ஆன்மாவின் வலி

Madhu Niki | 05 Nov 2025

ஆன்மாவின் வலி

நெடிதுயர்ந்து நிற்கும் என் துயரங்களை காணாதோ இந்த இரவுகள்..

எதற்கும் தயங்காமல் விரைந்து 
எங்கு தான் செல்கிறது!!
விழிகளின் வழி வடியும் கண்ணீர்
என் வலிகளின் கட்டுகடங்கா ஓலங்கள் தான்…
அதையும் சீண்டாமல் செல்கிறதே இந்நாட்கள்..
இவை எல்லாம் எனக்கென வடித்த துயரங்களா?
பிறர் பாவம் என என் தலையில்
சுமத்திய இணைப்புகளோ ?
ஏதும் அறியவில்லை தான்..
எனினும் ஒன்று மட்டும் தெரிகிறது..
இவை எல்லாம் கட்டுக்கடங்காமல் எனக்குள் வலிக்கிறது!!!

    No comments yet.