கள்ளக்காதலியின்  தோழி – போட்டி கதை எண் -14

0
(0)

‘கள்ளக்காதலியின்  தோழி’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு  சி.பி. செந்தில்குமார்.

                               கள்ளக்காதலியின்  தோழி

ஜாக்கிரதை உணர்வு என்பதற்கும் ,உள்ளுணர்வு என்பதற்கும் பெண்ணைப்போல மறு பெயர் வேறு இல்லை.. ஆண்களை விட பெண்களுக்கு பொதுவாகவே உள்ளுணர்வு ஜாஸ்தி.. ஒருவனைப்பார்க்கும்போதே, அல்லது பழகிய கொஞ்ச நாளிலேயே அவனைப்பற்றி எடை போட்டு விடுவாள். ஆனால் 5 வருடங்கள் பழகியும்  தன் கணவனின் நண்பனே எதிரியாகப்போன ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த  சம்பவம் இது..

சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் டீம் லீடராகப்பணி ஆற்றும் அந்தப்பெண்  பெயர் மாளவிகா .வளசரவாக்கத்தில் அபார்ட்மெண்ட்டில் குடி இருக்கிறார்.. சொந்த வீடுதான். அவர் வீட்டுக்கு அருகில் முபாரக் என்பவனும் குடி இருக்கிறான்.மாளவிகாவின் கணவனின் நண்பன் அவன் என்பதால் 5 வருடங்களாக சாதாரணமாக,சிநேகமாகப்பழகி இருக்கிறார். மாளவிகாவின் கணவன் பெயர் சாந்தனு

முபாரக் ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் செய்பவன்.வசதி படைத்தவன்.மாளவிகா லேட்டாக ஆஃபீஸ் கிளம்பும்போது, ஷாப்பிங் போகும்போது தனது பைக்கில் மாளவிகாவை டிராப் செய்வான். சகஜமாக பழகி வருவான்.

மாளவிகா இப்போது 2 மாத கர்ப்பம்.இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உண்டு .பையன் வயது 8.இப்போது கர்ப்பமாக இருக்கும் மாளவிகாவைப்பார்க்க அவரது பள்ளித்தோழி அறிவுமதி திருத்தணியிலிருந்து வருகிறார்,

அறிவுமதி வந்ததும் அவரை வரவேற்ற மாளவிகா கொஞ்ச நேரம் பேசி விட்டு குளிக்க செல்கிறார்.மாளவிகாவின் கணவர் ஊரில் இல்லை. அவர் ஆஃபீஸ் விஷயமாக 3 நாள் டூர் சென்றுள்ளார்.அறிவு மதி சமையல்கட்டில் போய் டீ போடுகிறார்.

அப்போது காலிங்க் பெல் அடிக்கிறது. கதவைத்திறந்தால் முபாரக்.அறிவுமதி முபாரக்கிடம் நீங்க யாரு? என கேட்க அவன் தன்னை அறிமுகம் செய்திருக்கிறான்.அவன் பெயரை சொன்னதும் ஏற்கனவே அவனைப்பற்றி நல்ல விதமாக தோழி கூறி இருந்தபடியால் அவனை உள்ளே வரச்சொல்லி  சோபாவில் அமரச்சொல்லி இருக்கிறார் அறிவு மதி.

அவனுக்கும் டீ போட சமையல்கட்டுக்குள் போனார். அவன் பின்னாலேயே சமையல்கட்டுக்கு வந்து அவருடன் பேச்சுக்குடுத்திருக்கிறான்..

நீங்க எந்த ஊரு?என்ன பண்றீங்க? இப்படி ..

டீயைக்கொடுத்து விட்டு அறிவுமதி சமையல் வேலையை பார்க்கிறாள்.முபாரக்கின் பார்வை சரி இல்லை என்பதையும் அவன் டபுள் மீனிங்கில் பேசுகிறான் என்பதையும் சட் என அறிவுமதி உணர்கிறார்.

சாம்ப்பிள்ஸ் ஆஃப் ஹிஸ் ஜொள் டயலாக்ஸ்

நீங்க போட்டுகுடுத்த டீ பிரமாதம். உங்க கையால விருந்து கிடச்சா இன்னும் நல்லாருக்கும், இதுக்காகவே உங்க ஊருக்கு வரனும் போல இருக்கு. உங்க கையால சமையல் சாப்பிட கொடுத்து வெச்சிருக்கனும். .

