காவல் தெய்வம் தாத்தா- போட்டி கதை எண் – 24

0
(0)

‘காவல் தெய்வம் தாத்தா’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு எஸ்வி. ராகவன்

 

                         காவல் தெய்வம் தாத்தா

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் அருகே ராமானுஜம் வீடு. வாசலின் இருபுறம் பிரும்மாண்டமாக திண்ணை…. பர்மா தேக்கில் கட்டப்பட்ட அந்தகால தூண் வீடு. வருடம் ஒருமுறை வர்ணம் பூசப்பட்டு புதிதாக காட்சியளிக்கிறது. அவருடைய வயது எழுபத்து எட்டு… சதாபிஷேகம் (80 வயது) வருவதற்க்கு காத்து இருக்கிறார். திருச்சி நீதிமன்றம் குமாஸ்தா வேலை. இப்போது ஓய்வுபெற்று வீட்டில் உள்ளார் ரொம்ப கண்டிப்பு கட்டுப்பாடு… தெய்வபக்தி உச்சம்.  பலருக்கு அவரிடம் அச்சம்.

அவருடைய மனைவி கோமளா ரொம்ப சாது. அவரின் மிகவும் பயம். கேட்கும் முன்னே எல்லா வேலைகளும் நடக்கும். உட்கார்ந்து பேச மாட்டார். கேள்வி கேட்க யோசிப்பார். அவருக்கு ஐந்து குழந்தைகள். மூன்று மகன்கள். இரண்டு மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.‌ குழந்தைகள் உள்ளனர். ஆனால் இன்றும் அவரிடம் பயம் தான். கடைசி பையன் ரங்கன் குடும்பம் மட்டுமே கூட இருக்கிறது. மற்றவர்கள்  வெளியூரில் வெளிநாட்டில் உள்ளனர். வருடத்திற்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று அனைத்து குடும்பம் ஒன்று சேரும்.

அம்மா கோமளா..‌மகன் ரங்கனிடம்.. “அடுத்த மாதம் டிசம்பர் 27. வைகுண்ட ஏகாதசி. இப்பவே.. எல்லாருக்கும் போனை போடு. வேலை இருந்தால் ஒத்தி போட்டு விட்டு..கட்டாயம் அப்பா வர சொன்னார்..என்று சொல்லி விடு.. அப்பறம் பரீச்சை.. ஆபிசில் வேலை.. என்றால் அப்பாவுக்கு கேட்டு கோபம் வரும்.. அதையும் சொல்லிடு..” என்றாள்

“அடுத்து மளிகை கடையில் சொல்லி இந்த லிஸ்ட் படி சாமான் சொல்லு” பதில் பேசாமல் வாங்கி கொண்டு

ரங்கன்..”இன்னும் ஒரு மாதம் இருக்கும் போது என்ன அவசரம்..” என கேட்டான்

கோமளா..”வைகுண்ட ஏகாதசி கோயில் கூட்டம் வரும்.. விலைவாசி உயரும்..”

தொடர்ந்து “அத்தோடு பேர குழந்தைகளை பார்த்து கொள்ள சரியாக இருக்கும். எதையும் முன்னேற்பாடு செய்வது அப்பா சுபாவம்… சாப்பிட்டு கடைக்கு போ” என்றாள்

“இப்போது என்னிடம் சத்தமாக பேசு.‌ அப்பா எதிரில் பேசாமல் பொம்மை மாதிரி நிப்பே”.. என்றான் ரங்கன் சிரித்து கொண்டே

“அப்பா வரும் நேரம் சிரிப்பை நிறுத்து.. உனக்கு நாற்பது வயசு ஆச்சு இரண்டு குழந்தைகள் இருக்கு.‌  இன்னும் கேலி கிண்டல்..மாறவே இல்லை” என கன்னத்தில் செல்லமாக தட்டினாள். கோமளா மகனை திட்டுவது போல கொஞ்சினாள்.‌ இளைய குழந்தை என்றால் அம்மாவிற்கு பாசம் அதிகம் இருக்கும்.

