமாக கெளம்பணுமே, காலை குளிச்சிட்டு வெளிய வந்து பாத்தா நேரம் ஆறேகால் (6.15) மணி. காப்பி போடலாம்னு, கேட்ல தொங்கவிட்ட பால் வாலியை பாத்த பால் இல்ல பால் காரர் பால் ஊத்தல. பரவாயில்லை இன்னைக்கு வர காப்பி போடுவோம்.  வர காப்பியை குடிச்சிட்டு. என்னங்க இந்தாங்க வர காப்பி, ஏண்டி பால் என்னாச்சு. நான் தான் உங்ககிட்ட நேத்து சொன்னேன்ல, போன மாசம் பால் பாக்கி இன்னும் பால் காரருக்கு தரல. ஒரு நாளைக்கு பால் ஊத்துறத நிறுத்திருவாருனு சொன்னேன்ல. ஆமா ராணி நீ சொன்ன, நேத்து வேலையை முடிச்சிட்டு வரப்ப, என்ஜினீயர்ட்ட செலவுக்கு காசு வாங்குவோம்னு பார்த்தேன். அவர் பெரும்பாலும் வார சம்பளம் தான் தருவாரு. சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு கொடுப்பாரு. அவர்கிட்ட கேட்டேன் கோச்சிக்காதீங்க இப்ப இல்லை. சனிக்கிழமை வாங்கிக்கோங்கனு சொல்லிட்டாரு. அப்புறம் நாளைக்கு இந்த கட்டிடத்தில் கொத்தனார் வேலை தோது இல்லைனு சொன்னாரு.

என்ஜினீயர் நாளைக்கு வெள்ளிக்கிழமையா? ஆமா சார் என்றேன்.  நாளை கழிச்சு வேலைக்கு வந்துடுங்க கொத்தனார்ட்ட சொல்லிருக்கேன். செங்கல் ஒரு லோடு வந்துரும் மூவாயிரம் (3000) கல். மூன்று வாரம் முன்னாடி போட்ட சென்ட்ரிங் கான்கிரீட், சுத்தி கைப்புடி சுவர் கட்ட நீங்க கீழிருந்து செங்கல் மேலே ஏத்துற வேலை இருக்கும். சரிங்க இன்னைக்கு எங்க வேலைக்கு போறீங்க? நம்ம தெரு முக்குக்கு போய் நிக்குறேன் ஏதாவது கொத்தனார் வேலையிருந்தா கூட்டிட்டு போவாங்க. சரிங்க, சஞ்சய், விஜயை எழுப்புங்க ஸ்கூலுக்கு கெளப்பணும். எழுப்புறேன் இன்னைக்கு என்ன சாப்பாடு பண்ண போற, பக்கத்தில் இருக்குற கடையில் மாவு விக்கிறாங்க, ஒரு வாலி மாவு நாற்பது ரூபாய் வாங்கி வந்து இட்லி ஊத்துறேன். தொட்டுக்க தக்காளி சட்னி அரைக்குறேன். சரி ராணி கடைக்கு போய்ட்டு வா, நான் குளிக்குறேன், பிறகு பையன்களை எழுப்பி குளிக்க சொல்றேன். எழுப்பின பிறகு பத்து நிமிடத்தில் எந்திருச்சான். கடைக்கு போய்ட்டு வந்த ராணி, சுட சுட இட்லியை ஊத்தி எடுத்திட்டு இருந்தப்ப, விஜய் அம்மா அம்மா காபி இல்ல டீ வேணும்மா இன்னைக்கு வர காப்பிதான் நானும் அப்பாவும் குடிச்சோம். உங்களுக்கு இப்பதான் பால் வாங்குனேன். டீ போட்டு தரேன் நீ குடிக்கலாம், பல் விலக்கிட்டியா? விலக்கிட்டேன். சஞ்சய் குளிச்சிட்டானா? நீயும் குளிச்சிட்டு வா, ரெண்டு பேரும் டீ குடிக்கலாம்.