இதற்குள் குளிக்கப்போன மாளவிகா வெளியே வருகிறார்.. தீம் பார்க் டிக்கெட்ஸ்ஸை ரிசர்வ்டு செய்ததை முபாரக் இருவரின் டிக்கெட்ஸையும் தந்து விட்டு வெளியேறுகிறான்.

இப்போது அறிவுமதியின் மனதில் போராட்டம்.முபாரக் பற்றி தோழியிடம் சொல்லலாமா? வேணாமா? என .. 5 வருட நட்பை நாம் ஏன் கெடுக்க வேண்டும் என எதுவும் சொல்லாமல் விட்டு விடுகிறார்.

இப்போது இருவரும் தீம்ஸ்பார்க் போறாங்க. காலையிலிருந்து மதியம் வரை பல விளையாட்டுக்கள் விளையாடறாங்க.முபாரக்கும் அங்கே வர்றான்.

தண்ணீர் விளையாட்டுக்கள் விளையாடப்போறாங்க.. கடல் அலை வருமே அந்த விளையாட்டு. இங்கே அறிவுமதி மற்றும் மாளவிகாவின் கல்லூரித்தோழர்கள்  கண்ணன் மற்றும் அவர் மனைவி, வீணா மற்றும் அவர் கணவர் என  4 பேர்.

மாளவிகா தண்ணீரில் நீச்சல் அடித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்.அறிவுமதிக்கு நீச்சல் தெரியாது. அந்த மேட்டர் கண்ணன் மனைவிக்கு தெரியாது. அவர் விளையாட்டாக அறிவுமதியை தண்ணீரில் பிடித்து இழுத்திருக்கிறார் .அறிவுமதி தடுமாறி தண்ணீரில் விழுந்திருக்கிறார்.

காலையிலிருந்து  இது போன்ற ஒரு சந்தர்ப்பத்துக்குக்காத்திருந்த முபாரக் அறிவிமதியை காப்பாற்றும் போர்வையில் தொடக்கூடாத இடங்களில் தொட்டுத்தூக்கி இருக்கிறார்..அறிவுமதியின் முகமாற்றத்தைக்கண்ட கண்ணன் முபாரக்கை ஒரு முறை முறைத்து அவர் பிடியில் இருந்து அறிவுமதியை விடுவித்து காப்பாற்றி கரையில் அனுப்பி விட்டார்..

 

இந்த சம்பவம் எதுவும் மாளவிகாவுக்கு தெரியாது..வீடு திரும்பியதும் அறிவுமதி மூடு அவுட்டாக இருப்பதைப்பார்த்து மாளவிகா காரணம் கேட்டிருக்கிறார்.

 

பல முறை வற்புறுத்தலுக்குப்பிறகு அறிவுமதி காலையில் இருந்து நடந்த முபாரக்கின் டபுள் மினிங்க் பேச்சு ,பேடு டச் ஆகியவற்றை சொல்லி இருக்கிறார்.அதிர்ச்சி அடைந்த மாளவிகா “சரி என் கணவர் வந்ததும் இது பற்றி பேசுகிறேன் “ என அறிவு மதியை சமாதானப்படுத்தி இருக்கிறார்.

 

அடுத்த நாள் காலை அறிவுமதி தன் ஊருக்கு கிளம்பி விட்டார்.

மாளவிகாவின் கணவர் டூர் முடிந்து ஊருக்கு வர்றார். அவரிடம் மேட்டரை சொல்றார் மாளவிகா.சாந்தனுக்கு செம கோபம். முபாரக்கை கூப்பிட்டு லெஃப்ட் & ரைட் வாங்கி இருக்கிறார்..

முபாரக் தான் மாட்டி விடக்கூடாது என்பதற்காக பழியை அறிவுமதி மீது திருப்புகிறான். என் மேல எல்லாம் எந்த தப்பும் இல்ல. அவங்க தான் வேணும்னே என்னை உரசுனாங்க.. அதை கண்ணன் பார்த்துட்டதால பழியை என் மேல போடறாங்க. உன் மனைவி மட்டும் என்ன? எனக்காக பல முறை சிக்னல் கொடுத்தவ தானே?பைக்ல போறப்ப வேணும்னே என் மேல் பட்டவ தானே? என்னை குறை சொல்றே? என்று அபாண்டமாய் குற்றம் சாட்டி இருக்கிறான்.