“திண்ணையில் யார்? வெளியே யாரும் பார்க்கவில்லை..” சொல்லி கொண்டே கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் ராமானுஜம். நல்ல கம்பீரமான உருவம் அதற்கேற்ப அதட்டும் குரல்.. நெற்றியில் திருமண் மஞ்சள் குங்குமம் இட்டு மங்களகரமாக இருந்தார். முதலில் ரங்கன் ஓடி வந்து மக்கில் கால் கழல் தண்ணீர் தந்து பிறகு சொம்பில் குடிநீர் தந்து கோபத்தை தணித்தான்.

வெளியே வாசல் திண்ணையில் ஒரு தம்பதி குழந்தையுடன் அமர்ந்து பிரசாதம் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

ரங்கன் அவர்களிடம்..”எழுந்து போங்கோ.‌ இது கோயில் மண்டபம்.. விருந்து மடம் இல்லை வீடு..” என்றான் கோபமாக

ராமானுஜம்..”மணி ஒண்ணு.. அவாளுக்கு வெயில் கோயில் மூடவே பிரசாதம் சாப்பிட இடமில்லை.. குடிநீர் தர சொன்னா.. விரட்டும் படி பேசறே. சாப்பிடுரவங்களை எழுப்புவது பாவம்.” என்றார்

அம்மா அப்பாவை பற்றி அடிக்கடி சொல்லும் “வெளியே பார்க்க பலாப்பழம் குத்தும்.. உள்ளே சுளை இனிக்கும்.‌ அவர் திட்டுவதாக நினைத்து நான் மூக்குடைத்து கொண்டேன்… ரொம்ப சரி அன்பின் அடையாளம். கம்பீரமான உருவம் உள்ளே.. கருணை மனம். யாருக்கு வரும்?” ரங்கன் மனதுக்குள் நினைத்துக் கொண்டு

அவர்களை கேட்க அவர்கள் “எங்களிடம் தண்ணீர் உள்ளது. திண்ணை தந்ததே போதும். நாங்கள் சென்னை இருந்து வருகிறோம் சாப்பிட்டு ‌ஐந்து நிமிடத்தில் கிளம்பி விடுவோம்..” என்றனர்

ரங்கன் உள்ளே சென்று “அப்பா சட்டையை கழட்டி கொடுங்கள்.. காலை பத்து மணி ஆச்சு சாப்பிடலாம்.. நீங்கள் டிபன் கூட சாப்பிடலை..”என்றான்.

அப்பா ரங்கன் கையில் செக் தந்து “வரும் போது வங்கியில் பத்தாயிரம் எடுத்துவா. மளிகை பொருள் வாங்க வேண்டுமே.. நாளை நம்ம கிராமம் போக வேண்டும். அரிசி, பருப்பு எடுத்து வர வேண்டும்.” என்றார்

அப்பா.”குழந்தைகள் ஸ்கூல் போயாச்சா?” என கேட்க

“போயாச்சு” என்றபடி ஸ்கூட்டி வண்டி சாவியுடன் உள்ளே வந்தாள் மருமகள் வேதா

“வாங்கப்பா சாப்பிட” என மருமகள் அழைத்தாள்

அம்மாவும் மருமகளும் பரிமாற ரங்கனும் அப்பாவும் சாப்பிட்டு முடித்ததும்..

“சமையல் அருமை.‌ அதிலும் கருணை கிழங்கு மசியல் நன்றாக வெந்து.‌. வயதானவர் பல்லுக்கு ஏற்றபடி மசிந்து.. பாராட்டினார் வெண்டைக்காயில் கொள கொளப்பே இல்லை மோர் போட்டீங்களா?.. என பாராட்டினார். மனம் திறந்து பாராட்டும் அவரை அம்மாவும் மருமகள் பார்த்து கொண்டு இருந்தனர்.

ரங்கன் “நீங்கள் இருவரும் சாப்பிடுங்கள்.‌ நான் கடைக்கு போய் வருகிறேன்.. வரும் போது குழந்தைகளை அழைத்து வருகிறேன்” என கிளம்பினான்

காய்கறி வாங்கி கொண்டு..‌ மளிகை கடையில் லிஸ்ட் தந்து விட்டு..பள்ளிக்கு சென்று குழந்தைகள் இருவருடனும் வீடு திரும்பினான் ரங்கன்.