பிறகு சாப்பிட்டு உங்க பள்ளிக்கு போகலாம். விஜயும் குளிச்சிட்டு வந்தான். நேரம் ஏழறை (7.30) மணி. என்னங்க வாங்க சாப்பிடுவோம் மூணு தட்டில் இட்லியை பரிமாறிவிட்டு சட்னி வைத்தால், ராணியும் ஒரு தட்டில் மூணு இட்லி வைத்து சாப்பிட்டால். இரண்டு டிபன் பாக்ஸில் நாலு இட்லி வைத்து சட்னி உள்ளே வைத்து மூடினாள். இந்தாங்க நான் ஒன்னு எடுத்துக்குறேன். நீங்க ஒன்னு வேலைக்கு போறப்ப எடுத்துட்டு போங்க. ராணி பையன்களிடம், பள்ளிக்கூட பையை எடுத்துக்கோங்க, உங்க சீருடை மாட்டிகிட்டு எல்லாத்தையும் எடுத்துட்டு போங்க. உங்க ஸ்கூலில் மதிய உணவு சாப்பிடுங்க. பிளாஸ்டிக் கூடையில் இன்னைக்கு விக்குறதுக்கு தேவையான உருளைக்கிழங்கு பத்து கிலோ, வாழைக்காய் எட்டு சீப்பு எடுத்து வைத்தாள். என்னங்க திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடுங்கள். அம்மா பையன்களிடம், அப்பா என்னய இறக்கிவிட்டு வந்த பிறகு ஸ்கூலுக்கு கிளம்புங்க சரி அம்மா. எக்ஸ் எல் சூப்பர் (XL Super) யை இறக்கி நிப்பாட்டிட்டு பிளாஸ்டிக் கூடையை தூக்கிட்டு வந்து வெளியில் வைத்தார் ராணி வந்தவுடன். உருளைக்கிழங்கு இருந்த கூடையை வண்டி முன்னாடி வைத்து கொண்டு ஓட்டினான். நீ வாழைக்காய் கூடையை பிடிச்சுக்கோ. நன்றாக பிடித்தவுடன் நான் வண்டியை எடுக்குறேன் என்றவாரு. அம்மா டாட்டா பை பை என்றனர். அம்மாவும் டாட்டா, பார்த்து ஸ்கூலுக்கு போய்ட்டு வாங்க என்றாள் ஈம் என்றனர். ஐந்து நிமிடத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்தது. பிளாஸ்டிக் கூடையை இறக்கி விட்டு ராஜா, ராணியிடம் பாத்து போய்ட்டு வித்துட்டு வா. நானும் வேலைக்கு கூப்பிட்டாங்கன்னா போன் பன்றேன். ராணி நடந்து வந்த பாதசாரி தம்பியிடம் இந்த பஸ் பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்ட் போகுமா? மகளிர் இலவச பேருந்தா? என்றாள். ஆமா அம்மா என்றான். நன்றி பா. போனில் மணியை பார்த்தால் எட்டு (8) மணி பஸ்சில் ஏறினாள். இரண்டு பிளாஸ்டிக் கூடையில் வைத்து தூக்கி உள்ளே வைத்தாள். ஆட்கள் ஏற தொடங்கினர். பஸ் முழுவதும் ஆட்களால் நிரம்பியது. நடத்துனர் ஒவ்வொருவருக்கும் டிக்கெட் கிழித்து கொடுத்து காசு வாங்கி பையில் போட்டார். என்னிடம் சில்லறை நிறைய இல்லை சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கிக்கோங்கோ. மகளிருக்கு டிக்கெட் இலவசம் கேட்டு டிக்கெட் வாங்கிக்கோங்க. ராணி ஜன்னல் ஓரமாக இருந்தால் அண்ணன் டிக்கெட் கொடுங்க என்றாள். ராணி அருகிலிருந்தவரிடம் அக்கா இந்தாங்க இரண்டு டிக்கெட் அந்த அம்மாட்ட ஒன்னு குடுத்திருங்க. ராணி நடத்துனரிடம், அண்ணன் காய்கறி கூடை பின்னாடி இரண்டு இருக்கு அதுக்கு டிக்கெட் கொடுங்க. இந்தாங்க டிக்கெட் பதினைந்து ரூபாய் கொடுங்க. இந்தாங்க அண்ணன் பதினைந்து ரூபாய். ஒரே நிற சீருடையில் இரண்டு மாணவர்கள் இருந்தனர். என்னப்பா பஸ் பாஸ் இருக்கா? இல்ல. அண்ணன் திருப்பரங்குன்றம் போகனும் சரி, இரண்டு பேரும் ஐம்பது, ஐம்பது ரூபாய் நீட்டினர். ஒரு ஐம்பது ரூபாய் கொடுங்க, மீதி முப்பது ரூபாய் பிடி, இரண்டு பத்து ரூபாய் டிக்கெட் பிடிங்க. உன்னோட நண்பன் தான அந்த பையன்? ஆமா அவனிடம் 10 ரூபாய் வாங்கிக்கோ. சரி அண்ணன் டேய் ராஜேஷ் பிறகு சில்லறை.

