நீ வரும் வரை-18

0
(0)

நீ வரும் வரை-18

(முன்கதை சுருக்கம்- பாலா பிரியாவை தன்னை சந்திக்க வரும்படி அழைக்கிறான்…பிரியாவும் பாலாவை சந்திக்க செல்கிறாள், அங்கு பிரியாவிடம் அவள் காதலை பற்றி பாலா கேட்க, பிரியாவும் தான் காதலித்ததை ஒத்துகொள்கிறாள்…இதனால் கோபமடைந்த பாலா நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்தை நிறுத்தபோவதாக கூற பிரியாவோ மயங்கி விழுகிறாள்)

பிரியா மயக்கதிலிருந்து கண் திறக்கும்போது அங்கு அவளை சுற்றி மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர்…அவள் கண்களை கசக்கி யார் என்று உற்று பார்த்தாள்…பாலா, டாக்டர் அவர்களோடு மூன்றாவதாக ஒருவர்…அது…அது…பிரியாவால் நம்ப முடியவில்லை…கண்களை துடைத்துவிட்டு மறுபடி பார்த்தாள், அது அவனே தான்..தெளிவாக தெரிகிறது அது அவனே தான்….நம்பி தான் ஆக வேண்டும்..

ரவி தான் தன் கண்முன்னே நின்று கொண்டிருக்கிறான், சந்தோஷபடுவதா, இல்லை அவன் எப்படி இங்கு, அதுவும் பாலாவோடு என்று சந்தேகபடுவதா…யோசிக்கும் அளவுக்கு அவளின் மனதில் வலுவில்லை…ரவி என்று மெதுவாக பிரியா அழைத்தது தான் தாமதம்…வேகமாக பாலாவையும், டாக்டரையும் விலக்கிவிட்டு முன்னோக்கி பிரியாவின் அருகில் வந்தவன் அவள் கன்னத்தில் பளார், பளார் என்று மாறி மாறி அடிக்க பிரியாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது… எதற்கு அடிக்கிறான், அவனை ஏமாற்றியது தெரிந்துவிட்டதா? எதற்கு இப்படி காண்டுமிராண்டி தனமாக மயங்கி உடல்நிலை சரி இல்லாத நிலையில் இருக்கிறாளே என்று கூட நினைக்காமல் இப்படி அடிக்கிறான்…பிரியாவோ அத்தனை அடியையும் ஒரு வார்த்தை கூட பேசாமல் வாங்கி கொண்டால்…பாலாவும் டாக்டரும் ரவியை தடுத்து அவளிடமிருந்து இரண்டு அடி விலக்கி ரவியை அழைத்து வந்தனர்….

என்ன ரவி எதுக்கு இப்படி அவள அடிக்கிற, ஏற்கனவே அவ பொழச்சதே பெரிய விஷயம்னு இருக்கற நிலைமையில இப்படி அடிச்சு நீங்களே அவள ஐசியு க்கு அனுப்பிடுவிங்க போல இருக்கு…ஏன் ரவி இப்படி வீட்ல ட்ரீட்மென்ட் குடுத்து அவ சரி ஆனது பத்தலையா, ஹாஸ்பிட்டல்ல சேத்தி தான் ட்ரீட்மென்ட் பண்ணனும்னு நினைக்கிறிங்களா என்று டாக்டர் கேட்க டாக்டர் என்ன சொல்றிங்க? அவ தான் என் உயிர், அவள எப்படி நான் கஷ்டபடுத்தனும்னு நினைப்பேன்…எப்போ நீங்க அவ ஸ்லீப்பிங் டாப்லெட் சாப்டுருக்கானு சொன்னிங்கலோ அப்பவே நான் பாதி செத்துட்டேன்.. எதுக்கு டாக்டர் இவ இப்படி பண்ணா? இவ இல்லாம இந்த உலகத்துல நான் மட்டும் எப்படி இருப்பேன் என்று கண்கலங்கி நின்ற ரவியை பார்த்து பிரியாவுக்கும் அழுகை வந்தது…

ரவி கண்ட்ரோல் யுவர் ஸெல்ப் என்று அவனை அமைதிபடுத்தினான் பாலா..

பாலா உங்களுக்கே தெரியுமே, என் காதல பத்தியும் என் வலிய பத்தியும்..ஏற்கனவே நான் உங்ககிட்ட சொல்லிருக்கேனே…அத கேட்டதுக்கு அப்புறம் தானே நீங்க கூட என்ன புரிஞ்சிகிட்டீங்க.. .அதனால தானே பிரியாவ பாக்க என்ன ஹோட்டல்க்கு வர சொன்னீங்க, நானும் வந்தேன் என்று ரவி சொல்ல பிரியாவுக்கு தலை சுற்றவே ஆரம்பித்துவிட்டது…அதிர்ச்சியோடு பிரியா பாலாவை பார்க்க..பிரியாவின் முகபாவத்திலிருந்தே பிரியா என்ன கேட்க நினைக்கிறாள் என்று புரிந்து கொண்டு பாலாவே உண்மையை விளக்க ஆரம்பித்து விட்டான்…

ஆமா பிரியா ரவிய எதேச்சையா ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் பார்த்தேன், நான் என் பர்ஸ மிஸ் பண்ணிட்டேன், அத அவரு தான் எடுத்து குடுத்தாரு….அப்போ தான் அவரு எனக்கு அறிமுகமானாரு…அவர டிராப் பண்ண போகும்போது ரெண்டு பேரும் நிறையவே பேசிக்கிட்டோம்…அப்போ தான் அவரு தன் காதல் கதைய சொன்னாரு…பிரியா இல்லனா எனக்கு வாழ்கையே இல்ல, அவள கூட்டிட்டு போக தான் இந்த ஊருக்கு வந்தேன்னு சொன்னாரு….

