என் காதல் கண்மணி ….

0
(0)

பாகம்-1

“என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் …

எந்த இடம் அது எந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் ….”

மனசுக்குள் பாடினான் மதன் அவளை பார்த்ததும் ..

ஏனோ மனுசுக்குள் பசை போட்டு ஒட்டி கொண்டது  அவள் முகம் …

அன்று கல்லூரி சேர்க்கைக்கான முதல் நாள் ….

கடவுளே கணநேரத்தில் களவு போன என் இதயத்தை திருடி போனவள் , என் குரூப்பாக இருக்கணும்  என மனசுக்குள் கண்  மூடி வேண்டிக்கொண்டான் மதன் .

கண்ணை திறந்தாள் அவளை காணோம் , பதறி போய்  கண்களால்  அந்த ஆடிட்டோரியும் முழுவதுமாய்  தேடினான் மதன் .

ஹலோ , என் பெயர் சர்வேஷ்  கோவில்பட்டி சொந்த ஊர் , நீங்க ?. என்றான் அருகில் வந்தவன்

ஹலோ , என் பெயர் மதன் , திருச்சி  சொந்த ஊர்  , நீங்க எந்த குரூப் எடுத்து இருக்கீங்க ? என கேட்க

சர்வேஷ் அவன் தேர்ந்தெடுத்த குரூப்பை சொன்னான் , ஓ நீங்களும் அந்த குரூப் தானா?.நானும் அந்த குரூப் தான்  என்றான் சந்தோசமாய் மதன் ..

அது சரி … நீங்க யாரையோ தேடிகிட்டு இர்ருக்கறமாதிரி தெரியுது … யாரை தேடுறீங்க ? என்றான் சர்வேஷ்

அது .அது .. அங்க ஒரு பொண்ணு ப்ளூ கலர் சுடிதார் போட்டுஇருந்திச்சில்ல … அந்த பொண்ணைத்தான் தேடுறேன்  என்றான் மதன்

ஓ … அந்த குஷ்பூ ஓட ஜூனியர் வெர்சன் மாதிரி இருந்துச்சே அந்த பொண்ணா ?.. அவுங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களா ? ஆர்வமாய் சர்வேஷ் கேட்க்க

இல்லைங்க … பாத்த உடனே மனசுக்கு புடிச்சு போச்சு …அவள் எனக்காக பிறந்தவள் …என்னை ஆள பிறந்தவள் .. அப்படின்னு  ஒரு பீல் என்றான் மதன் .

பாத்து மச்சி .. ஹெவி காம்பெடிஷன் இருக்கும் போல … ஏகப்பட்ட பேர் கண்ணு பூரா அந்த பொண்ணு மேலதான்

மச்சி  இந்த வார்த்தை ஏனோ சர்வேஷ்சை மதனுக்கு நெருக்கம் ஆக்கியது …

நண்பா .. சுற்றும் வரை பூமி , சுடும் வரை நெருப்பு… போராடும் வரை மனிதன் , நீ மனிதன் … அப்படினு கவிப்பேரரசு வைரமுத்து சொல்லி இருக்காரு … நான் மூணு வருஷம் போராடுவேன் நண்பா .. எனக்கு நம்பிக்கை இருக்கு ..

பேர் என்னனு தெரியாது , ஊர் என்னனு தெரியாது ? என்ன குரூப்ன்னு தெரியாது ?. ஏன் என்ன சாதி , அந்த பொண்ணுக்கு ஏற்கனவே ஆள் இருக்கா ?. எதுவும் தெரியாமல்  எப்படி மச்சி?

நண்பா .. காதல் அது இனம் ,மொழி ,சாதி ,  அது  அனைத்தையும் தாண்டின ஒரு சக்தி .

 நம் மேல் நம்மை நம்பிக்கை கொள்ளவைக்கும் ஒரு அற்புதம் .

அனைத்தும் நாம் நினைத்தது போல் நடக்கும் என நம்ப வைக்கும்  நல்நண்பன் .

சமூகம் குறை சொல்லும் அனைத்தையும் துவம்சம் செய்து , தூக்கி எறிய வைக்கும் போராளி .

போட்டிக்கு எவன் வந்தாலும் என்னிடம் தோற்பான் , என மமதை கொள்ள வைக்கும் போதை .

ஐயோ , யப்பா தெரியாம சொல்லிட்டேன் ஆள விடுப்பா சாமி , நீங்க போராடுங்க பாஸ் .

இருக்கப்போற மூணு வருஷம் இல்ல , முப்பது வருஷம் கூட நீ போராடு .

எல்லாம் சரி பிளஸ் டூ ல மார்க் என்ன ? என்றான் சர்வேஸ்

854 என்றான் மதன் .

ஏன்டா வைரமுத்து மாதிரி கவிதை எழுதுறத விட்டுட்டு ஓழுங்க பிடிச்சிருந்தா , நல்ல காலேஜ் ல இன்ஜினியரிங் படிச்சிருக்கலாம்ல . அத விட்டுட்டு கவிதை எழுதி தானே இந்த காலேஜ்க்கு வந்துருக்கிற . இதுக்கு அப்புறமும் உனக்கு கவிதை காதல் எல்லாம் தேவையா என்று சற்றே கடிந்து கொண்டான் சர்வேஷ் .

அப்புறம் நண்பா நீங்க என்ன மார்க் ?

951 என்றான் சர்வேஷ் .

ஏன்டா ?.. நான்தான் கவிதை எழுதி மார்க் எடுக்காம போனேன் , இது எதுவும் செய்யாத நீ ஏன்டா மார்க் எடுக்கல?

ஹலோ … எங்க ஊரு ஸ்கூல்ல நான் தான் முதல் மார்க் .. எங்க ஸ்டாண்டர்ட் அவ்வளவுதான்  என்றான் சர்வேஷ்

நானும் நல்லா தான் படிப்பேன் , படிச்சேன்  ஆனா  எங்க தப்பாச்சுன்னு தெரியல ?.  ஹ்ம் சரி உன்கூட யாரு வந்துருக்காங்க  என்றான் மதன்

பேச்சு வேறு திசை திரும்பினாலும், மதனின் கண்கள் மட்டும்  அவள் இருக்கும் திசை நோக்கி அலைந்தது …

( தொடரும் …)

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!