நினைவு நிறம் பெறுகிறது

Barath Kamaraj | 05 Nov 2025

தண்டவாள கம்பிகளுக்கிடையில்

நேற்றிரவு தான் பூத்திருக்கிறது 

அந்த வெளிர் நீலப் பூ,

எந்த இரயிலும் இனி அந்த வழியில்

வந்துவிடக்கூடாது என்று அங்கேயே 

வேண்டிக் கொண்டு நிற்கிறாள், 

தாயின் நீலப் புடவை நினைவோடு

அம்முக்குட்டி.

    No comments yet.