மாத்திக்குடு டா, டேய் உனக்கு சாந்திரம் டிக்கெட் நான் எடுக்குறேன். ஓகே வா? டபுள் ஓகே என்றான். எட்டேமுக்கால் (8.45) மணிக்கு போய் பழங்காநத்தம் பேருந்து நிலையத்தை பஸ் அடைந்தது. பழங்காநத்தத்தில் பத்து பேர் இறங்குனாங்க, ராணி ஒரு தம்பியிடம் நான் இறங்குறேன் இந்த கூடையை என் தலையில் வைப்பா என்றாள் அவனும் சரி மா வைக்கிறேன் என்றான். தூக்கி தலையில் வைத்தவுடன் நன்றி தம்பி என்றாள் வெல்கம் என்றான். சற்று நடந்து இரண்டு நிமிடத்தில் பழங்காநத்தம் உழவர் சந்தை வெளியில் கூடையை அருகில் இருந்தவர் உதவிக்கேட்டு தரையிறக்கினாள் விரிப்பான் விரித்து கொண்டு வந்த உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய் சீப்பை வைத்தாள். வயதான அம்மா வந்தாங்க, உருளைக்கிழங்கு விலை என்ன? வாழைக்காய் விலை என்ன?  உருளை விலை ஐம்பது ரூபாய். வாழைக்காய் ஒரு சீப்பு முப்பத்தி ஐந்து ரூபாய், தனித்தனியாக வாழைக்காய் மூன்று ரூபாய் என்றாள் சரி மகளே அரை கிலோ உருளைக்கிழங்கு, வாழைக்காய் ஒரு சீப்பு கொடு அறுபது ரூபாய் கொடுங்க அம்மா. இந்தா அறுபது ரூபாய் சரியா இருக்கு நன்றி. கணவன் ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது, தெரு முக்குல வேலைக்காக நின்னேன் திருநகர்ல வேலை, தளம் கான்கிரீட் போடுற வேலை இருக்குனு.

சொன்னாங்க வந்துட்டேன். பையனையும் ஸ்கூலில் விட்டுட்டேன் என்றார். சரிங்க என்றாள் ராணி. அக்கா விலை என்ன உருளைக்கிழங்கு கிலோ ஐம்பது ரூபாய். வாழைக்காய் சீப்பு முப்பத்தி ஐந்து ரூபாய். தனித்தனியாக வாழைக்காய் மூன்று ரூபாய். மூன்று வாழைக்காய் மற்றும் கால் கிலோ உருளைக்கிழங்கு கொடுங்க. உங்க மஞ்சபையை நீட்டுங்க, இருபத்தி இரண்டு ரூபாய் கொடுங்க இந்தாங்க.