சாந்தனு< “பைக்ல சீதையே டபுள்ஸ் வந்தாலும் மேலே படத்தான் செய்யும். கணவனின் நண்பன் என்பதற்காக உன்னிடம் சகஜமாக பழகியவளை குறை சொல்லாதே. இனி என் வீட்டுக்கு வராதே. நம்ம ஃபிரண்ட்ஷிப் இதோடு கட் என்று கூறி அவனை துரத்தி விட்டார்..

இந்த சம்பவம் முடிந்த பின் சாந்தனு அவர் ஆஃபீசுக்கு போய் விட்டார், மாளவிகா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.

காலிங்க் பெல் அடிக்கிறது. திறந்தால் முபாரக்.

வாசலில் முபாரக்கை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாளவிகா

”என்ன வேணும்?எதுவா இருந்தாலும் அவர் இருக்கும்போது வா. “

ஏய்.. உன் கிட்டே கொஞ்சம் பேசனும். கதவை திற

“ஏன்..? என் கிட்டே பேசற மேட்டரை அவர் இருக்கறப்ப பேச முடியாதா?”

வாக்குவாதம் முற்றுகிறது.. பக்கத்து வீட்டில் எட்டிப்பார்க்கிறார்கள்..தேவையற்ற சிக்கல் எதற்கு? என்று நினைத்த மாளவிகா கதவின் சேஃப்டி சங்கிலியை விடுவித்து அவனை உள்ளே அனுமதிக்கிறார்.

” ஏண்டி.. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா உன் புருஷன் கிட்டே என்னை போட்டுக்குடுப்பே..உன் புருஷன் பெரிய இவன் மாதிரி உன் ஃபிரண்டுக்கு சப்போர்ட் பண்றான்..?அவ அப்படி இருக்க மாட்டா அப்டின்னு சர்ட்டிஃபிகேட் தர்றான்? அவ்வளவு டீட்டெயிலா அவளைப்பற்றி அவனுக்கு எப்படி தெரியும்? அவளை அவன் வெச்சிருக்கானா?

”டேய். வார்த்தையை அளந்து பேசு. அவ என் கணவனுக்கு தங்கை மாதிரி …”

“அப்டின்னு நீ நினைக்கறே.. உன் புருஷன் என்ன நினைக்கறானோ?”

தன் தோழியை அன்புக்கணவனோடு சம்பந்தப்படுத்திப்பேசியதைக்கண்டு கொதிப்படைந்த மாளவிகா முபாரக்கை ஆவேசமாக வெளியே தள்ள  முயற்சிக்கிறார்.கோபம் அடைந்த முபாரக் மாளவிகா கர்ப்பவதி என்பதையும்,5 வருட சிநேகிதி என்பதையும், நண்பனின் மனைவி என்பதையும் மறந்து அவரை ஆவேசமாக பிடனியைப்பிடித்து தள்ளுகிறார்.. எதிர்பாராத அந்த தாக்குதலில் நிலை குலைந்த மாளவிகா வேகமாக டைனிங்க் டேபிள் மேல் போய் விழுகிறார்..

அவரது வயிற்றில் அடிபட்டதில் மயக்கம் அடைகிறார்.. உடனே பயந்து போன முபாரக் வேகமாக அறையை விட்டு வெளியேறுகிறான்.. உண்மையான மனித நேயம் உள்ளவனாக இருந்தால் அட்லீஸ்ட் யாருக்காவது தகவலாவது சொல்லி காப்பாற்றி இருக்கலாம்..

20 நிமிடம் மயக்க நிலையில் இருந்து தானாக எழுந்த மாளவிகா ரத்தப்போக்கு (BLEEDING)ஏற்பட்டிருப்பது கண்டு பதட்டம் அடைந்து தன் கணவருக்கு ஃபோன் செய்ய லைன் கிடைக்காததால் பின்  குடும்ப நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து நிலைமையை சொல்லி அழைத்தார்..

அவரால் நகரக்கூட முடியவைல்லை.. அரை மயக்கத்தில் அப்படியே கிடந்தார்.. மீண்டும் 25 நிமிடங்கள் கழித்தே வந்த குடும்ப நண்பர் அவரை ஆட்டோவில் ஹாஸ்பிடல் அழைத்து சென்றார்..

மாளவிகாவின் கணவருக்கு விபரம் தெரிவிக்கப்பட்டு ,அவர் பதறி அடித்துக்கொண்டு ஹாஸ்பிடல் ஓடி வந்தார்..