குழந்தைகள் ஓடி சென்று அம்மாவை கட்டி கொள்ளாமல் அதிசயமாக.. தாத்தாவை கட்டி அணைத்து அன்று பள்ளியில் நடந்த விபரங்கள்.. வரைந்த படங்கள்.. தேர்வில் வாங்கிய மதிப்பெண்களை காட்டி விட்டு பெற்றோரிடம் காடட திரும்ப..

தாத்தா.. “வெரி குட்.‌.அதை அப்புறம் காட்டலாம் முதலில் யூனிபார்ம் கழட்டி விட்டு கை கால்கள் கழுவி கொண்டு சாப்பிடுங்கள்.‌ மணி ஆச்சு..” என்றார் அன்புடன்

குழந்தைகள் சாப்பிட்டு வந்ததும்.. “ஏம்பா நாராயணா.. கோவிந்தா..” எல்லாம் பெருமாள் பெயர்கள். அவனை குப்பிடுற போல இருக்கு…என கொஞ்சினார். பிறகு “‌இன்று வெண்டைக்காய் பொரியல்..‌ மூளைக்கு நல்லது.. நீங்கள் வளரும் குழந்தைகள் போய் சாப்பிடுங்க..” என்றார் அன்பாக

“அவர் குழந்தைகளை கூட மரியாதையாக அழைப்பது நல்ல குணம்.‌ அந்த பாசத்தில்

பாராட்டும் குணத்தில் அவர்கள் முதலில் அவரிடம் ஓடி வருகின்றனர்.

அவர். குடும்பத்தில் வரவு செலவு பார்க்கும் அவர் கணக்கு பிள்ளை. நல்லதை சொல்லும் ஆசான். வழிகாட்டி..பக்திகுரு மொத்தத்தில் காவல் தெய்வம்” என்றான் ரங்கன் மனைவியிடம்

“சிறிது நேரம் படுத்து கொள்கிறேன். மாலை ஐந்து மணிக்கு அப்பாவுடன் கோயில் போக வேண்டும் ‌ இன்று யானை வாகனம் உற்சவம். நமது உபயம். அப்பா நேற்றே கோயில் ஆபிசில் பணம் கட்டி விட்டார். நல்ல ஞாபகம்” என்றான் ரங்கன் அம்மாவிடம்

“மணி ஐந்து..அப்பா கூப்பிடுவார்.”.என் மனைவி சொல்லும் போது

“ரங்கா..” என்று அப்பா குரல் கேட்டது

அலறி அடித்து கொண்டு எழுந்து ஓடினான். அங்கே அவர் சட்டை போட்டு பூசை பொருட்களுடன் கொண்டு தயாராக இருந்தார்

நேரம் தவறாமல்..போவது.. நல்ல உடையலங்காரம் அவரது சிறப்பு. அதனால் கோயில் மற்றும் உறவுகளிடம் மதிப்பு.

எப்போது வீட்டை விட்டு வெளியே சென்றாலும் மனைவக அம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்பு.. என்றார் ரங்கனிடம்..

திண்ணை மற்றும் வாசலை ஒருமுறை பார்த்துவிட்டு கிளம்பினார்.

“ஆட்டோவில் போகலாம்..” என ரங்கன் சொல்ல

“ஐந்து நிமிடம் நடை.. வா போகலாம்..” என அழைத்தார் ராமானுஜம்

ரங்கன் அவரிடம் “எதற்கு” என கேட்டதற்கு..

அப்பா “இறுதிநாள் வந்தால் நான் படுக்கும் இடம்..‌ எனக்கு வயதாகி விட்டது. எப்போதும் எதுவும் நடக்கலாம்”  என அவர் சொல்ல.. ரங்கன் அழ ஆரம்பித்தான்.

“கண்ணை துடைத்து கொள்.

உன் கூட எப்போதும் நான் இருப்பேன்… வா முதலில் கருடன் அடுத்து சக்கரத்தாழ்வார்.. ராமானுஜர் அடுத்து தாயார் கடைசியாக பெருமாள்.. அவரை சேவித்த பின்னர் நேராக வீட்டுக்கு வர வேண்டும்.. எங்கும் போக கூடாது. அப்ப தான் லஷ்மி வரம் வீட்டுக்கு வரும்.. தங்கும்” என்றார்

பெருமாள் அலங்காரம் ஆன பிறகு ஆறு மணிக்கு யானை வாகனம் உற்சவம் ஆரம்பம் ஆனது.. ராமானுஜம் வேத கோஷம் சூழ பெருமாள் அருகில் நடந்து வர ரங்கன் கூடவே வந்தான்.