இருபத்தி ஐந்து ரூபாய் தம்பி இன்னும் ஒரு வாழைக்காய் எடுத்துக்கோங்க. சரி கொடுங்க. இருபத்தி ஐந்து ரூபாய் சரியா போச்சு. நேரம் வேகமாக நகர்ந்தது. பத்தரை மணி போல டீ/வடை கொண்டு வந்து விற்று கொண்டு இருந்தார். ஒரு டீ கொடுங்க, இன்னைக்கு ஏலக்காய் டீ மா, பத்து ரூபாய் கொடுங்க. பத்து ரூபாய் கொடுத்தாள் ராணி. டீயை குடித்து விட்டு, கப்பை ஓரமாக வைத்தாள். கொண்டு வந்த காய்கள் ஒன்றன் பின் ஒன்றாக விற்க ஆரம்பித்தது.

ஒலிபெருக்கி வாயிலாக ” தற்போது பன்னிரண்டரை (12.30) மணி, ஒன்றரை (1.30) மணிக்கு உழவர் சந்தை வியாபாரிகள் தராசு தட்டு மற்றும் எடை கல் கொடுத்துட்டு கிளம்ப ரெடி ஆகுங்க.

சரியாக பன்னிரண்டரை (12.30) மணிக்கு அருகிலிருந்த குழாயில் கையை கழிவுவிட்டு சாப்பாடு டப்பாவை திறந்து இட்லியை உண்டாள். குடிக்க தண்ணீர் பாட்டில் கொண்டு வந்தாள். அக்கா உருளை என்ன விலை, காலையில் 50 ரூபாய், நான் வீட்டுக்கு கிளம்ப போறேன் இப்ப நாற்பது ரூபாய். அரை கிலோ தான் இருக்கு. வாழைக்காய் ஒரு சீப்பு இருபத்தி ஐந்து ரூபாய் தான் எடுத்துக்கோங்க. மொத்தம் நாற்பத்தி ஐந்து ரூபாய் கொடுங்க. உங்க பையை கொடுங்க உள்ள கொட்டுறேன். ஒரு வழியாக கொண்டுவந்த அனைத்தும் வித்து தீர்ந்தது. இரவு உணவுக்காக உழவர் சந்தை உள்ளே சென்று அரை கிலோ தக்காளி, அரை கிலோ பெரிய வெங்காயம் வாங்கி கொண்டு வந்து கூடையில் வைத்தாள். நேரம் ஒன்றரை (1.30) மணி உழவர் சந்தை வியாபாரிகள் தராசு தட்டு மற்றும் எடை கல் (இரண்டு, ஒன்று, அரை கிலோ, இருநூறு கிராம் மற்றும் ஐம்பது கிராம்) உள்ளிருக்கும் அலுவலகத்தில் திரும்பக் கொடுத்துக்கிட்டு

இருந்தாங்க, காலையில் ஆறு (6.00) மணிக்கு வாங்கிய தராசு தட்டு மற்றும் எடை கல் ஒவ்வொரு நாளும் ஒன்றரை (1.30) மணிக்குள் திரும்பக் கொடுத்து கெளம்புறாங்க. ராணியும் கொண்டு வந்த திராசு, தராசு தட்டு மற்றும் எடை கல், கூடை, தண்ணீர் பாட்டில், கழுவிய டிபன் பாக்ஸ், குடித்த டீ கப்பை குப்பை தொட்டியில் போட்டு விட்டு கணக்கு பார்த்து விட்டு, வாங்கியது விற்றது போக நூற்றிஎம்பது ரூபாய் மிச்சம் இருந்துச்சு. மகிழ்ச்சியாக கூடை எடுத்து சென்று பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்ட் சென்று வெயிட் பன்னி, திருமங்கலம் செல்ல பஸ் வந்தவுடன், பஸ் ஏறி வீடு திரும்பினாள்.

நிறைவு பெற்றது.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 comment

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!