அவர் பிரியான்னு சொல்லும்போது எனக்கு உன் நியாபகம் தான் வந்தது…என்னமோ தெரியல ஒருவேள நீ அவரோட பிரியாவா இருக்க வாய்ப்பிருக்குமோன்னு எனக்கு சந்தேகம் வந்தது…அத உறுதிபடுத்திக்க தான் அவர ஹோட்டல்க்கு வர சொன்னேன், உன்னையும் மீட் பண்ணனும்னு கூப்டேன், ஹோட்டல்ல உன்கூட நான் இருந்த கொஞ்ச நேரத்துலையே கண்டிப்பா நீ தான் அவரோட பிரியாவா இருப்பனு கன்பார்ம் ஆகர அளவுக்கு உன் பிகேவியர் இருந்தது…நீங்க சந்திச்ச அந்த ஹோட்டல், ஒன்னா உக்காந்த அந்த டேபிள் எல்லாத்தையும் நீ பாக்கறப்ப இத்தனை நாளா நீ உன் மனசுக்குள்ளயே மறச்சி வச்சிருந்த உன்னோட காதல் உன் கண்லயே தெரிஞ்சது…அதனால தான் நான் உன்ன மட்டும் அங்க இருக்க சொல்லிட்டு வேலை இருக்கறதா உன்கிட்ட பொய் சொல்லிட்டு கிளம்பினேன்…

நான் நினச்சேன், நான் திரும்பி வரும்போது நீங்க ரெண்டு பேரும் உங்க காதல வெளிப்படுத்திக்கிட்டு சந்தோஷமா பேசிட்டு இருப்பிங்கன்னு…அது தான் என்னோட பிளான்… ஆனா நான் போட்ட பிளான்ல பாதி வொர்க் அவுட் ஆனுச்சு,மீதியோ நான் எதிர்பார்க்காத மாதிரி ஆயிடுச்சு…நீ ரவியோட காதல ஏத்துக்காம அவன திருப்பி அனுப்பிட்ட..

ஆனா பிரியா, எனக்கு உறுதியா தெரியும், நீ ரவிய விரும்பறனு, ஆனா ஏன் அத மறைக்கிற..அத உன் வாயால சொல்ல வைக்க தான் இவ்ளோ டிராமா…சரி இப்போவாது சொல்லு பிரியா, எது உண்மை..நீ ரவிய விரும்பற தானே….என்று பாலா மீண்டும் பிரியாவிடம் கேட்க பிரியாவோ சிறிது கூட யோசிக்காமல் இல்ல, நான் யாரையும் காதலிக்கல என்று பழையபடியே அவள் சொன்ன பொய்யை தொடர்ந்தாள்…

அவள் கூறும் பொய்யை பொறுக்க முடியாமல் “ரவிய நீ காதலிக்கலனா அப்புறம் எதுக்கு இப்படி ஸ்லீப்பிங் டேபிலேட் குடிச்சி தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு முயற்சி பண்ணனும்…நல்ல வேலை நீ இங்கே மயக்கம் போட்டதால உன்ன சீக்கிரம் காப்பாத்த முடிஞ்சது…இவ்ளோ நடந்ததுக்கு அப்புறம் எதுக்கு பிரியா நீ பொய் சொல்ற”என்று பாலா பிரியாவை மடக்கி கேள்வி கேட்க பிரியாவோ தான் தற்கொலைக்குலாம் முயற்சி செய்யவே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாய் வாதாடினாலும் அவள் கூறியதை யாரும் ஏற்றுகொள்ளவே இல்லை…

பிரியா பாலாவிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதை கேட்டு கொண்டிருந்த ரவி இப்பொழுது நிதானமாக அவள் அருகில் வந்தான்…எங்கே மீண்டும் தன்னை அடித்துவிடுவானோ என்று கொஞ்சம் பயந்து தான் போயிருந்தாள் பிரியா…ஆனால் அவன் எவ்வளவு அடித்தாலும் தன் வாயிலிருந்து உண்மையை வாங்க முடியாது என்ற உறுதியோடு பிரியா படுத்திருக்க ரவியோ மெல்ல அவள் அருகில் வந்து ” என்ன லவ் பண்ணல, லவ் பண்ணலன்னு திரும்ப திரும்ப சொல்றியே, அப்போ இது என்ன என்று அவள் கையை பிடித்து அவள் முகத்துக்கு நேராக கொண்டு சென்று அவன் கேட்க அவன் பிடித்திருந்த அவளது கையை புரியாமல் பார்த்தாள் பிரியா… வசமாக அவள் மாட்டிகொண்டது அவளுக்கே புரிந்தது…

அவள் விரலில் ரவி போட்ட நிச்சய மோதிரம் கச்சிதமாக அவள் காதலை சொல்லி கொண்டிருந்தது…தான் மறைத்து வைத்த உண்மை இப்படி ரவியின் முன்பே

வெளியாகிவிட்டதே என்று வெளிறிய முகத்தோடு பிரியா தன் கைகளை சட்டென்று பிடுங்கி கொள்ள இப்பொழுதோ ஆதாரத்தோடு ரவியும், பாலாவும் பிரியாவிடம் மறுபடியும் அதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க பதில் சொல்ல முடியாமல் தடுமாறிபோனாள் பிரியா…

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!