அம்மா கிளம்பும் போது சொன்னது காதில் ஒலித்தது..

“அப்பாவுக்கு வயசாச்சி.. கோயிலில் உற்சவ கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால் அவரை விட்டு விலகிச் செல்ல கூடாது “ என்றாள்

ரங்கன் அவ்வப்போது பெருமாளையும் அப்பாவையும் திரும்பி பார்த்தான். “இரண்டு காவல் தெய்வம்.‌ கூட வருவது போல் தெரிகிறது” என மனதுக்குள் நினைத்தான். ஆனால் வரும் போது அப்பா சொன்னதை எண்ணி பயந்தான். நாட்கள் குறைவது அவருக்கு தெரிந்து விட்டது. ஆனால் அவரோடு நாற்பது ஆண்டுகள் வாழ்ந்த எனக்கும் அறுபது ஆண்டுகளுக்கு மேல் கூட வாழும் அம்மாவுக்கு மிகவும் கஷ்டம். மீதமுள்ளவர்கள் தனியாக வாழ பழகி விட்டார்கள். பெருமாள் கடைசி வரை கூட இருந்து காப்பார்.. அவர் நிரந்தரம். தூணிலும் துரும்பிலும் இருப்பவர். நான் மனிதன். கொஞ்ச காலம் உன் கூட இருப்பேன்..” என சொன்னது காதில் ரீங்காரம்

மனைவி மகன் மருமகள் பேர குழந்தைகளுடன் கம்பீரமாக நடந்து வந்தார் ராமானுஜம்

அடுத்த நாள் ராமானுஜம் மற்றும் ரங்கன் சொந்த கிராமத்துக்கு காரில் சென்றனர்.‌ திருச்சி லால்குடி சாலையில் பத்து கிமீ தொலைவில் உள்ளது. ஊரில் நல்ல மரியாதை. அங்கேயும் பெருமாள் கோயில் உள்ளது. அங்கே பார்த்து விட்டு வயல் வெளிகள் சுற்றி பார்த்து விட்டு கிராம வீட்டுக்கு வந்தனர்.‌ அங்கே சாப்பாடு தயாரானது. பிறகு அரிசி பருப்பு.. காய்கறி ஏற்றி கொண்டு கார்  ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட்டது.

போகும் வழியில் தன் கதையை ரங்கனிடம் சொல்ல ஆரம்பித்தார். “கிராமத்தில் என் அப்பா போஸ்ட் மாஸ்டர்… ஊர் தலைவர். ஐம்பது மாடு இருந்து. நான் படித்தது.. வேலை பார்த்தது.. திருமணம் எல்லாம் இங்கே தான் ஆரம்பம். ஆனால் என் கூட பிறந்தவர் பத்து பேர்.. அதில் நான்கு பெண்கள். என் அப்பாவுக்கு மூன்று தங்கைகள் .. அதனால் பாதி சொத்து வித்தாச்சு.. அப்புறம் என் அண்ணன்கள் சொத்துக்களை விற்று அவர்கள் ஊர்களில் வீடு கார் வாங்கி கொண்டு சென்று விட்டார்கள். என் பசங்க கூப்பிட்டாலும் நான் இங்கு விட்டு போக மாட்டேன்.‌ ஏதாவது கல்யாணம் என்றால் போய் விட்டு இங்கே வந்து விடுவேன். இந்த வீடு மண் முன்னோர் சொத்து. என் உயிர் ரங்கநாதர் மண்ணில் தான் போகனும். படிக்க ‌பணம் சம்பாதிக்க.. வேலைவாய்ப்பு.. வெளிநாடு என பாதி பேர் இங்கே விட்டு போனாலும்.. எனக்கு ஒரு நியதி உள்ளது. மீதமுள்ள நாட்களை இங்கே இருக்க விரும்புகிறேன்.” என்றார்

கார் காவிரி பாலத்தை தாண்டி ஸ்ரீரங்கம் திரும்பியது.. ரங்கா.. ரங்கா கோஷம் கோபுரம் பார்க்க நிம்மதி பெருமூச்சு வருகிறது என்றார் ராமானுஜம்.

நிறைவு பெற்றது.

 

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!