நீ வரும் வரை-5

0
(0)

(முன்கதை சுருக்கம் – ரவியிடமும் அவன் நண்பர்களிடமும் மாட்டிகொண்ட பிரியா,கீது,ரேணு,கலா என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் உறைந்து விட்டனர்….)

தினேஷ் அவர்களின் பையை சோதித்ததில் அந்த பையில் மேக்கப் திங்க்ஸ் தவிர பெரிதாய் வேறு ஒன்றுமில்லைஎன்று தெரிந்து கொண்டான்… அதனால் அவர்கள் கையில் இருந்த மொபைல் போனையும் பிடுங்கி கொண்டான்…

ஒவ்வொருவருடைய வீட்டின் மொபைல் நம்பரையும் குறித்து வைத்து கொண்டு “உங்க பேக், போன் எல்லாம் நீங்க பணத்த திருப்பி தர வரைக்கும் எங்க கிட்ட தான் இருக்கும்…ஒருவேளை நீங்க எங்கள ஏமாத்தணும்னு நெனசிங்க போலீஸ்கு போக மாட்டோம் நேரா உங்க வீட்டுக்கு தான் போவோம்…உங்க நம்பர் வச்சு உங்க வீடு அட்ரெஸ் கண்டுபிடிக்கறது எங்களுக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல, அது மட்டும் இல்ல என்னோட மாமாவே இந்த ஊருல போலீஸ் டிபார்ட்மெண்ட்ல தான் இருக்காரு, ஸோ நீங்க எங்கள ஏமாத்த முடியாது..” என்று தினேஷ் வில்லன் ரேஞ்சில் கோவமாக கூறியதை கேட்டதும் ரேனுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது…

சார் இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்ல, யாரோ ஒருத்தி திருடனதுக்கு நாங்க பணம் குடுக்கனும்னா எப்படி சார், இதுல எங்க தப்பு என்ன இருக்கு, சொல்லபோனா நாங்க நல்லது நினச்சி தான் உதவ வந்தோம் என்று பிரியா எவ்ளோ தூரம் வாதாடியும் ரவியும் அவன் நண்பர்களும் மனமிரங்கவில்லை ..

கடைசியாக வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் பிரியாவும் அவள் தோழிகளும் பணத்தை தர சம்மதித்தனர்…

நாங்க பணத்த குடுத்ததும் பிரச்சன பண்ணாம எங்கள விட்டருவீங்க தானே , எங்க பேக், போன் எல்லாத்தையும் திருப்பி குடுத்தரனும் என்று பிரியா கேட்க

முதல பணத்த குடுங்க அப்புறமா உங்களை விடறத பத்தி பேசலாம் என்று கண்டிஷனாக ரவி கூறினான்…

சரிங்க சார் உங்க பணம் எவ்ளோ திருட்டு போச்சு,நாங்க எவ்ளோ தரணும்னு சொல்லுங்க”

பணம் 25,000, என்னோட கிரெடிட் கார்டு வேற அதுல இருந்தது, சரி பரவால அத கூட நாங்க சரி பண்ணிக்கிறோம், பணம் மட்டும் குடுத்தா போதும் என்று சொல்ல”

நால்வரும் மயக்கம் போட்டு விழாத குறையாக தலை சுற்றி நின்றனர்..

உடனே பிரியா சார் அவ்ளோ பணம்லாம் எங்களால குடுக்க முடியாது, ஏதோ ஆயிரம், ரெண்டாயிரம்னா குடுத்துட்டு பிரச்சனைய முடிக்கலாம்னு பாத்தா 25,000 னு பெரிய குண்ட தூக்கி போடறிங்க…இதுக்கு மேல நீங்க போலீஸ்கு போனாலும் சரி கோர்ட்டுக்கே போனாலும் சரி எங்களால பணத்த குடுக்க முடியாது” என்று தீர்மானமாக கூறினாள்….

ஓஹோ, அவ்ளோ திமிரா உனக்கு, நீ பண்ண வேலையால தான் உன் பிரெண்ட்ஸ் கூட இப்போ இந்த பிரச்சனைல மாட்டிட்டு இருக்காங்க, இவ்ளோ நடந்தும் உன் திமிரு குறையல தானே, சரி அப்போ நீ பணத்த குடுக்க வேண்டாம்…நேரா உங்க அப்பா,அம்மாவை கூப்ட்டு , உங்க பொண்ணுங்க எங்க பணத்த திருடிடாங்கனு சொல்றோம் அப்புறமா அவங்க இதுக்கு என்ன முடிவு எடுக்கறாங்கன்னு பாக்கலாம் என்று ஒரே போடாக போட்டான் சீனு. வயிற்றில் புளியை கரைக்க மறுபடியும் வசமாக மாட்டிகொண்ட நிலைமையிலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு

நீங்க சொல்றது எல்லாம் எங்க வீட்ல யாரும் நம்ப மாட்டாங்க, வாங்க ஒன்னாவே போகலாம், நாங்களும் நடந்தத சொல்றோம் அப்போ தெரியும் தப்பு யார் மேலன்னு என்று தைரியமாக பிரியா பேச கலாவுக்கும்,ரேனுவுக்கும் கொஞ்சம் தைரியம் வந்தது…

அப்பொழுதுதான் ரவியே நினைவுபடுத்தினான், இங்க பாருங்க மேடம் இப்படி காலேட்ஜ் கட் அடிச்சிட்டு ஊர் சுத்திட்டு இருக்க உங்களை உங்க வீட்ல நம்புவாங்கனு நீங்க நினச்சா அது உங்க முட்டாள் தனம் என்று கூற பிரியாவுக்கும் அது தான் சரி என்று பட்டது…வீட்டுக்கு தெரியாமல் இப்படி வெளியே வந்தது எவ்ளோ பெரிய தவறு என்று எல்லார்க்கும் புரிந்தது…ஆனால் எத்தனையோ தடவை இப்படி அவுட்டிங் போயிருந்தாலும் இந்த முறை தானே மாட்டிருக்கிறோம், எல்லாத்துக்கும் காரணம் இந்த மாது தான் என்று உள்ளுக்குளே அவளை திட்டிவிட்டு என்ன முடிவு எடுப்பது என்று யோசித்து கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வாக அந்த கால் வந்தது…

அந்த போனை எடுத்து தூரமாக போய் ஏதோ ரகசியம் பேசுவதை போல் பேசி கொண்டிருந்தான் ரவி, அவன் பேச்சில் கலவரம் தெரிந்தது…சிறிது நேரத்திலேயே அவன் நண்பர்களும் அவனிடத்தில் செல்ல ஏதோ ஒரு திட்டத்தை தீட்டுவதை போல் தீவிரமாக பேசி கொண்டிருந்தனர்….

அந்த நேரத்தில்…

பிரியா அவங்க ஏதோ மும்மரமா பேசிகிட்டு இருக்காங்க,நாம அவங்களுக்கு தெரியாம ஓடி போய்டலாமா என்று அறிவாளித்தனமாக கலா கேட்க அடி போடி லூசு, இப்போ மட்டும் நாம ஓடி போய்ட்டோம்னா நாம வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி பிரச்சன நம்ப வீட்ல உக்காந்திட்டு இருக்கும் பரவாலையா, அது மட்டும் இல்ல நாம என்ன சொல்றோம்னு கூட நம்ப வீட்ல கேட்க மாட்டாங்க, அதுவும் எங்க அப்பா முதல அடிச்சிட்டு தான் நான் என்ன சொல்ல வரேன்னு யோசிப்பாரு, இந்த பிரச்சனைல நாம ஊர் சுத்தறது, காலேஜ் கட் அடிக்கிறது, இப்படி எல்லாமே வீட்டுக்கு தெரிஞ்சிரும்…இந்த பிரச்சன முடிஞ்சாலும் கூட நாம காலேஜ் போக முடியாது என்று பின்னால் நடக்கபோவதை முன்னரே நினைவுபடுத்தினாள் ரேணு…

எல்லாத்துக்கும் காரணம் இந்த மாது தான் அவ மட்டும் சீக்கிரம் வந்திருந்தா இந்த பிரச்சனையே வந்துருக்காது, இந்நேரம் தியேட்டர்ல உக்காந்திக்கிட்டு ஜாலியா படம் பாத்துட்டு இருந்துருக்கலாம், என்னோட சூப்பர் ஹீரோவோட படம் இந்நேரம் ஆரம்பிச்சிருப்பாங்கலே என்று கீது புலம்ப கொஞ்சம் அமைதியாக இருடி, நிலைமை தெரியாம நீபாட்டுக்கு புலம்பிட்டு இருக்க, அங்க பாரு அவங்க திரும்பி வராங்க கொஞ்சம் பேசாம இருங்க என்று பிரியா கூற அனைவரும் அமைதியாக அவர்கள் வரும் திசையை பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர்…

ஆனால் ரவியோ இவர்களை விட மிக பெரிய பிரச்சனையில் மாட்டிகொண்டு அதை எப்படி சமாளிப்பது என்று யோசனையில் ஆழ்ந்தபடியே இவர்கள் அருகில் வந்தான்…

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!