கர்ப்பப்பையின் வாய் கிழிந்து விட்டது என்றும் 2 நாட்கள் தையல் போட்டு பின் அசையாமல் கால்களை மட்டும் மேலே தூக்கிய நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது..

2 நாட்கள் நரக வேதனைக்குப்பிறகு கிட்டத்தட்ட அபார்ஷன் நிலை வரை சென்று  மீண்டு வந்தார். அதற்குப்பின் 27 நாட்கள் ஹாஸ்பிடல்ல் சிகிச்சை பெற்றார்..

முபாரக் மீது வழக்கு தொடரப்பட்டது.. அட்டெம்ப்ட்  ரேப் கேஸ் போடப்பட்டது..

தனிமையில் இருந்த பெண்ணிடம் தகராறு, கர்ப்பவதி ஆன பெண்ணிடம் கரு கலையும் விதம் தாக்கியது,கற்பழிப்பு முயற்சி என 3 பிரிவுகளில் கேஸ் போடப்பட்டது..

மாளவிகா மயக்க நிலையில் இருந்த போது கற்பழிப்பு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற சந்தேக அடிப்படையில் அப்படி ஒரு கேஸ் போடப்பட்டது..

ஆனால் மெடிக்கல் ரிப்போர்ட் கற்பழிப்போ , அதற்கான முயற்சிகளோ எதுவும் நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது..

முபாரக் ஹாஸ்பிடல் செலவு ரூ 3 லட்சம் கட்டி விட வேண்டும் எனவும் இனி மாளவிகா விஷயத்தில் தலையிடக்கூடாது எனவும் , ஏதாவது ஆபத்து வந்தால் அதற்கு முபாரக் தான் பொறுப்பு எனவும் போலீஸ் ஸ்டேஷனில் எழுதி வாங்கப்பட்டது..

கோர்ட்டில் கேஸ் நடந்தபோது முபாரக் வாக்குமூலம் ஒரு திடீர் திருப்பம் தந்தது. கள்ளக்காதல் அம்பலம் ஆனது

மாளவிகா வும்,  அவர் கணவரும், முபாரக்கும்  ஒரு முறை  ஊட்டி பொடானிக்கல் கார்டன் போய் இருந்தார்கள் .அப்போது மாளவிகாவின் கணவருக்கு  ஒரு ஃபோன். நெருங்கிய உறவினர்  சீரியஸ், ஹாஸ்பிடல் உடனே வரவும்  என.

கணவர் மாளவிகாவை விட்டு விட்டு முன்னால்  சென்னை கிளம்பி விட்டார். மாளவிகாவும் . முபாரக்கும் தனிமையில்.

ஊட்டி , குளிர் , தனிமை

முபாரக் மாளவிகாவை வசப்படுத்தி விட்டான்.

பின் அது தொடர்கதை ஆனது. கணவர் ஆஃபிசுக்குப்போனபின்  முபாரக்கை தன் அபார்ட்மெண்ட்டுக்கே வர வைத்து  ஜாலி கொண்டாட்டம் நடத்தி இருக்கிறார்

 

ஆசை 60 நாள்  மோகம் 30 நாள் பழமொழிக்கு ஏற்ப  முபாரக்  3 மாசம் கழித்து  மாளவிகா போர் அடிக்க ஆரம்பித்ததும்  மாளவிக்காவின்  தோழிகள் லிஸ்ட்டை ஆராய்ந்தான். மாளவிகாவின்  மொபைலில் இருந்து  பல ஃபோன் நெம்பர்கள்  உருவியதில்  அறிவுமதி  டார்கெட் செய்திருக்கிறார்.

திட்டமிட்டு  மாளவிகாவின் மறைமுக உதவியுடன்  முயற்சித்து தோல்வி அடைந்திருக்கிறான்  முபாரக்.

கோர்ட்டில்  2  வருட தண்டனைக்குப்பின்   தன் வீட்டுக்குப்போன முபாரக்  வீட்டின் வாசலில்  மாளவிகாவின் கணவர் செப்பலும் உள்ளே சிரிப்பு சத்தமும்  கொலுசு ஓசையும்  கேட்டு அதிர்ச்சியுடன் நின்றான்

நிறைவு பெற்றது.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

2 comments

  1. பி சண்முகவடிவு - Reply

    உண்மை சம்பவம் போல , ஆனா ஜிகினா சேர்க்காமல் இருக்கு. ராவா

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!