தண்ணீரின் அருமை -போட்டி கதை எண் – 07

Valanchuli Admin | 02 Nov 2025

‘தண்ணீரின் அருமை’ என்ற சிறுகதையை எழுதியவர்

N. சிவபிரியா

ஒரு நாள், ஒரு சிறுவன் குழாயில் தண்ணீர் பிடித்தக்கொண்டிருந்தான். அந்தக் குழாயை சரியாக அடைக்காமல் விட்டுவிட்டான்.

மறுநாளும் இதே தவறைச் செய்தான். அது சரியான மழைக்காலம் என்பதால் அவனுக்கு தண்ணிர் எளிதாக கிடைத்தது. காலம் ஓடிக்கொண்டே இருந்தது. வானம் பொய்த்தது. மழையைக்காணவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டது.

ஆனாலும் அவன் செய்த தவறை உணரவில்லை.

தண்ணீரை வீணாக்கிக்கொண்டே இருந்தான் . திடீரென அவன் எதிர்ப்பாக்காத நிலமைக்கு தள்ளப்பட்டான் .

என்னவென்றால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத காலமாக மாறிவிட்டது.

மக்கள் தண்ணீருக்காக நாயாகவும் பேயாகவும்அலைந்துகொண்டிருந்தார்கள்.

இவன் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என்று ஊர் முழுவதும் நாக்கை நாய் போல் தொங்கவிட்டு

தேடிக்கொண்டிருந்தான்.அப்போதுதான் அவனுக்கு அவன் செய்த தவறு புறிந்தது .தண்ணீர் இல்லாமல் தெருவுக்கு வந்ததை எண்ணினான்.

 இருக்கும் பொழுது தெரியாத அருமை இல்லாத போது தெரியும்…….

நிறைவு பெற்றது.

    No comments yet.